பக்கம்:பெருஞ்சொல்லகராதி.pdf/565

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அவளம்

அவளம் பெ. தீமை. அவளங்கள் தரு காரணமாய் (வேதா. சூ. 53).

அவளை துவளை பெ. கதம்பவுணவு. (இலங். வ.)

அவற்கம் பெ. கஞ்சி.

(வின்.)

அவற்காளான் பெ.

காளான்வகை. (முன்.)

அவற்பதம் பெ. அவலாதற்கு ஏற்ற பக்குவம். (முன்.)

அவன் சு.பெ. 1. ஆண்பால் சேய்மைச்சுட்டு. அவன் இவன் உவன் என வரூஉம் (தொல். சொல். 162 சேனா.). அம் தண் கிடங்கின் அவன் ஆமூர் எய் தின் (சிறுபாண்.188). அஃது எம் ஊரே அவன் எம் இறைவன் (புறநா. 48,6). அதனை அவன் கண் விடல் (குறள்.517). அவன் இவன் உவன் (திருவாய். 1, 1, 4). அவன் அடிகள் எண்ணலால் (கம்பரா. 6, 6, 35). மற்று அவன் மொழிந்த நாளினால் (சூளா. 116). காவிரிப்புனல் கொணர்ந்த அவனும் (கலிங். 193). 2. (அனைவரும் அறிந்த இறைவனாய் ஒரு பொருளைச்சுட்டும்) உலகறிசுட்டு. அவனே இருசுடர் தீ ஆகாசம் ஆவான் (காரை. அந்.21). அவன் அருளாலே அவன்தாள் வணங்கி (திருவாச. 1, 18). அவனன்றி ஓரணுவும் அசையாது (தாயுமா. 10,1).

அவனதி பெ. தோற்றப்பிழையினால் உண்டாகும் சந்திர சலனம். (செ. ப. அக. அனு.)

அவனம் பெ. காடு. அவனம் விண்மழை போதும் (குசே. 453).

அவனறிவுதான்காண்டல்வினா பெ. பிறன்கருத்தை அறி தற்குக் கேட்கும் கேள்வி. உரையாசிரியர்

...

னறிவு தான் காண்டலும் எனவிரித்து தென்றார் (தொல். சொல்.13 சேனா.).

...

அவ

900

ஐந்

அவனி பெ. உலகம், பூமி. ஈண்டு இவ் அவனி எல்லாம் (தேவா. 6,27, 2). அடிமூன்று இரந்து அவனிகொண் டாய் (இயற் இரண்டாம்திருவர். 5). அடித்தலம் தீண்டலின் அவனிக்கு அம்மயிர் பொடித்தன (கம்ப ரா.3,5,19).அவனி சுமந்தன புயமும் (கலிங். 273). நிறைபெருஞ் செல்வமோடு அவனி வாழ் பல் லவர் (மெய்க். சோழர் 28, 34). அன்றெனக்கு யிசைந்த அவனிபாதி அமையும் (பாரதம். 1, 3,82). அவனிக்கு இறைவரைப் பாடினமே (சிலையெழு. 70). அவனிதனில் புரண்டு (மதுரைவீர. ப: 17). அவனி வேந்தர் அனைவருக்கும் மேலானோன் (பாரதி. சுய சரிதை 2, 57).

பெ. சொ. அ.1-28 அ

4

35

அவாச்சியம்

அவனிகேள்வன் பெ. (பூமி தேவியின் கணவனான) திருமால். அவனி கேள்வனும் நளினத் தேவுமே (கந்தபு. 1,11,70).

...

அவனிகை பெ. திரைச்சீலை. (செ. ப. அக. அனு.)

அவனிபன் பெ. அரசன். அவனிபர்க்குப்

புரந்தர

னாம் (கலிங்.237). அவனிபன் நகரியின் விளக் கெடுப்பத் துன்னவே (பாரதம். 1, 3, 18).

அவனிமருந்து பெ. அவுரிக்கிழாயம். (செ.ப. அக.அனு.)

அவனிமாது பெ

பூமிதேவி. அவனிமாது எனும் ஒரு

மகள் (கம்பரா. 2, 1, 28).

அவனிமான் பெ. நிலமகள். பாங்கினால் அவனி செம்பட்டுடுத்தனைய ளானாள் (செங்கோட்

மான்

டுப்பு. 2, 4, 15),

அவனிவிடங்கர் பெ. திருக்கோளிலியில் உள்ள தியாக

ராசர் பெயர். சத்தவிடங்கத்தலத்துள் ளிலியில் அவனிவிடங்கரென்றும்

233-235 உ. வே. சா. குறிப்புரை).

...

திருக்கோ

(திருவாரூருலா

யான்

அவா (அவவு) பெ. வேட்கை, விருப்பம். அவா அறியேனே (புறநா. 137, 3). மாரிக்கு அவா வுற்று (கலித். 71, 24). அவா என்ப எல்லா உயிர்க் கும் (குறள். 361). அவாவே பற்றே பேதைமை என்றிவை (மணிமே. 30, 170). அவா அடக்கல் முன் இனிதே (இனி. நாற். 25). அலமந்தேற்குப் பொருள் அவாத் தந்தவாறே (தேவா. 4, 76, 1). முதல் அறுத்த சிந்தை (கம்பரா. 4, 3, 21).தாரமேல் அவாக் கொள் இராவணன் (வேதாந்த. சத. 9).

அவா

அவா2 பெ. இறங்குகை. அவா இறங்குதல் (நாநார்த்த.

921).

அவாக்கு பெ. 1. கவிழ்ந்த முகத்தோன். அவாக் கென்ப கவிழ்ந்தோன் (முன்.). 2. ஊமை. அவாக் கென்ப் ஊமை (முன்.).

...

அவாகு பெ. கஞ்சி. கஞ்சி அவாகே (பிங். 1103).

அவாகேசவுப்பி பெ. பெருந்தும்பை. (செ. ப. அக. அனு.)

அவாச்சியம் பெ. சொல்ல முடியாதது.

அதனை

இன்னதென்று உரைத்திடப்படாமையால் அவாச் சிய வடிவாகும் (கைவல்ய. சந்தே. 95).