பக்கம்:பெருஞ்சொல்லகராதி.pdf/564

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அவலம்'

5). அவல மொழிகள் அளப்பதேன் (பாரதி. பாஞ்

சாலி. 77),

அவலம்' பெ. (அ+ வலம்) இடப்பக்கம். அவலம் ... இடப்பால் (நாநார்த்த. 899).

அவலம்பசிலேட்டுமம் பெ. சிலேட்டும நோய்வகை. (செ.

ப. அக. அனு.)

அவலம்பம் பெ. சார்பு. (சங். அக.)

அவலம்பனம் பெ. சார்கை. (செ. ப. அக. அனு.)

அவலம்பி -த்தல் 11 வி. பற்றுதல். சாலம்ப சிவயோகம் அவலம்பித்து (சி. சி. 9, 10 ஞானப்).

அவலமுதுப்புறம் பெ. அவல் நிவேதனத்துக்காசுக் கோயி லுக்கு விட்ட இறையிலி நிலம். பயிர் செய்யப் பெறாது கிடக்கிற இடம் அவலமுதுப்புறமாகத் திருத்துவித்து (தெ.இ.க. 4, 511).

அவலரக்கு பெ. தகடாகவுள்ள அரக்குவகை. (சங். அக.) அறவும பரியன் அவலன் (சைவ. நெறி ஆசாரி. 8). அவலர் வன்கணர் அவகுணர் (திருப்பு.59).

அவலன் பெ.

...

குற்றமுள்ளவன்.

அவலி-த்தல் 11வி. 1. வருந்துதல். செவிலித் தாயர் அவலித்து அழவும் (பெருங்.1,46, 306). அருவரை மார்பன் அவலித்திருந்தான் (சீவக. 515). அழுது அவலித்திலர் (கம்பரா. 2,4,232). 2.அழு தல். அவலித்து அணங்கு நையாவகை தேறற்கு (தணிகைப்பு. களவு.532). 3. பதறுதல். அவல என் னாள் அவலித்து இழிதலின் (சிலப்.23,186).

அவலி' பெ.

பூனைக்காலி.

(செ. ப. அக.)

அவலிடி1

பெ.

அவலுக்காக

நெல்லை இடிக்கை.

(பே.வ.)

அவலிடி' பெ. வரிக்கூத்துவகை. (சிலப். 3,13 அடியார்க்.)

அவலுப்பு பெ. அவுரியினின்றும் எடுக்கும் உப்பு. (செ.

ப. அக.)

அவலேசம் பெ. 1. அற்பம். (வின்.) 2. அவமானம். (முன்.)

அவலேபம் 1 பெ. அகங்காரம். அவலேபம் ... அகங் காரம்... (நாநார்த்த. 917).

34

அவள்

அவலேபம் 2 (முன்.).

பெ. பழிப்பு. அவலேபம்

அவலேபம் பழிப்பு

...

அவலேபம்' பெ. பூச்சு. அவலேபம்

பூச்சே (முன்.).

அவலை1 பெ. கடுப்பு.

...

கடுப்பும் அவலையின்

கண்ண (பிங். 3100).

000

அவலை2 பெ. காடு. காடும் அவலையின் கண்ண (முன்.)

அவலோகம் (அவலோகனம்) பெ. பார்வை. (செ.

ப. அக.)

அவலோகமுனிவர் பெ. சைன முனிவர். (அபி. சிந்.)

அவலோகனம் (அவலோகம்) பெ. பார்வை. அனுக் கிரகாவலோகனம் (சி. சி. 8,3 சிவாக்.).

அவலோகி-த்தல் 11 வி.

நோக்குதல். அதனாலே

சர்வத்தினையும்

அவலோகித்தனன்

(சிரீபு./செ.ப.

அக.அனு.)

அவலோகிதன் பெ. 1. பௌத்த முனிவருள் ஒருவர். ஆயும் குணத்து அவலோகிதன் (வீரசோ. பாயி. 2). 2. சைன முனிவர். (அபி. சிந்.)

அவவாதம்1 (அபவாதம்) பெ. பழி. அவவாதம்

அபவாதம் (நாநார்த்த.897).

...

அவவாதம்' பெ. ஆணை. அவவாதம். (முன்.).

...

ஆணை...

அவவாதம்3 பெ. நம்பிக்கை. அவவாதம் நம்

பிக்கை (முன்).

பெ.

600

அவ

அவவு (அவா 1) வேட்கை, விருப்பம். வுக்கை விடுத லதுமனும் பொருளே (கலித்.14,19). அவவுறு நெஞ்சம் (பெருங். 2,18,9).

அவள் சு.பெ. பெண்பால் சேய்மைச்சுட்டு. அவள் இவள் உவள் என வரூஉம் (தொல்.சொல். 162 சேனா.). அவள் பழி நுவலும் இவ்வூர் (குறுந். 173). வேலுண்கண் வேய்த்தோளவட்கு (குறள்.1113). அவள் இவள் உவள் (திருவாய். 1, 1, 4). அவள் நமக்கு முன்சுரக்கும் இன்னருள் (திருவாச. 7, 16). அண்ணலும் நோக்கினான் அவளும் நோக்கினாள் (கம்பரா. 1,10,35). நங்கை அவள்தனை (பெரியபு. 28,483). அவள் கொழுநர் (சேதுபு. கடவுள். 5).