பக்கம்:பெருஞ்சொல்லகராதி.pdf/545

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அலறு-தல்

அடி

அலறு-தல் (அரறுதல்) 5 வி. 1. (அச்சம் பசி முதலியவற்றால் உரத்து) ஒலித்தல், கத்துதல். பால் இல் குழவி அலறவும் (புறநா. 44, 6). அத்தம் செல் வோர் அலறத்தாக்கி (பெரும்பாண். 39). பத்தோர் வாயான் வரைக்கீழ் அலற (தேவா. 2, 63, 8). அணிக் கட்புறவின் ஐம்பாற் சேவல் எரிவளை புகையிடை இறகு விரித்து அலற (பெருங். 1, 43, 190). அங்கு ஓர் கரி அலற மருப்பினை ஒசித்து (நாச்சி. தி. 1, 10). போர் ஆனை பொய்கை வாய்க் கோட்பட்டு நின்று அலறி (இயற்றிய 49). பூதலம் அதனில் புரண்டு வீழ்ந்து அலறியும் (திருவாச. 2, 134). யுண்டான் தளர்ந்து அலறி வீழ்தலும் (கம்பரா. 4, 14,8). அபயம் அபயம் என அலற (கலிங். 58). திறல் வேந்தர் அலற (ஏரெழு.35). மேல் விழுந்து அலறியார்க்கும் (திருச்சுழியல் பு. பாண்டியன். 13). 2. (சங்கு முதலியன) மிக்கொலித்தல். இறா எறி. யோதம் அலற இரைக்கும் (கைந். 58). இன்னீர் வெள்வளை அலறும் (பெருங். 1,38,131). சீரின் முழங்கு முரசும் அலறும் சிறுவெண் சங்கும் (சீவக. 2195). வால் வளை அலற (செ. பாகவத.3,8,7).3. (பேய் முதலியன) கதறுதல். பேய் தங்கி அலறி உலறுகாட்டில் (காரை. பதிகம் 1, 1). கூகை அலறும் மயானத்தில் (தேவா. 1,67, 4). 4. வருந்துதல். கரந்தை அலறக் கவர்ந்த இன நிரைகள் (சிலப். 12, 16). புரிவளை அலறிப் பூசலிட்டீன்ற பொழிகதிர் நித்திலம் (சீவக. 2103).

அலறு 2 - தல் 5வி. விரிதல். அலறு தலையோமை

(ஐங்.321).

அலறுசன்னி பெ.

சன்னிநோய் வகை, அவமிருத்து

அலறு சன்னியோடின்னல் வெம்பிணியா (கடம்ப

4.602).

அலறுவி-த்தல் 11 வி. கதறச் செய்தல். அரக்கன் ஆர்த்தவாய் அலறுவிப்பார் (தேவா. 4,

தன்னை

56, 10).

அலன் பெ. கலப்பைப் படையுடையவன். இடவல குட அல (பரிபா. 3, 83 பகைவரைக் கொல்லுதற்கு எடுத்த அலப் படையினையும் உடையோய்-பரிமே.).

அலன்றல் பெ. சாவு. (ராட். அக.)

அலாக்கு1 பெ. (பிறவற்றினின்று பிரித்து நிற்பது) தனித்தது. (பே.வ.)

41

15

அலாக்கு2 பெ. கெடுதி. (ராட். அக.)

அலாக்கு' பெ.

அலாயிதா1

முழுமை. வீரன் யானையை அலாக்

காகத் தூக்கியெறிந்தான் (பே.வ.)

அலாகம் பெ. எருக்கு. (மரஇன. தொ.)

அலாடம் பெ. கஞ்சா. (முன்.)

அலாதசக்கரம் பெ. கொள்ளியைச் சுழற்றுதலில் தோன் றும் வட்டமான எரிவடிவு. (வட்.வ.)

அலாதம் பெ. 1. கடைக்கொள்ளி. அலாதமும் இரா தமும் ஞெகிழியும் கடைக்கொள்ளி (பிங். 695). மரம் சுட்ட கரி. அலாதம் மரஞ்சுடு கரி குறைக் கொள்ளி (நாநார்த்த. 853).

2.

அலாதி பெ. தனியானது. அவன் போக்கே அலாதி

(பே.வ.)

அலாதி' பெ. (அல்+ஆதி) மெய்யெழுத்தை முதலாக வுடையது. மெய்ம்முதல் அலாதி எனவும் (பிர.வி.

46 உரை).

அலாது1 பெ. தனியானது. (செ.ப.அக.)

அலாது' இ. சொ. அல்லாமல், அன்றி. தானலாது உலகமில்லை (தேவா. 4, 40, 1). நின் கழலிணை அலாது இலேன் (திருவாச. 5, 72).

அலாபத்திரம் பெ. இணையா வினைக்கை.

இனி

அவற்றுள் இணையா வினைக்கை முப்பத்து மூன்று வகைப்படும்; அவை பதாகை திரிபதாகை...அலா பத்திரம் ... வலம்புரி என (சிலப். 3,18 அடியார்க்.).

அலாபதம் பெ. இலாமிச்சை. (மலை அக.)

அலாபம்1 பெ. இலாபமின்மை. (செ.ப.அக.)

அலாபம்2 பெ. தீது. அந்தராயம் தீங்கு அலாபம்... தீதாம் (திவா. 1644).

அலாபு (அலாவு) பெ. சுரை. தும்பியும் அலாபும் சுரையாகும்மே (பிங்.2931).

அலாபொருகம் பெ.

கப்பற்கடுக்காய். (மரஇன. தொ.)

அலாயிதா1 பெ. தனி, (செ.ப. அக.)