பக்கம்:பெருஞ்சொல்லகராதி.pdf/544

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அலவலைமை

சிசு

அலவலைமை (அலைவலைமை) பெ. மனத்தில் தோன்றியதை ஆராயாமல் செய்யும் தன்மை. பாலன் தன்னை அலவலைமை தவிர்த்த அழகன் (பெரியாழ். தி. 4, 3, 5).

பெ. உண்பதில் ஆத்திரம். (நாஞ்.வ.)

அலவறை பெ.

அலவன்1 பெ. 1. நண்டு. அலவன் தாக்கத்துறை இறாப் பிறழும் (ஐங். 179). அலவன் ஆடிய வடு வடு நுண் அயிர் (பதிற்றுப். 51,8). அளை வாழ் அலவன் (பொருந. 9). பொறிமாண் அலவனும் நந்தும் போற்றாது (சிலப். 10, 91). அலவன் கண் ஏய்ப்ப அரும்பீன்று (கார்நாற்.39). அலவன் வள்ளுகிர் உற்றென (பெருங். 1,58,100). ஆடும் அலவனை அன்னம் அருள்செய நீடியநெய்தலங் கானல் (சீவக. 516). கொடிறு முரித்து அன்ன கூன் தாள் அலவன் (கபிலதேவ. சிவ. இரட். 28). சேற்று அலவன் கருவுயிர்க்கும் (பெரியபு. 18, 2). செவ்வரால் கவ்விநின்ற சீர் அலவனோ முடிந்தாள் (கூளப்ப. காதல் 203). 2. ஆண் நண்டு. அலவன் ஆண் ஞெண்டு ஆகும் என்ப (பிங். 2647). அளைப்பிரிந்த அலவன் போய்ப்புகுதந்த காலமும் கண்டு தன் பெடைதிளைக்கும் (தேவா. 4,20, 9). அலவன் பேட்டு டன் அமபுயச் சேக்கைமேல் (கச்சி. காஞ்சி. இருபத். 150).3. கடகராசி. அளைபுகும் அரவினோடு அல வன் வாழ்வுற இளையவற்பயந்தனள் (கம்பரா. 1,5, 105). 4. கடகராசியாகிய ஆடி மாதம். கவைத்தாள்

அலவன் உதிப்பின் மூழ்கின் இருபதினாயிரம் மடங் காம் (திருவிளை. பு. தீர்த்த. 30).

அலவன்? பெ. பூனை. பூசை அலவன் விடருகம்

பூஞை (பிங். 2518).

...

அலவன்" பெ. (அல் + அவன்) சந்திரன். அலவன் கலாநிதி சோமன் தன்பெயர் (பிங். 225). அம்பு அலவன் கொன்றை மாலிகை ஆத்தி வனைந்த அம்பலவன் (கல்வளை அந். 30). நேயம் பலவா வம்பு அலவா குளிர் எனும் (தில்லை. யமக அந். 30).

அலவாங்கு பெ. கடப்பாரை. (இலங்.வ.)

அலவாங்கு' பெ. உயரத்தில் உள்ள தழை, காய் முதலி யன பறிக்க உதவும் அலக்கு. ஆட்டுக்குத் தழை யொடிக்க அலவாங்கைக் கையில் எடுத்துக் கொண்டு போனான் (வட்.வ.).

அலவாட்டு. இப. -பழக்கம். (வின்.)

41

4

அலறி

அலவாரி பெ. பேராசையுடையவன். (புதுவை வ.)

அலவான்

பெ. பல்லாங்குழி ஆட்டத்தில் ஒரு குழியில்

சேரும் காயகள். (செ.ப. அக.)

அலவு -தல் 5 வி. வருந்துதல். அன்பனைக் காணாது அலவும் என் நெஞ்சன்றே (சிலப். 18, 17).

அலவு 2- தல்

5 வி. சிந்துதல், சிதறுதல். அலவும் நுண்துளி அருவிநீர் (கம்பரா. 2, 8, 25). இலவண நீரைக் கார் முகந்து அதைக் கசடறத் தீங்கு அல வவே செய்யுமாறுபோல் (குமாரதே. பதிகம் 7).

அளவு பெ. மனத் தடுமாற்றம், வருத்தம். (செ.ப.

அக.)

அலவுறு-தல் 6 வி. 1. மனம் தடுமாறுதல், மனம் சுழலுதல். அலவுற்று எய்யா மையலை நீயும் வருந்துதி (குறிஞ்சிப். 7-8). அலவுற்றுக் குடிகூவ ஆறின்றிப் பொருள் வெஃகி (கலித். 10, 5). ஆதுல மாக்களும் அளவுற்று விளிப்ப (மணிமே. 4, 42).2. வருத்தமுறுதல், தளர்ச்சியடைதல். அருவியாடியும் சுனைகுடைந்தும் அலவுற்று வருவேம் முன் (சிலப்.

24, 2).

அலவை1 பெ. விடாது பிதற்றுபவள். மாய் அலவை சொற்கொண்டு (திருவாய். 4, 6, 4).

அலவை' பெ. கணவனுக்குத் தெரியாமல் பிறனுடன் உறவாடும் கூடாவொழுக்கம். அவ மறைந் தொழுகும் அலவைப் பெண்டிர் (சிலப். 5, 129 அரும்.பா.பே.).

அலவை பெ. அல்லவை. (த.த. அக.)

அலற்று - தல் 5 வி. இடைவிடாதும் முறையின்றியும் பேசுதல். அயர்ப்பிலன் அலற்றுவன் தழுவுவன் அமர்ந்தே (திருவாய். 1,3,10).

அலறல் பெ. துன்பத்தையும் அச்சத்தையும் உணர்த் தும் பெருங்கூக்குரல். அலறல் .. உரப்பல் ... திரட் டோசையாகும் (பிங். 1443). கொலை நடந்தபோது அலறல் கேட்டது (பே.வ.).

அலறி பெ.

நாகணம் என்னும் மணமுள்ள பண்டம்.

(செ. ப. அக. அனு.)