பக்கம்:பெருஞ்சொல்லகராதி.pdf/560

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அவந்தி5

அவந்தி5 பெ. (அ + வந்தி) 1. அவந்தி ... பிள்ளை பெற்றவள்

2. காய்க்கும் மரம். அவந்தி

...

பிள்ளை பெற்றவள்.

(நாநார்த்த.905). காய்க்கும் மரம்

(முன்.). 3. ஈற்றுப் பசு. அவந்தி...ஈற்றாவாம் (முன்.)

அவந்திக்கண்ணி பெ. வெருகன்கிழங்கு.

அவந்திகாபுரி பெ. உஞ்சைநகர், உச்சயினி.

(மலை அக.)

சிற்பரா

நதி பெருக அவந்திகாபுரி பெருக (சேத்திரக். பிள்.

10, 7).

அவந்திகை! (அவந்தி) 1

1.

பெ.

உச்சயினியைத்

தலைநகராக் கொண்ட அவந்தி நாடு. அவந்திகை நாடும் (பெருங். 5, 4, 136).

அவந்திகை" (அவந்தி) பெ கிளி.

...

அவந்திகை

...

கிளிப் பெயராகும் (பிங். 2336).

அவந்திசோமம் பெ. காடி, புளித்த கஞ்சி. (த. த. அக.)

அவநதன் பெ. தலைகுனிந்து வணங்குவோன். அரசன் அவநதன் ஆனான் (கோயிற்பு. இரணி. 14).

அவநம்பிக்கை பெ. நம்பிக்கை இன்மை. (பே. வ.)

அவநாசி பெ. கலைமகள். (த. த. அக.)

அவநியாயம் பெ. (அவம் + நியாயம்) அநியாயம்.(வின்.)

அவநீதன் பெ. நீதியற்றவன். சூதனென்றும் அவ நீதன் என்றும் (பிரதாப. விலா. 43).

அவநீதி பெ. நீதிக் கேடு.

மற்றுறும் அவநீதியை

(வரத. பாகவத, குருகுல. 437),

அவநுதி பெ. (அணி.) ஒன்றன் தன்மையை மறுத்து வேறொன்றன் தன்மையை ஏற்றிக் கூறும் அணி. சிறப்பினும் பிறிதுரைப்பது அவநுதியாகும்

(தண்டி. 75).

அவநெறி பெ. பாவ வழி, தீயவழி. அவநெறியிற் செல்லாமே தடுத்து (பெரியபு. 5,79). அவநெறி யின் விழையும் ஒன்றைத் தவிர்வேனே (திருப்பு.61).

அவப்படு-தல் 6 69. பயனற்றதாதல். அருந்தவம் அவப்படாது அருளி (கோனேரி. உபதேசகா. 2, 129).

அவப்பலம் பெ. தீய பயன். வெய்து அவப்பலத்துறா நன்னிலை கொடு -இரகு. யாகப். 2).

43

0

அவம்1

அவப்பிரசவம் பெ. ஆறு மாதத்துக்கு மேல் நிகழும் கருவழிவு. (சி.சி. 2, 93 மறைஞா.)

அவப்பிரஞ்சம் (அவப்பிரஞ்சனம்,

பெ.

பெ.

அவப்பிரபம்சம்) இழிசினர் பேசும் வடமொழி. (உரி. நி.10,8)

அவப்பிரஞ்சனம் (அவப்பிரஞ்சம், அவப்பிரபம்சம்) ஒரு பிராகிருத மொழி. அவப்பிரஞ்சன மொழி அசேதனர்க்கு ஆகும் (பேரகத். 143).

அவப்பிரபம்சம்

(அவப்பிரஞ்சம், அவப்பிரஞ்சனம்)

பெ. ஒருவகை மொழி. அவப்பிரபம்சம் தேசி... என பலவாயிருக்கவும் (சி. சி. சுப. பாயி. 2 மறைஞா.).

...

அவப்பேர் பெ. இகழ்ச்சி. (செ. ப. அக.)

அவப்பொழுது பெ. வீண்காலம்.

அவப்பொழுது

அகலவிருப்பதென் விருப்போ (வைராக். தீப. 18).

அவபத்தி! பெ. பத்தியின்மை. (சங். அக.)

அவபத்தி' பெ. மூடபத்தி. (வின்.)

அவபத்தியம் பெ. பத்தியக்கேடு. (செ.ப.அக.)

...

அவபிரதம் (அவபிருதம்) பெ. வேள்ளியின் முடிவில் நீராடுகை. அவபிரதம் ஆட்டிய எம்மரசே (தொண்டரடி. திருப்பள்ளி. 4). முனிவர் அவபிரதங் குடைந்தாட (பெரியாழ். தி. 4, 7, 6).

அவபிருதம் (அவபிரதம்) பெ. வேள்வியின் முடிவில் நீராடுகை. ஆற்றுவித்து வேள்வியினை அவபிருதம் அறல் பதிவுற்று அயர்ந்த பின்னர் (அகோர. வேதார். பு.அக்கினிதீர்த். 8).

அவபுத்தி பெ. கெடுமதி. (செ. ப. அக.)

அவபுரம் பெ. பாவம் நிலைபெற்றுள்ள இடம். அவ புரத்தில் அம்பரத்தை அடைவர் (தில். கலம். 25).

அவபேதகவாதம் பெ. (மருத்.) நெற்றி நோய். (பைச, ப.

301)

அவம்1 பெ. 1. கேடு. அவஞ்செய்வார் ஆசையுட் பட்டு (குறள். 266). அவத்திறம் ஒழிக (மணிமே. 7, 14). அவம் அரிது ஆதல் எளிதால் (ஏலாதி 3). அவ மில் சூழ்ச்சித் தவமுதுமகன் (பெருங்.2,20,69).உற் றதால் இன்று அவம் என்றென்று ஓதுவாள் (கம்பரா. 6, 37, 72). அவநெறியே செல்லாமே தடுத் தாண்டாய் (பெரியபு. தடுத்தாட். 79). தவம் இயற்றுதல்