பக்கம்:பெருஞ்சொல்லகராதி.pdf/562

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அவயம் 1

அவயம்' பெ. 1. அடைக்கலம், புகலிடம். அவயம் நின் அடுத்தடுத்து அரற்றுகின்றான் (கம்பரா.

அவயம்

...

6, 6, 67).

.

2. அடைகாக்கை.

(வின்.)

அவயம்' பெ. வெட்டிவேர். (சங். அக.)

அவயம்' பெ. இரைச்சல். அவயம் போடாதே (திரு நெல்.வ.)

அவயம் பெ.

உடலுறுப்பு. எல்லா அவயங்களும் கணக்காக வைத்திருக்கிறது (பாரதி. வசன. 3, 7). அவயவம் (அவையவம் ) பெ. 1. உடல் உறுப்பு. அவயவம் எழுதுதல் (இறை. அக. 8 உரை). அவயவம் சுவைதரு கோற்றேன் கொண்டு செய்தனன் (திரு வாச. 1,158). வேறு உவமை இல்லா அவயவம் (கம்பரா. 1, 10, 18). தங்கள் அவயவம் போல்வன கொய்தார் (பாரதம். 1, 8, 6). அவயவங்கள் கலந்த புளகம் மயிர் முகிழ்ப்ப (பெரியபு. 29, 325). அலகி லாதவன் பாலதிலை அவயவமாம் (செ. பாகவத. அவயவங்களைப் பிரித்துச் சொல்ல வணுமோ (பெருமாள்தி.7, 1 வியாக்.). அவயவம் ஆய்கிலர் (கம்பன் பிள். 2, 6). உன் அவயவங்களில் ஒன்று கெட்டுப் போவது (பு.ஏற். மத். 5, 29). 2. அங்கம், பகுதி. அவயவம் அவயவிஎனாஅ (தண்டி. 37, 5). காரியம் அவயவத்தால் கண்டனம் (A. A. சுப.32).

1, 1, 22).

அவயவம்' பெ. இலாமிச்சை. (பச்சிலை. அக.)

அவயவர்க்கம் பெ. அடைக்கலக்கை. (செ.ப.அக.அனு.) அவயவி பெ. 1.உறுப்புள்ளது. ஒரு பொருளே அவ யவ அவயவிகளாயாதல் (சி. போ. பா. 6, 2). அவ யவம் அவயவி எனாஅ (தண்டி. 37,5). 2. உடல். (சங். அக.) 3. (அவை) உறுப்பினன். (செ. ப. அக.) அவயோகம்

பெ. தீய நிகழ்ச்சி. மனையவள் முகங் கண்டு அவயோகம் உணர்ந்தழிந்து (அகோர. வேதார. பு. அக்கினிதீர்த். 8).

அவர் சு. பெ. 1. அவன், அவள் என்பவற்றின் பன்மை. அவர் இவர் உவர் என வரூஉம் (தொல். சொல். 162 சேனா.). இருபெரு வேந்தரொடு வேளிர் சாயப் பொருது அவரைச் செருவென்று (மதுரைக். 56). நல்லாரும் அவர் தீயர் எனப்படும் சொல்லார் (தேவா. 1,56,2). 2. ஒருவரைக் குறிக்கும் மரியாதைப் பன்மைச்சொல். உள்ளுவன் மன்யான் உரைப்பது அவர் திறமால் (குறள். 1184). அவ்வண்ணத்து அவர் நிலைமை கண்டும்... (திருமங்கை. திருநெடுந்.21). பொங்குகடற் கல்மிதப்பில் போந்தேறும் அவர் பெருமை (பெரியபு. 25,15).

...

43

2

அவரை

அவர்க்கொசப்பு பெ. பெருந்தும்பை.

(வாகட அக.)

அவர்கள் சு. பெ. 1. அவன், அவள் என்பவற்றின் பன்மை. அவர்கள் தங்களினாகிய கூட்டம் கூட்டி னார்கள் (திருக்கோ. 7 உரை). 2. ஒருவரைக் குறிக் கும் மரியாதைப் பன்மைச்சொல். கூவல்கள் அவர் கள் கேளார் (தேவா. 4, 36.2). 3. ஒருவர் பெயரை அடுத்து வழங்கும் மரியாதைச் சொல். ஆநந்த நமசிவாய பண்டாரம் அவர்களுக்கு (தெ. இ. க. 1,85). முதல்வர் அவர்கள் தொடங்கி வைக்கி றார் (செய்தி.வ.).

அவர்ணியம் பெ. உபமானம். (அணி. 3)

.

அவரகாத்திரம் (அபரகாத்திரம்) பெ. கால், பின் னங்கால், முன்கால். அவரகாத்திரமும் வாலெயி றெனுமைந்தினும் (சீவக. 2154 பா. பே.). அவரகாத் திரம் என்றது கால்களை; இனி, பின்கால் முன் கால் என்பாருமுளர் (சீவக. 806 நச்.).

அவரசன் (அவரயன்) பெ. தம்பி. (வின்.)

அவரஞ்சக்காரம் பெ. வெடிகாரம். (செ. ப. அக. அனு.)

...

அவரம் பெ. 1. பிந்தியது. அவரம் பிந்தினதும் (நாநார்த்த.896). 2. யானையின் பின்னங்கால்புறம். பின்னங்காற்புறமுமாகும்

அவரம் (முன்.).

...

யானைப்

அவரயன் (அவரசன்) பெ. தம்பி. (செ. ப. அக.,

அவராகம்

பெ. இச்சையின்மை. அவராக வேதமலர்

முனி (பாரதம். 2, 2, 204).

அவராத்திரி பெ. வீணான இரவு.

அவராத்திரி

ஆகாது அன்றைப்பொழுது (பத்ம. தென்றல். தூது

47).

அவராதம் அபராதம், அவதாரம் 3) பெ. குற்றம். நாளா அவராதந்தனை உன்னி (ஞான. உபதேசகா.

5, 13).

.

அவரூபம் பெ. உருவக்கேடு. (செ. ப. அக. அனு.)

அவரை பெ. காய்கறி வகையில் பயிரிடப்படும் ஒருவகைக் கொடி. அவரை கொய்யுநர் ஆர மாந்தும் (புறநா. 215,5). அவரை பொருந்திய பைங்குரல் ஏனல் (ஐந்.எழு.1). புகர்ப்பூ அவரையும் (பெருங். 1, 49, 106). அவரை வார்புனத்து அருந்தி (சூளா. 732). எள்ளும் அவரை துவரையும் (முக்கூடற். 44).