பக்கம்:பெருஞ்சொல்லகராதி.pdf/566

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அவாச்சியன்

அவாச்சியன் பெ. குறிப்பிடத்தகாதவன். அருக்கசந் திரன் என்னும் அவாச்சியன் (நீல. 227).

அவாசி (அவாசீனம்) பெ. தெற்குத் திசை. மாசிலா அவாசிநின்று (சேதுபு. வேதாள். 41).

அவாசீனம் (அவாசி) பெ. தெற்குத் திசை. (வின்.)

அவாசு பெ. கேடு. (ராட். அக.)

அவாதிதம் பெ. கண்டிக்கப்படாதது. யாது பிரமாணத் தானும் அவாதிதம் (தர்க்கபரி. 72).

அவாந்தரகாரணம் பெ. இடையில் வந்த காரணம். (சி. போ. 13 சிற்.)

சிவதீட்சை பெற்ற சூத்திரர்.

அவாந்தரசைவர் பெ.

கரைந்த

அவாந்தரசைவன் தனக்கும்

உரிமையில்லை (ஆனைக்காப்பு. கோச். 23).

கன்மத்து

அவாந்தரப்பிரளயம் பெ. இடையில் உண்டாகும் உலக அழிவு. (மச்சபு. பூருவ. 2,9)

அவாந்தரபலம் பெ. இடையில் வரும் பேறு. அவாந்தர பலமாயிருப்பன சில உண்டாயிருக்கும் (திருப்பா. 3

மூவா.).

அவாந்தரபேதம் பெ. உட்பிரிவு. (செ. ப. அக.)

அவாந்தரம் 1 பெ. இடையிலுள்ளது. அவாந்தர வியா பாரம் (சி. சி. அளவை. 1 சிவாக்.).

அவாந்தரம்' பெ. வெறுவெளி.

அக்கினி பிறக்கிறது (வின்)

அவாந்தரத்திலே

அவாந்தரம்3 பெ. உதவியின்மை. அவன் குடும்பம் அவாந்தரமாயிருக்கிறது (செ.ப.அக.).

அவாந்தரவெளி பெ. வெட்டவெளி. (முன்.)

அவாந்தரை (அவாந்திரை ) பெ. வெறுமை. அந்தக் குடும்பம் அவாந்தரையாகி விட்டது (தஞ்.வ.).

அவாந்திரை (அவாந்தரை) பெ. வெறுமை. (செ.ப. அக. அனு.)

அவாப்தம் பெ. அடையப்பட்டது. அவாப்தசமத்த காம னாய் (குருபரம். ஆறா. பிரவே).

4

36

அவாவு-தல்

அவாபுளப்பி பெ. பிரமி என்னும் பூண்டு. (சங். அக.)

அவாய்நிலை பெ. ஒரு சொல் தன்னொடு பொருந்திப் பொருள் முடிதற்குரிய மற்றொரு சொல்லை வேண்டி நிற்கும் நிலை. நீர்பெருகல் என்பன அவாய்நிலை யால் வந்தது (பரிபா. 16, 3 பரிமே.). தொடர்மொழி யாவது அவாய்நிலையானும் தகுதியானும் அண்மை நிலையானும் இயைந்து பொருள் விளக் கும் தனிமொழி ஈட்டம் (தொல்.சொல். 1 சேனா.).

அவாயம் (அபாயம்) பெ. தீங்கு, ஆபத்து. அவாயம் அறவே (திருமந். 2718). சிவாய நமவென்று சிந்தித் திருப்பார்க்கு அவாயம் ஒருநாளும் இல்லை (நல்வழி

15).

அவாரமுகி பெ. குடியோட்டிப் பூண்டு. (மரஇன. தொ.) அவாரி பெ: தடையின்மை. அவாரி யாகப் பிரா மணருக்குச் சத்திரபோசனமிடுவர் (குருபரம். ஆறா.

ப. 218).

அவாரி' பெ. (அ + வாரி) சிறுநீர். (சங். அக.)

அவாரிகா பெ. கொத்தமல்லி. (மரஇன. தொ.)

அவால் பெ. பாதுகாப்பு. (செ. ப. அக. அனு.)

அவால்தார் (அவாலுதார், அவில்தார், அவுல்தார்) பெ. சிறுபடைக்குத்தலைவன். (முன்.)

அவாலத்து பெ. கடன்சாட்டுகை. (செ. ப. அக.)

அவாலா பெ. உணவு. (செ.ப.அக.அனு.)

அவாலுதார் (அவாலதார், அவில்தார், அவுல்தார்)

பெ.

சிறுபடைக்குத்தலைவன். (முன்.)

அவாவறு-தல் 6 வி. ஆசையொழிதல்.

அவாவற்று

வீடுபெற்ற குருகூர்ச் சடகோபன் (திருவாய். 10,10,

11).

அவாவறு-த்தல்

ஆம் அதிகாரம்)

11 வி. ஆசையொழித்தல். (குறள்.37

அவாவன் பெ. ஆசையுடையவன். கோவி அவாவன் (சைவ. நெறி ஆசாரி. 17).

அவாவு-தல் 5 வி. 1. விரும்புதல். உறையுள் வயங் கியோர் அவாவும்

...

சோலை (குறிஞ்சிப். 214-215).