பக்கம்:பெருஞ்சொல்லகராதி.pdf/547

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அலியன்குறிஞ்சி

அலியன் குறிஞ்சி பெ. காஞ்சொறிக்கொடி. (மரஇன. தொ.)

அலியாநிலை பெ. (அலி + ஆம் + நிலை) அலியொத்த நிலை. அலியா நிலை நிற்கும் ஐயன் ஐயாறன் (தேவா. 4,92,20).

அலியெழுத்து பெ. 1. ஆய்த எழுத்து. (வெண்பாப். மொழி. 7 உரை). 2. மெய்யெழுத்து. மெய்யெழுத்துப் பதி னெட்டும் அலியெழுத்தாம் (பிங்.1360 ப. உரை).

அலீகன்

பெ. தலை. அலீகன் இற அற்றுழியும் உடம்பு ஆடுதலின் அட்டையாடல் எனவும் (தொல். பொ. 71 நச்.).

அலீசா பெ. படகு வலிக்குந் தண்டு. (வின்.)

அலீசா' பெ. ஐந்து கச நீளமுள்ளதும் சிற்றலை போன்ற கரை அமைப்பை இரு மருங்கிலும் உடையதும் ஆகிய பட்டாடை. (சங். அக.)

அலுத்தல் 11

வி.சோர்தல், வெறுத்தல். நாளும் நில்லா உயிரோம்பு நீதனேன் நான் அலுத்தேன் (தேவா. 6.47, 4). அம்மியிலே அரைத்து அலுத் துப் போகலையா (மலைய. ப.49). நாளும் கஞ்சி குடித்து அலுத்துப் போயிற்று (பே.வ.).

அலுக்கு பெ. இசுலாமியப் பெண்டிர் காதில் அணியும் தங்க வளையம். (ரா. வட். அக.ப.324)

அலுக்கு 2 - தல் 5 வி. சிறிது அசைத்தல். எழுதும் பொழுது பேனாவை அலுக்கிவிட்டான் (பே.வ.).

அலுக்கு 3-தல் 5 வி. பாடும்போது குரலை இனிமையாக உருட்டுதல். இசையரங்கில் பாடகர் நன்றாய் அலுக்கிப்பாடுகிறார் (முன்.).

அலுக்கு-தல் 5 வி. பிலுக்குப் பண்ணுதல். (வின்.)

அலுக்குத்து பெ. இசுலாமியப் பெண்டிர் அணியும் காதணி. (சங். அக.)

அலுக்குலை-தல் 4 வி. சீர்குலைதல். (வின்.)

அலுங்கு-தல் 5 வி. சிறிது அசைதல். காய் வைத்து ஆடும் விளையாட்டில் கைபட்டுக் காய் அலுங்கிற்று (பே.வ.).

அலுங்கு பெ. மணிமுடியென்னும் மகுட வகையிற் செதிள் போன்ற மலரணி உறுப்பு. (சிற். செந்.ப.

87-88).

பெ. சொ.அ. 1-27

41

17

அலுசிலும்பல் பெ. குழம்பல். (யாழ். அக.)

அலை'-தல்

அலுத்தன் பெ. (அ+லுத்தன்) ஆசையற்றவன். இக பரம் இரண்டும் வேண்டாதிருப்பவன் அலுத்தன் என்றும் (மச்சபு. உத்தர. 23, 24).

அலுப்தசத்தி பெ. பேரருள் உடைமை. (செ. ப. அக.

அனு.)

அலுப்பு பெ. களைப்பு, சோர்வு.

அலுப்பில்லாமல் (நாஞ். மரு. மான். 9,

அலுப்பு சலிப்பில்லாமல்

(பே.வ.).

அல்லும் பகலும்

245).

வேலை செய்தான்

அலுவல் பெ. பணி, வேலை. சமயம் இதுவென்று அலுவல் இட்டு அழைக்கும் (மீனா. பிள். 72).

அலுவல்பார்-த்தல்

தல். (இலங்.வ.)

11வி. செல்வாக்கைப் பயன்படுத்து

அலுவலகம் பெ. பணி செய்யும் இடம். அவர் அரசு அலுவலகம் ஒன்றில் பணிசெய்கிறார் (அலுவலக வ.).

அலுவலர் பெ. பணியாளர், அதிகாரி. (முன்.)

அலுவலுவெனல் பெ. நீண்ட நேரம் பேசும் அலப்பற் குறிப்பு. (வின்.)

அலுவீகம் (அலூகம்) பெ. வில்வம். (மலை அக.) (பச்சிலை. அக.)

அலூகம் (அலுவீகம்) பெ.வில்வம்.

அலூரமாமுகம் பெ. புல். (முன்.)

அலேகம் பெ. கைச்சுவடியிலுள்ள வெற்றேடு. அலே கத்தின் மேலே வைத்திருக்கின்ற சிவாகமங்கள் எழுதிய திருமுறை (சிவதரு. 2,22). பெட்டி எடுத்தி அலேகந்தனைக் கொணர்ந்தே அரந்தை அகல் வான் செல்லுதி (ஞான. உபதேசகா. 1224).

அலேபகன் பெ. ஆன்மாவைப் பாவம் பற்றாதென்னும் கொள்கையினன். (சங். சூரி. 8)

அலை 1-தல் 4 வி. 1. அசைதல். அலை நீர்த்தாழை அன்னம் பூப்பவும் (சிறுபாண். 146). அலை திரைப் பௌவத்து (பெருங்.2,3,51). அலையும் பெரு வெள்ளத்தன்று மிதந்த இத்தோணிபுரம் (தேவா. 4,82,6). அளகக்காடு குலைந்தலைய (கலிங். 62). அலைந்தன நாகம் (கந்தபு. 4, 3, 50). ஒவ்வாது அலைகின்ற ஓதியாள் (மதுரைச். உலா 141).

கானக்