பக்கம்:பெருஞ்சொல்லகராதி.pdf/571

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அவிமுத்தம் 1

அவிமுத்தம்' பெ. காசி நகரம். அவிமுத்தம் பணிந் தேத்தி (பெரியபு. 30, 4). காசிக்கு அவிமுத்தம் எனப் பெயர் புனைந்தார் (காசிகா. 42, 16. அவிமுத்தம் குடிகொண்டு (காசிக்கலம். 53). அவிமுத்தம் அகலாது இருந்தும் (சிவஞானதேசி. திருவருட். 1, 7).

அவிமுத்தம்' பெ. நீக்கிவிடப்படாதபொருள். (மதுரை.

அக.)

அவியதம் பெ. கடுக்காய். (மரஇன. தொ.)

அவியம் பெ. கடுகு. (முன்.)

அவியயமாம் இதை

அவியயம் பெ. அழியாதது. (ஆன்மாவை) முயல்வால் கொலவலர் ஆர் (பகவற்

2, 21).

அவியரிசி பெ. புட்டரிசி (சித். அக./செ.ப. அக . அனு.) அவியல்' பெ. 1. சுவையாகச் சமையல் செய்கை. அவைத் தலும் அவித்தலும் அவியலாகும் (பிங்.1833). 2. உணவு. செந்தினையின் அவியல் (கூர்மபு. பூருவ. 30, 145).3. பலவகைக் காய்களும் தேங்காயும் சேர்த்துத் தேங்காய் எண்ணெயில் தாளிக்கும் கூட்டு வகை. அவி யல் பொரியல் துவையல் (நாஞ். மரு. மான். 3, 18).

அவியல் பெ. புழுக்கம். கோடைக்காலத்தில் வீட்டுக் குள் படுத்தால் அவியல்தான் (வட்.வ.).

அவியல்' பெ. வாய்ப்புண். (வின்.)

அவியல் * பெ. அழுகல். (பே.வ.)

அவியல்மணம்1 பெ. அவியலைத் தாளிக்கையில் உண் டாகும் மணம். (பே.வ.)

அவியல்மணம்' பெ. காய்கறி முதலானவை அழுகுவ தால் உண்டாகும் (அழுகல்) நாற்றம். (வின்.)

அவியற்கறி பெ. 1. பல காய்களை ஒருசேரச் சமைத்த கறி.(செ. ப. அக. அனு.) 2. வெந்த இறைச்சி.

(வின்.)

அவிர் - தல் 4 வி. ஒளிர்தல், விளங்குதல். எறி அகைந் தன்ன அவிர்ந்து விளங்கு புரிசடை (அகநா. கடவுள். 10). மின் அவிர் ஒளியிழை (பரிபா. 12, 11). அவிர் மதிக்குப் போல மறுவுண்டோ மாதர் முகத்து (குறள்.1117). ஆறணி அவிர்சடை (தேவா. 7, 72, 3). அவிர் ஒளிக்கடவுள் (பெருங். 1,53,16). அழல் அவிர் சோதி (இறை. அக. 1 உரை). பொன் அவிர்

4

41

அவிவேகம்

சுணங்கு (சீவக. 457). அவிர் சோலை வல்லை அணுகா (கம்பரா. 3, 10, 70).பொன்னவிர் மாமுடி (சிலையெழு.27). அவிர் பொலங் கழல் (பாப்பா. பரிபா. 1, 6). அவிர்மூரல் புரி தந்தாவளம் (செங் கோட்டு. பிள். பாயி.1).

அவிர்-தல் 4 வி. கிழிபடுதல்.

அவிர்தல் ... பீறலு

மாகும் (பொதி.நி.2,142).

அவிர் பெ. ஒளி. தண் கதிர்

மண்டிலம் அவிர்

அறச்சாஅய் (அகநா. 277, 1). அடர்பொன் அவிர் ஏய்க்கும் (கலித். 22,19).

அவிர்ப்பாகம் பெ. தேவருணவின் பங்கு. வானோர்க்கு அவிர்ப்பாகம் உந்து கருமம் இனி ஒழிதி (உத்தர. திக்குவி. 120).

அவிரதம் வி. அ. என்றும். (உரி. நி.8,1)

அவிரி (அவுரி) பெ. நீலிச்செடி. (வைத். விரி. அக.ப. 24)

அவிருகம் பெ. அதிவிடயம். (மலை அக.)

அவிருத்தம் பெ. விரோதம்

அல்லாதது. அவிருத்த

...

மான சின்மாத்திரத்தை பிரதிபா திக்கின்றது (சூத. எக்கிய. உத்தர. 5, 17).

அவிரோதம் பெ.

(அ+விரோதம்) 1. மாறின்மை. மறை அவிரோதமும் வகுப்பம் (சூத. எக்கிய. பூருவ. 39, 1). 2. நட்பு. (தெ.இ.க. 7, 69) 3. சிலேடை வகையுள் ஒன்று. நியமவிலக்கு விரோதம் அவிரோ தம் (தண்டி.78.2).

அவிரோதவுந்தியார் பெ. சாந்தலிங்க சுவாமிகள் மூன் றடித் தாழிசையால் செய்த உந்திப் பாட்டாகிய வீர சைவ நூல். அவிரோதவுந்தியார் எனும் நூல் நல்கினான் சாந்தலிங்க தேசிகனாம் தூயோன் (அவிரோத உந்தி. பாயி.).

அவில்தார் (அவால்தார், அவாலுதார், அவுல்தார்) பெ. சிறுபடைத்தலைவன். (பே.வ.)

அவிவாதம் பெ. வாதத்துக்கிடமின்மை. (செ.ப.அக.) .

அவிவு பெ. ஒழிவு. அவிவு இன்றி ... செவியின் வழி புகுந்து என் உள்ளாய் (இயற். பெரியதிருவந். 75). கந்தத்து அவிவே முத்தி (பெரியபு.28,916).

...

அவிவேகம் பெ. பகுத்தறிவின்மை. சைசவம் எண் ணும் அவிவேக விடன் வாழ்மனையாம் (ஞானவா.