பக்கம்:பெருஞ்சொல்லகராதி.pdf/552

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அவ்வளவும்

2. போதிய அளவு. நீ வாங்கிவந்த பழம் அவ் வளவு நன்றாயில்லை (நாட்.வ.).

அவ்வளவும் வி. அ. கூறும் காலம்வரை. நீ அவ்வள வும் இப்பொழில் அகத்தே நில் (இறை.அக.18 உரை). அலையளவு சனம்பெறினும் அவ்வளவும் நில்லாத அகத்து வாழ்வே (அந்தோனி. அண். 4).

அவ்வா பெ. மனித குலத்தின் தாய். மருப்புக்கும் குழல் அவ்வாவை வல்லவன் பிறப்பித்தானே (சீறாப்பு. 1,4, 17).

அவ்வாய்' பெ. அழகய இடம். அவ்வாய் வளர்பிறை சூடி (பெரும்பாண்.412).

அவ்வாய்- இ. சொ. அவ்விடம். அவ்வாய் என்பது இடைச்சொல்வாய் ஆண்டென்னும் பொருள்பட நின்ற வழி (தொல். சொல். 68 சேனா.).

அவ்வாறு' பெ. அ. ஆறுஆறு. அப்பதினாயிரவர்க் கும் ஒவ்வொருத்திக்கு அவ்வாறாய் ஒப்பரிய அறு பதினாயிரம் குமரர்உளர் (திருவிளை. பு. 25, 4).

அவ்வாறு? வி. அ. 1. அப்படி. அரைசர் வார்த்தை அவ்வாறது நிற்கவே (சூளா. 119). அதனை அவ்வாறு கொள்ளாது (குறள். 1311 மணக்.). 2. உலகத்துத்தன்மை. அவ்வாறு நிற்ப (இறை. அக. 3 உரை). வனத்து அவ்வாறு பயில்கின்ற அருள்வாரி (பாரதம். 3, 3, 125).

அவ்வி-த்தல் 11 வி. 1. பொறாமை கொள்ளுதல். அவ்வித்து அழுக்காறு உடையானை (குறள். 167). 2. மனத்தைக் கோணச்செய்தல். அவ்வித்து அழுக காறு உரையாமை முன் இனிதே (இனி. நாற்.36).

அவ்விடம் வி. அ. அங்கு. அவ்விடத்து அவர் மறுகி அஞ்சி (கம்பரா. 4, 2, 3).

அவ்விதழ் பெ. (அ + இதழ்) அழகிய பூவிதழ். அவ் விதழ் அவிழ்பதங் கமழ (நெடுநல். 41).

அவ்விதை பெ. நேர்வாளம். (சங். அக.)

அவ்வியக்தம்! பெ. விளங்குமாறு காணப்படாதது. முக் குணங்களும் தோன்றாமல் நின்ற இடம் அவ்வியக் தம் (திருவால. கட். ப. 5).

அவ்வியக்தம் 2 பெ. நூற்றெட்டு உபநிடதங்களுள் ஒன்று. (அபி. சிந்.)

422

அவ்வியம் 3

அவ்வியக்தி பெ. ஒரு வால் நட்சத்திரம், தூமகேது. தூமகேதுவாய்... இருப்பன அவை அவீசி கூர்மி அவ்வியக்தி (தக்க. 457 ப. உரை).

...

...

அவ்வியத்தம்1 பெ. 1. மூலப்பிரகிருதி. ஆனவிரிவுறியா அவ்வியத்தம் (திருமந். 2155) 2.விளங்கக் காணப் படாதது. (செ.ப.அக.) 3. வான். வான் என்றது பரமாகாசமான அவ்வியத்தத்தை (தக்க. 408 உரை). 4. ஆன்மா. அவ்வியத்தம் ... ஆன்மா (நாநார்த்த.

928).

அவ்வியத்தம் 2 பெ.

கை, கால் முதலியவை வெளிப் படாமல் பீடத்தோடுகூடிய சிவலிங்கம். அவ்வியத்தம் பீடலிங்கம் (சைவ. நெறி பொது. 119).

அவ்வியத்தம் 3 பெ. ஒரு பேரெண். (சங். அக.)

அவ்வியத்தலக்கணை பெ. பார்வதி. குகை சருவசக்தி கலை யவ்வியத்தலக்கணை (கூர்மபு. பூருவ. 12, 23).

அவ்வியத்தலிங்கம் பெ. அருவத் திருமேனி.

12, 4 மறைஞா.)

1

அவ்வியத்தன் பெ. கடவுள். அவ்வியத்தன் யாமி பெற்றிடுமே (வேதா. 39).

அவ்வியத்தன் 2 பெ. அறிவில்லாதவன்.

...

(சி.சி.

...

அந்தரி

அவ்வியத்தன்

அறிவில்லான் என்ப (நாநார்த்த.928).

அவ்வியதம் பெ. ( மருத்.) ஓரிலைத்தாமரை. (குண. 1

ப. 123)

அவ்வியதா பெ. கடுக்காய். (மர இன. தொ.)

அவ்வியம் பெ. 1.பொறாமை. அவ்விய நெஞ்சத் தான் ஆக்கமும் (குறள். 169). அவ்விய நெஞ்ச மொடு அகல்வோன் ஆயிடை (மணிமே. 5,22). அவ்வியம் நீத்து உயர்ந்த மனத்து அருந்தவன் (கம்பரா. 1, 5, 62). 2. வஞ்சம். செழுங்கடை மழைக்கண் அவ்வியம் அறிந்தன (சிலப். 30, 12-13). 3. மனக்கோணல். அவ்வியம் அகன்று பொங்கும் அழல்படு வெகுளி நீக்கி (சீவக. 394).

அவ்வியம்' பெ. தேவர்க்கு இடும் பலி, அவி. அவ்விய

அளித்திடுமாறு

கவ்வியங்கள் அளித்திடுமாறு

பூருவ.19, 1).

அவ்வியம்' பெ.

சொற்றீர் (மச்சபு.

இடைச்சொல். வடமொழி அவ்

வியத்தைத் தமிழில் இடைச்சொல் என அமைக்க

(வீரசோ. 49 ப. உரை).