பக்கம்:பெருஞ்சொல்லகராதி.pdf/559

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அவதி3

ஆயது ஓர் அவதியின் கண் அருக்கன் சேய் அரசை நோக்கி (கம்பரா. 4, 3, 23). போனவர்கள் வரும் அவதி போயினதே (கம்பன் பிள். பாயி. 6). 3. தவணை, வாயிதா. அவதி மாற்றினேன் (நாஞ். மரு. மான். 9, 470). விடுதலை ஈகென ... ஓர் அவதிதந்து (காந்தி காதை. 4, 12, 25). 4. எண்ணிக்கை. ஆயிரம் ஆயிரம் அவதி சேர் அவுணர் ( கந்தபு. 3, 17, 54).

அவதி பெ. (சைனம்) தொலைவில் உள்ளவற்றைப் பொறி உதவியின்றி உணரும் அறிவு, அவதிஞானம். ஆங்குமுனி அவதியினறிந்த பொருளதனை (யசோ

தர. 284).

அவதி பெ. குழி. அவதி...குழியாம் (நாநாத்த. 906).

அவதி" பெ. விடுமுறை. அவதி எடுத்து ஊருக்குப் போய்வந்தேன் (நாஞ்.வ.).

அவதி பெ. அவசரம். உனக்கு என்ன அவதி (பே.வ.).

அவதி' பெ. ஐந்தாம் வேற்றுமை எல்லைப் பொருள். (பிர. வி. 9/செ. ப. அக.)

அவதிக்கிரயம் பெ. தவணை காட்டிச் செய்யும் விற் பனை. (செ. ப. அக.)

அவதிகத்தம் பெ. கடல்நுரை. (வின்)

அவதிகாரகம் பெ. நீக்கப்பொருளைக் காட்டும் உரு புடைப் பெயர். (த. த. அக.)

அவதிஞானம்' பெ. (சைனம்) மதிஞானம், சுருத ஞானம், அவதிஞானம், மனப்பரியாயஞானம், கேவல ஞானம் என்னும் ஐந்தில் ஒன்றாகிய தூரத்துள்ள வற்றைப் பொறியுதவியின்றி உணரும் உணர்ச்சி. ஓதி- அவதி ஞானம் (சீவக. 951 நச்.).

அவதிஞானம்' பெ. முக்காலத்தையும் அறியும் அறிவு. (த.த. அக.)

அவதிஞானம்' பெ. முற்பிறப்பையறியும் அறிவு. (முன்.) அவதிஞானி பெ. முற்பிறப்பை அறிபவன். அவதி ஞானி யசோதரன் (சூளா. 352).

அவதிப்படு-தல் 6 வி. துன்பப்படுதல். பாழ் அவதிப் பட எனக்கு முடியாது (தாயுமா. 16,4). அழகான மேனி எல்லாம் அவதிப்பட்டு (காத்தவரா.ப.90). மெய்யில் பிறவியில் பிறவியில் அவதிப்படவும் விதித்தாய்

(பழநிப்பதிற். அந். 56).

அவதிப்படு-தல் 6 வி. அவசரப்படுதல். (இலங். வ.)

29

அவந்தி

அவதும்பரம் பெ. அத்திப்பழம். (த.த. அக.)

அவதூதம்' பெ. நூற்றெட்டு உபநிடதங்களுள் ஒன்று.

(சங். அக.)

அவதூதம்2 பெ. 1. முழுத் துறவு. அவதூத வேடத்து ஒருவனை (செ. பாகவத. 11, 4, 1). 2. யின்றியே இருக்கும் துறவி நிலை. (செ. ப. அக.அனு.)

ஆடை

அவதூதன் பெ. 1. முற்றும் துறந்தவன். அவ தூதன் மேலான பரத்துவத்தைக் கூறுகின்றான் (அவதூத கீதை 6, 27). 2. ஆடையின்றி வாழும் துறவி. (சங். அக.)

அவதூறு (அவத்தூறு) பெ. பழி, நிந்தை. நாயகியை சொன்னான் (மலைய, ப. 305).

அவதூறும்

தூறு செய்பவர்களாயும்

தீமோத். 2, 3,3).

...

அவ

இருப்பார்கள் (விவிலி.

அவதூறுவழக்கு பெ. ஒருவரின் இழிவான பேச்சாலோ எழுத்தாலோ பாதிக்கப்பட்டவர் அவர்மீது தொடுக்கும் வழக்கு. மருத்துவர் நீதிமன்றத்தில் அச்செய்தித் தாளின்மீது அவதூறு வழக்குத் தொடுத்தார்

(செய்தி.வ.).

அவந்தரை பெ. 1. சீர்கேடு. படு அவந்தரையா யிருந்த படியினாலே (கோயிலொ. 42). 2. அநாதை நிலை. அவந்தரையாய்ச் செத்தான் (பே.வ.).3. பயனிலதாகை, வீண். அது அவந்தரையாய்ப் போயிற்று ((LPGIT.)

அவந்தன் பெ. பயனற்றவன். நின்மகன் அவந்தனாய் வெறுநிலத்து இருக்கல் (கம்பரா. 2, 2, 63).

அவந்தி1 (அவந்திகை!) பெ. 1.அவந்தி என்னும் நாடு. அவந்திக் கொல்லரும் யவனத்தச்சரும் (மணி மே.19,108). யவனத் தச்சரும் அவந்திக் கொல் லரும் (பெருங்.1, 58, 40). அங்கநாடுடைய கோன் அவ்விருந்தான், இவ்விருந்தான் அவந் திக் கோமான் (சூளா. 1820). வீறுசால் அவந்தி யாளும் விந்தானு விந்தர் (செ. பாகவத. 10,28,2). 2. அவந்தி நாட்டின் தலைநகராகிய உஞ்சை நகர், உச்சயினி: அவந்தி வேந்தன் உவந்தனன் கொடுத்த (சிலப். 5, 103).

அவந்தி2

பெ. (அவந்திகை') கிளி. கிளியும் ... அவந்தி (பிங். 3099). அவந்தி என்பதும் தத்தை என்பதும் கிளியின் பெயர்கள் (அழ. கிள். தூது 63 உ.வே.சா.அடிக்குறிப்பு).

அவந்தி3 பெ. காடி. (தைலவ. 119/செ. ப. அக.)

(தைலவ.119/செ.

அவந்தி பெ. கோவைக்கொடி. (பச்சிலை. அக.)