பக்கம்:பெருஞ்சொல்லகராதி.pdf/578

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

44

அழகு'

விளம்புவோரும் (பரிபா. 19, 43). அழகெனும் அவையும் ஓர் அழகு பெற்றதே (கம்பரா.1,10, 34). ஒருவனுக்கு அழகு என்று சொல்லும் மனையாள் ஒழுக்கமுடையாள் ஆதலை (குறள். 60 மணக்.). 4. நூல் வனப்பு எட்டனுள் ஒன்று. செய்யுள் மொழி யால் சீர் புனைந்து யாப்பின் அவ்வகைதானே அழகு எனப்படுமே (தொல். பொ. 537 இளம்.). அழகு பெ. கண்டசருக்கரை. (வின்.)

அழகு (அளகு) பெ. கோழி. குக்குடம் அழகி னொடு சேவல் இருநான்குமே கோழி (ஆசி.நி. 122).

அழகுகாட்டு-தல் 5 வி. கை வாய் முதலிய உடல் உறுப்புக்களால் எள்ளலாகப் பிறர் இயல்புகளைச் சுட்டுதல். தம்பி, எங்கே மாமா நடக்கிற அழகு காட்டு (நாட்.வ.).

அழகுகாமாலை பெ. காமாலை வகை. (சீவரட்.183) அழகுகுளிசம் பெ. கழுத்து அணி வகை. (வட்.வ.) அழகுசப்பாணி பெ. நடக்கவொட்டாது குழந்தை கால் களை முடக்கும் ஒரு வாயு. (சாம்ப. அக.)

அழகுசம்பங்கி பெ. கொடிச்சம்பங்கி.

(மரஇன. தொ.)

அழகுசர்ப்பம் பெ. நக்கி நஞ்சைச் செலுத்தும் ஒருவகை அழகிய பாம்பு. (செ. சொ. பேரக.)

அழகுசிவப்பிமரம் பெ. அகத்தி. (மரஇன. தொ.)

அழகுசெண்டேறு-தல் 5 வி. விளையாட்டுக்காகச் சாரி வருதல். இவர் நெஞ்சினுள்ளே சிருங்கலமாக (மகிழ்ச்சிமிக) அழகு செண்டேறுகிறபடி (திருவாய். 7, 3, 1 ஈடு).

அழகுதுரைச்சி பெ. ஒரு செயற்கை நஞ்சு. (மூலி. அக.) அழகுதுரைப்பெண் பெ. இந்திரபாடாணம். (சங். அக.) அழகுதேமல் பெ. அழகுசெய்யும் பொன்னிறத் தேமல். (செ.ப.அக.)

அழகுபடுத்து-தல் 5 வி. அலங்காரம் செய்தல். (மானிட வியல் க. அக. ப.83)

அழகுபூச்சூடி பெ. நீரரளி. (சாம்ப. அக.) அழகுவண்ணத்தி பெ. மருதாணி.

156)

(சித், பரி, அக. ப.

அழகுவண்ணன் பெ. இதள், பாதரசம். (செ. சொ.

பேரக.)

அழகெருது பெ. வரிவகை. குமரக் கச்சாணமும் அழ கெருது உள்ளிட்ட குடிமை இப்பேர்ப்பட்டதுவும் (தெ.இ.க. 14, 154).

8

அழல்1-தல்

அழகெருதுக்காட்சிக்காசு பெ. வரிவகை. தேவதானங் களைக் கொண்டுவரும்படி அழகெருதுக்காட்சிக் காசும், காட்சி எருதுக்காசும் ஊர்க்கழைஞ்சுங் கொள்ளாதேய் (தெ. இ. க. 14, 145).

அழகோலக்கம் பெ. தன் பொலிவு தோன்றக் கொலு விருக்கை. எங்களை அழகோலக்கத்தே அடிமை கொண்டருளவேணும் (திருப்பா. 23ஆறா.).

அழங்கு-தல்

5 வி. அழிதல். வேள் அழங்க விகட

விழி திறந்தானை (பழமலையந். 58).

அழசிகம் பெ. எருக்கு. (மரஇன. தொ.)

அழசித்திப்பிலி (அழசிதிப்பிலி) பெ. ஆனைத்திப்பிலி

(முன்.)

அழசி திப்பிலி

பிலி. (முன்.)

(அழசித்திப்பிலி) பெ. ஆனைத்திப்

அழத்தியம் (அழத்தியன்) பெ. பெருங்காயம். (சாம்ப,

அக.)

அழத்தியன் (அழத்தியம்) பெ. பெருங்காயம். (வைத்.

விரி. அக. ப. 11)

அழத்துப்பச்சை பெ. மருக்கொழுந்து சக்களத்தி. (வைத்.

விரி, அக. ப. 24)

அழல்1-தல் 3 வி. 1. (நெருப்பு/மனம்) எரிதல். விளக்கு அழல்உருவின் விசியுறு பச்சை (பொருந.5). மாதிரம் அழல எய்து (பரிபா. 5, 26). பூழியர்கோக் கோதைக்கு அழலும் என் நெஞ்சு (முத்தொள். 120). வயிறு அழல வாள் உருவி வந்தானை (இயற். முதல் திருவந். 93). மூளும் நெருப்பு உயிர்த்து அழன்று பொங்கி (பெரியபு. 8,20). 2.சுடுதல். அழலும் செருஆழி ஏந்தினான் சேவடிக்கே (இயற். முதல் -திருவந். 48). கரந்தபுண் கடுத்து அழன்றில (கம்பரா. 6, 23, 102). 3. வெப்பம் அடைதல், வெதும்புதல், காந்துதல். தேரோர்க்கு அழன்ற வேலினை எனவும் (சிறுபாண்.234). கண் அழலத் தலை பறித்துக் கையில் உண்டு (தேவா. 4, 5, 7). முலை பொலிந்த மார்பம் அழலஅறைந்து கொண்டு (புறநா. 25, 10 ப.உரை). அத்தரை புழுங்கி அழன்று (கலிங். 93). 4. ஒளிர்தல், ஒளிவீசுதல். பாண்டில் விளக்குப் பரூஉச் சுடர் அழல (பதிற்றுப். 47, 6). அங்கியின் உருவாகி அழல் வதோர் பொங்கரவனை (தேவா. 5,79,5). திருமணி விளக்கம் திசைநின்று அழல (பெருங். 2, 11, 71). மணி விளக்கழலும் பாயல் (கம்பரா. 1, 21,67). 5.உறைப்பாதல். (செ. ப. அக.) 6. சினங் கொள்ளுதல். போர்ப் பறை முழக்கிலும் ஆர்ப்பி னும் அழன்று (பெருங், 3,20,30). அழல விழித் தானே அச்சோ அச்சோ (பெரியாழ். தி. 1, 9, 5).