பக்கம்:பெருஞ்சொல்லகராதி.pdf/554

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அவகடம்

அவகடம் பெ. 1.வஞ்சகம். கழுத்திலே தாவடம், மனத்திலே அவகடம் (பழமொழி). திருடன் அவகட மாய் வந்து மோகனமாலைக்குத் தாலி கட்டினது செல்லாது (பிரதாப. ப. 238). 2. தீச்செயல். அற்ப மாங்குணத்தினாலே அவகடஞ் செய்வர் (நீதிசாரம்

19).

அவகதவாய் பெ. கீழ்க்காய் நெல்லி. (மூலி. அக.)

அவகதி! பெ. தாழ்ந்த நிலை. அவமாயதேவர் அவ கதியில் அழுந்தாமே (திருவாச. 11,4). அந்தரம் பெரி தேயாகும் அவகதி ஆயாமத்தான் (சிவதரு. 10,58).

அவகதி' பெ. அறிவு (செ.ப. அக. அனு.)

அவகாகி-த்தல் 11 வி. 1. உட்புகுதல். அவகாகித்துப் பிரியாதே நடையாடுவதாய் (திருவாய். 6, 1, 4 பன்.). 2. ஊன்றியறிதல். (சங். அக.)

அவகாசப்பெயர்ச்சி பெ. கடன் முதலியவற்றைத் தீர்க் கும் திறமை. (இலங்.வ.)

அவகாசம் 1 பெ. 1. பொழுது. உறையுள் வைகி அவகாசம் இல்லார்போல (திருக்காளத். பு. 17, 49). 2. ஓய்வு. இதைப் படிப்பதற்கு இப்போதுதான் அவகாசம் கிடைத்தது (பே.வ.) 3. காலக்கெடு. அவகாசத்தில் அவகாசத்தில் இந்நூலை இந்நூலை அச்சிட்டுக் கொடு (முன்.). 4. இடம். இந்த விசாரத்துக்கு அவகாசமேயில்லை (சி. சி. 6, 4 சிவாக்.).

ஆறுமாத

அவகாசம்' பெ. திறமை. கடனைத் தீர்க்க எனக்கு அவகாசமில்லை (வின்.). எள்ளத்தனையும்

இல்லை அவகாசம் (தெய்வச். விறலி. தூது 454).

அவகாசம்' பெ. உரிமை. சன்ம அவகாசம், பாட்ட அவகாசம் (செ. ப. அக. அனு.).

அவகாசமுறி பெ. பங்குபிரிப்பு ஆவணம், பாகபத்திரம்.

(செ.ப.அக.)

அவகாசி1 பெ. உரிமையாளன், சொந்தக்காரன். குழந் தைகளுக்கு அவகாசிகள் நிலையில் குடும்பச் சொத் தைக் கொடுக்கும்படி செய்தது (நாஞ். மரு. மான். முன்னுரை).

அவகாசி'-த்தல் 11 வி. காலம் தாழ்த்தல். கரை தல் அவகாசித்தலுமாம் (சிலப். 18, 26 அடியார்க்.) அவகாசிப்பித்தல் 11 வி. இடம்பெறச் செய்தல். (செ. ப. அக.)

424

அவகுண்டனம்'

அவகாயம் பெ. ஆகாயம். மருட்டியுண்ணும் திருவுடை யாய் அவகாயத்துத் தேரையடித் தெருட்டாய் (நீல. 504.).

அவகாரம்! பெ. அழைப்பு. அவகாரம்... அழைத்தல் (நாநார்த்த.909).

அவகாரம்' பெ. பறிக்கை. அவகாரம் பறித்தலுமாம் (முன்.).

அவகாரம்' பெ. செல்வம். அவகாரம் திரவியம்

(முன்.).

000

சூது. அவகாரம்

...

சூது (முன்.).

அவகாரம் பெ. அவகாரம் பெ. களவு. அவகாரம் ... களவு (முன்.). அவகாரம்' பெ.முதலை. அவகாரம் முதலை... (முன்.).

அவகாரன் 1 (முன். 917).

பெ. திருடன். அவகாரன் திருடன்

அவகாரன்' பெ. சூதாடுபவன். அவகாரன் ... சூதுக்

காரன் (முன்.).

அவகாலம் பெ.1.

அசுபகாலம். (சங். அக.) 2. பஞ்சம், பேதி போன்றவை நிகழும் தீய காலம். காலமே அவகாலமே (இராமநா. 4,6 திபதை 4).

அவகிருத்தியம் பெ. கெட்ட செய்கை. (செ. ப. அக.)

அவகீதம் பெ. 1. பலர் பழித்தது. (நாநார்த்த.896)

2. வசைப்பாட்டு. (முன்.)

அவகீர்த்தி (அகீர்த்தி, அபகீர்த்தி) பெ. புகழ்க்கேடு, இகழ்ச்சி. அவகீர்த்தி உலகினிற்ப (மச்சபு. உத்தர.

23, 14).

அவகீரணம் பெ. சிதறுகை. மாசு அவகீரணம் தனை யும் மேவினர் தொழவினை நாசமே (அகோர வேதார. பு. மேன்மை 85).

அவகுஞ்சனம் பெ. வளைவு. செ. ப. அக. அனு.)

அவகுண்டனம்1 பெ. மூடுகை. பத்திசேர் கவசத்து அவ குண்டனம் பண்ணி (கடம்ப. பு. 659). உரைசெய் சந்நிதானமொடு ... அவகுண்டனமும் செய்து (மாயூ ரப்பு. தேவி. 5).

அவகுண்டனம்' பெ. முகத்தை மறைக்குந்துணி. (த. த.

அக.)