பக்கம்:பெருஞ்சொல்லகராதி.pdf/548

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அலை'-த்தல்

குளவி அலையவே மது பானக் குளவி கலையவே (முக்கூடற். 40). 2. திரிதல். மிலைத்து அலைந் தேனை விடுதி கண்டாய் (திருவாச. 6, 40). புசிப் புக்கு அலைந்திடல் (தாயுமா. 7, 5). அடித்தலம் சேப்பப் பன்னாள் அலைந்தனன் (திருச்சுழியல் பு. பாண்டியன். 12). 3. வருந்துதல். சிறு நோயால் நலிவுண்டு உள்ளம் அலையாதே (தேவா. 6,62,8). பறக்கின்றோம் பசிக்கு அலைந்து (கலிங். 217). வஞ்சம் புரிவேந்தர் மண்டலத்துள் வாழ்வோர்தம் நெஞ்சம் போல் நின்றலையும் நேரிடையாள் (மது ரைச். உலா 299). த(ன்)னம் அலை புன் காடிக்கு அலைபவரே (தில்லை. யமக அந். 44) 4. தள்ளாடு தல், நடுங்குதல். ஆர் உயிர் அழுங்கி அலையா பாவை அன்னாள்நிலை உணர்ந்து (கம்பரா.3,1, 40 பா . பே.).

அலை-த்தல் 11 வி.

1.அசைத்தல், அலையச் செய் தல். கோடல் நீடிதழ்க்கண்ணி நீர் அலைகலாவ (நெடுநல். 6). விரல் அலை நறும்பிழி ... பெறுகுவிர் (பெரும்பாண்.281). அகல் இலை ... பெருங்களிற்றுச் செவியின் அலைக்கும் (அகநா. 186,6). பொருது அலைத்து இடித்து (திருவாச. 3,85).

தோயும் திரைகள்

துஞ்சும் வெள்ளை

...

...

கரை

...

அலைப்ப கமலப்பள்ளி அன்னம் (சீவக. 930). ஏழ் பொழிலையும் ஒருங்கு அலைத்து (மீனா. பிள். 56). கொலைத்தலைய சுடர்வாளி கோப்புண்டு கிடந் தது கால் அலைத்து அலைய வீழ்ந்து ... உலப்ப (திருவிளை. பு.25,8). ஆடிப் பாடி நாற்று முடியை அலைத்துக் குலைத்து நடச்செய்தே (முக்கூடற்.129). 2. இழுத்தல். உற்றுடன்று அழுத கண்ணீர் கால் அலைத்து ஒழுகிற்றன்றே (சீவக. 2096). ஆற்றில் கிடந்தங்கு அலைப்ப அலைப்புண்டு அசைந்த தொக்கும் தூமதியே (தேவா. 4,85,5). 3. உருட்டுதல். கள்தேறல் கல் அலைத்து ஒழுகு மன்னே (புறநா. 115, 4). கல் அலைத்து இழிதரும் கடுவரல் கான்யாற்று (நற். 7,3). கார் மணந்த கான்யாறு கல் அலைத்து இழிந்து ஒலிக்கும் (சூளா. 797). 4. வீழ்த்தல். மேற்சேரிக் கோழி அலைத் தது (தொல். சொல். 60 சேனா.). 5. (ஓர் அமைப் பைக்) குலைத்தல், நெகிழச் செய்தல். ஒள் பூங் குவளை அரும்பு அலைத்து இயற்றிய (அகநா.180, 5-6). சங்கு வந்து அலைக்கும் தடங்கானல் (தேவா. 5,9,8).நீடிய பேரன்பு உரு உள் அலைப்ப நேர் நின்று (பெரியபு.28,546). 6. உதிர்த்தல். (கம்பரா. 6,15, 66). எயிறு அலைத்த கரதலம் வருடுதல். வெண்டலைப் புணரி நின்மான் குளம்பு அலைப்ப (புறநா.31,14).ஒண்பூம் பிண்டி ஒரு காது செரீஇ அந்தளிர்க்குவவு மொய்ம்பு அலைப்ப

7.

4

18

அலை

(குறிஞ்சிப். 119-120). கடல் ஓதம் கால் அலைப்ப! (இயற். முதல்திருவந். 16). 8. வழிதல். கள் அலைத்த கவுள் கருமேதி (சூளா. 27). 9. அலைமோதுதல். பெருகி அலைக்கின்ற ஆறே (தேவா. 6,56,8). அலைக்கும் ஆழி அடங்கிட அங்கையால் (கம்பரா.

3, 5, 75).

...

அலை -த்தல் 11 வி. 1. அடித்தல். தண்ணுமைக் கண்ணின் அலைஇயர் தன்வயிறே (அகநா. 106,13). செவ்வரிப் பறையின் ... எழுதிய ... குரீஇப் போலக் கோல் கொண்டு அலைப்பப் படீஇயர் (நற்.58, 3-4). ஊதையஞ் சேர்ப்பனை அலைப்பேன் போல வும் (கலித். 128, 19). அன்னையும் கோல் கொண்டலைக்கும் (முத்தொள். 94). அலைத்த வயிற்றினராய் அழுதிட்டார் (சீவக. 424). அரக்கர் தோகையர் வயிறு அலைத்து இரங்கி ஏங்கினார் (கம்பரா. 3, 7, 26). அடுத்த மடவார் வயிறு அலைத் தனர் இரங்க (சிவஞா. காஞ்சி. நாட்டுப். 28). 2. வருத்துதல். ஆர் எயில் அலைத்த கல்கால் கவணை (பதிற்றுப். 88,18). இன்னா வாடையும் அலைக்கும் (ஐங்.460). வேந்தலைக்கும் கொல்குறும்பு (குறள். 735). வயிறு காய் பெரும் பசி அலைத்தற்கு இரங்கி (மணிமே. 11,110). அலைத்த செங்கண் (மணிமே.11,110). விடை ஏறவல்லானை (தேவா. 7, 57, 1). ஆறலை. இளையரை ஆண்மை எள்ளி (பெருங். 1,55,86). அறைவாய்க் கடல்போல் அகன் காமம் அலைப்ப நின்றாள் (சீவக. 1963). கணையும் வில்லும் வாரிக் கொண்டலைக்கும் (கம்பரா. 1, 1, 14). குடியலைத்து இரந்து வெங்கோலொடு நின்ற (வெற்றிவே. 66). நாய் அலைக்கும் நரகம் புகுவரால் (செ.பாகவத. 5, 8, 14). நெஞ்சிற் பயம் கிடந்தலைப்ப (கச்சி. காஞ்சி. திருக்கண். 271). 3. கெடுத்தல். அடியவர் ஆவி அலைத்தானே (கந்தபு. 4,8,210)

அலை + - த்தல் 11 வி. பூசுதல். நீறு அலைத்த செம் மேனியன் (தேவா. 5,81).

அலை'-த்தல் 11வி. கவர்தல். வெளவுதல். கூறு அலைத்த மலைமடந்தை கொழுநர் (தேவா. 6,

75, 3).

அலை6-த்தல் 11 வி. கடித்தல். எயிறு அலைத்து எழும் இதழ் அரக்கர் (கம்பரா. 5, 12,8).

அலை' பெ. 1. நீர் நிலைகளில் எழும் திரை. அலை ஆர்ப்ப (நற். 7, 4). அலைகடல் வெள்ளம் (பெருங். 3,20,75). அதிர் குரல் ஏறோடு அலை கடல் மாந்தி (திணைமொழி.28). அலையார் கடற்கரை