பக்கம்:பெருஞ்சொல்லகராதி.pdf/561

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அவம்'

கண்டு சதமகன் அவம் இயற்ற (செ. பாகவத. 11, 2, 22). சங்கம் வாய்வைத்து ஒன்னார் தாரணி தான் அவம் செய்தான் (திருவரங். அந். 11). என்னை, இங்கே அவத்திலே சோதித்தாயோ (இராமநா. 6, 42 தரு 2). அவத்தினைக் களைந்தாள் அறிவென விளைந்தாள் (பாரதி, தோத்திரம். 33,5). 2.வீண், பய னின்மை. தவமும் தவமுடையார்க்கு ஆகும் அவம் அதனை அஃதிலார் மேற்கொள்வது (குறள்.262). தவம் இருக்க அவஞ்செய்து தருக்கினேனே (தேவா. 4,5, 9). அவமே காலத்தைப் போக்காதே (திருவாச. 7, 4). அவம் செயத் திருவுடம்பு அலச நோற்கின் றான் (கம்பரா. 3, 5, 18). அவஞ்செய்து வந்தார்க்கு அரிது (சூளா. 2005). நாள் அவங்கள் போகாமல் (தாயுமா. 28,64). அவலை நினைந்து உமி மெல்லு தல்போல் இங்கு அவங்கள் புரிவீரோ (பாரதி. ஞானப்.10,7).வேதத்தில் ஒரு எழுத்தின் உறுப்பு அவமாய்ப் போவதைப் பார்க்கிலும் (விவிலி. லூக்கா 16, 17). 3. தாழ்வு. மக்கள் பெற்று உயிர் வாழ்வார்க்கு அவம் உண்டே (கம்பரா. 2, 5, 64). 4. பொய்யொழுக்கம். அவம் மறைந்தொழுகும்

அலவல் பெண்டிர் (சிலப். 5,129).

அவம்' பெ. ஆகாயத்தாமரை.

(சாம்ப. அக.)

அவம்3 பெ. வேள்வி, அவம் வேள்வி பெயர்

...

(நாநார்த்த.909).

அவம் + பெ. அழைப்பு அவம்

...

அழைத்தல்

...

பெயர் (முன்.).

அவம்5 பெ. ஆணை. அவம் (முன்.).

...

ஆணையும் பெயர்

அவமதி பெ. அவமானம். இழிஞன் புலைக்கரந் தீண்டி என்னை அவமதி செய்திட (சிவஞா. காஞ்சி. பரசிரா. 42). அவமதி தடுத்து என்னை ஆட் கொண்ட வள்ளலே (அறப்பளீ. சத. 93). சிவனை நிந்தனை கூறினை அவமதி செய்தாய் (சரபபு.

42).

அவமதி-த்தல் 11வி. இகழ்தல். அவமதித்து ஒழுகி ஆணை எள்ளி (பெருங். 3, 25,35). அவளை அவ மதித்துக் கருதினாளாம் (இறை. அக. 7 உரை). பரனைக் குருவை அவமதித்தோர் (தணிகைப்பு. அகத்.

336).

அவமதிச்சிரிப்பு பெ. இகழ்ச்சிநகை. அசி அவமதிச் சிரிப்பாமென அறைவர் (திவா.2003).

431

அவயங்கா-த்தல்

ஆன்ற

அவமதிப்பு பெ. இகழ்ச்சி. அவமதிப்பும்

மதிப்பும் (நாலடி. 163). கீழ்களின் அவமதிப்பும் (பாரதி. தோத்திரம். 59, 2).

அவமரணம் பெ. இயல்பாக நேராத சாவு. (செ.ப.அக.)

அவமரியாதை பெ. மரியாதைக் குறைவு.

என்னை

அவமரியாதை செய்துவிட்டார்கள் (நாட்.வ.).

அவமழை பெ. 1. கேடு விளைக்கும் மழை. (al cir.) 2.காலமல்லாத காலத்தில் பெய்யும் பெருமழை. (நாட். வ.)

அவமாக்கு-தல் 5வி. வீணாக்குதல். உங்கள் பாரம் பரியத்தினால் தேவவசனத்தை அவமாக்குகிறீர்கள் (விவிலி. மாற்கு 7,13).

அவமாகம் பெ. மூன்று திதி அல்லது மூன்று நட்சத்தி ரம் அல்லது மூன்று யோகம் கலந்திருக்கும் நாள். (பெரியவரு. 55)

அவமானகரம் பெ. இகழ்ச்சி. அது எவ்வளவு அவ மானகரமான நிலமை (பே.வ.).

அவமானப்படுத்து-தல் 5 வி. இழிவுபடுத்துதல். அவர் கள்... தலையிலே காயப்படுத்தி அவமானப்படுத்தி அனுப்பிவிட்டார்கள். (விவிலி. மாற்கு 12,4).

.

ஆங்கவ

அவமானம் (அபமானம்) பெ. இகழ்ச்சி. ஐயனே, இன்று அமணர்கள்தாம் என்னை அவமானம் செய்ய நைவதானேன் (பெரியபு.31,11), மானம் நீங்குதற்காக (தெ.இ.க.22,81). புன்மை அவமானமும் தானமும் (அறப்பளீ . சத. 39). அன்னை யைப் போற்றுதல் ஈனமோ அவமானமோ

(பாரதி. தேசியம். 39,2).

அவமானி-த்தல் 11வி. இகழ்தல். அவையினில் அவ மானித்த பாதகன் (நல். பாரத. சொர்க்க. தெரி. 31). அவமிருத்து பெ. காலமல்லாச் சாவு. பல்கோடிசன்மப் பகையும் அவமிருத்தும் (கந்தர்கலி. 111). புனலும் கனலும் அவமிருத்தும் கொலைக்காலனும்... கண்ட துண்டப்படக் கூவு சேவல் (திருமலைமுரு. பிள். 65).

.

அவமீதம் பெ. பொற்றலைக் கையாந்தகரை. (சாம்ப. அக.)

அவயக்கோழி பெ. அடைகாக்கும் கோழி. (செ.சொ.

பேரக.)

அவயங்கா-த்தல் 11 வி. அடைகாத்தல். கோழி அவ யங் காக்கிறது (பே.வ.).