பக்கம்:பெருஞ்சொல்லகராதி.pdf/579

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அழல்'

அழன்று சீவக ஏழுயர் போதகம் இனத்தொடு ஏற் றதே (சீவக. 775). அழன்று வெள்ளியங்கு அறைந்த வாறு அவ்வுரு அடைந்தோன் (செ. பாகவத. 9, 14, 24). அழன்று பொரு வாலிகாலன் (நூற்று. அந். 18). 7. (கள்) கடுப்புடையதாதல். ஆண்டு உற அணைந்து வேகித்து அழல்கின்ற மதுவின் தண்டோடு ஈண்டி (சூளா. 920). 8. பொறாமை கொள்ளுதல். (செ.

ப . அக.)

அழல்' (அழலம், அழலி) பெ. 1. தீ, நெருப்பு. நல் லோள் கணவனொடு நனி அழல் புகீஇ (தொல். பொ. 77, 30 இளம்.). ஒள் அழல் புரிந்த தாமரை (புறநா. 11, 17). நாடுகாண் அவிர்சுடர் அழல் (பதிற்றுட், 40,29). அழல்போல்

செவிய சேவல் (நற். 352,4). அழல் புரை குழை (பரிபா. 4,66). அழல்போலும் மாலைக்குத் தூதாகி (குறள். 1228). மழைக் கருவுயிர்க்கும் அழல்திகழ் அட்டில் (சிலப். 10,143). நிழல்திகழ் மழுவினர் அழல் திகழ்நிறத் தர் (தேவா. 1,78,5). அழல்படு புகைக்கொடி எடுத்தன (கலிங். 413). ஆர் அழல் சிகையெனக் கொப்புளிக்கும் (மீனா. பிள். 70). ஐவர் சினத்தின் அழலை வளர்க்கின்றாய் (பாரதி. பாஞ்சாலி. 252, 50). அடித்து நொறுக்கி அழலிற் காய்ச்சி (நாஞ். மரு. LDIT GT. 8, 96). 2. தீக்கொழுந்து. தீயழல் துவைப் பத் திரிய விட்டெறிந்து (பரிபா. 53). நெருப் பழல் சேர்ந்தக்கால் நெய்போல்வதூஉம் (நாலடி. 124). அழல் மல்கும் எரியொடு மணி மழுவேந்தி யாடுவார் (தேவா. 1, 78, 7). 3. கதிரவன். அழற் கதிர் இயங்கு அற அலங்கிணர் அசோக நிழல் (சூளா.442). 4. ஒளி. அல்லிடை மணி சிறந்து அழல் இயற்றல் போல் (கம்பரா. 4, 9, 16). விளக்கு அழற்கு ஒழியா (செ.பாகவத. 1, 2, 14). 5. வெப்பம். அழல் அவிர் நீளிடை நிழலிடம் பெறாஅது (நற். 29,2). அழல் அவிர் ஆரிடை (கலித். 2,8). அழல் நறுந்தேறல் ஆர மாந்தி (பெருங்.1,40,78). பூ நறவு ஆர்ந்து அழல் ஊர்தரச் சுழலுங்கண்ணினன் (சீவக. 939). சினக்காமன் வாளியும் அழல் பிரிந் தன (கம்பரா. 2, 4, 202). 6.காய்ச்சல். (சாம்ப. அக.) 7. எரிவு. (செ.ப.அக.) மருந்து அழலும் (தைலவ. 123). 8. உறைப்பு, காரம். அழல்காய் (தைலவ. 54|செ. ப. அக). 9. சினம், கோபம். அழல் திகழ்ந்து இமைக்கும் அஞ்சுவரு நெடுவேற் காரியும் (சிறுபாண். 94). 10. நஞ்சு. அழல் உமிழ் அகன் பைப் பாம்பு (நற். 75, 2). அழல் வாய் நாகத்து ஆர்எயிறு (சிலப். 5, 124). அழல் கண் நாகம் (மணிமே.23,69). அழல்வாய் அரவும் (தேவா. 2, 18, 3. அழல் உமி 2,18,3). ழும்... அரவணையான் (இயற். நான்முகன் திருவந். 10). பெ. சொ . அ.1-29

44

19

அழல்விழி -த்தல்

ஐந்தலை அரவின் சீற்றத்து ஆர் அழல் குளிக்கலுற் றார் (சீவக. 746). கருங்கண் புற்றத்து அழல் அணிந் தெழுந்த ஐவாய் அருமணி ஆடும் நாம் (சூளா. 555). 11. நரகம். அழல் நம்மை நீக்குவிக்கும் (தேவா. 6,93,4). 12. (தீ இயல்புடையதெனக் கருதப்படும்) செவ்வாய்க்கோள். அழல் சென்ற மருங்கின் வெள்ளி ஒடாது (பதிற்றுப். 13,25). 13. (தீ இயல்புடைய தெனக் கருதப்படும்) கார்த்திகைநாள். அழல் சேர் குட்டத்து (சிலப். 23, 134.) அழல் எனும் மீனவர்க் கத்து அறுவரும் (கந்தபு. 1, 11, 126). 14. பதினெட் டாவதாகிய கேட்டைநாள். எரியழல் கிளந்த இந்திரனாள் சேட்டையும் கேட்டை (பிங்.256).

அழல்3 பெ. கொடுவேலி, (வைத். விரி. அக. ப. 24)

அழல்' பெ. பெ. கள்ளி. (முன்.)

அழல் பெ. எருக்கு. (முன்.)

அழல்சொரிந்தவுப்பி பெ. கல்லுப்பு. (சாம்ப. அக.)

அழல்நீர் பெ. வெந்நீர்.

அழனீரொழுகி

அனைய

சடையும் (தேவா. 7, 94, 1). அருங்கனக பாத்திர முன் மரப்பலகை யந்தம் அழல் நீரால் சுத்தியுறும் (சிவதரு. 11,32).

அழல்மகள் பெ. (தீயில்பிறந்த) துரோபதை. கொடி அழல் மகட்கு மென்துகில் அளித்த (குசே. பாயிரம்

10).

அழல்வண்ணன் பெ. (நெருப்புநிறமுள்ள)

சிவன்.

அழல் வண்ணன் இடம் கலிக்கச்சி அநேகதங் காவ தமே (தேவா. 7, 10, 3).

அழல்விதை

(மலை அக.)

(அழல்விரை ) பெ. நேர்வாள வித்து.

அழல்விரணம் பெ. 1. நெருப்புச்சுட்டதால் உண்டாகிய புண். (செ. ப. அக. அனு.) 2. காந்துகின்ற குடல் புண். (மருத். க.சொ.ப. 141)

அழல்விரியன் பெ. எரிவிரியன் பாம்பு. (வின்)

அழல்விரை (அழல்விதை).

பெ.

(வைத், விரி. அக. ப.24)

நேர்வாளவிதை.

அழல்விழி -த்தல் 11 வி. சினத்தோடு நோக்குதல். அங் கண் ஏவ அழல் விழித்து அஞ்ச (திருவால. பு. 14, 5).