பக்கம்:பெருஞ்சொல்லகராதி.pdf/580

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அழல்வினை

அழல்வினை பெ. நெருப்பில் பொன் இரும்பு முதலிய உலோகங்களை உருக்கிச்செய்யும் தொழில். அழல் வினை அமைந்த நிழல்விடு கட்டி (பதிற்றுப். 81,16).

அழலம் (அழல்2, அழலி) பெ. தீ, நெருப்பு. அடங் காரை எரியழலம்புகவூதி (திருவாய். 4,8,8)

அழலம்பூ பெ. தீம்பூமரம். அழலம்பூ நறவார்ந்து

(சீவக. 939).

3.

அழலவன் (அழலான். அழலோன்) பெ. 1. தீக்கட வுள், அக்கினிதேவன். (செ.ப. அக.) 2. கதிரவன். அழலவன் குளித்த பின்னை (சூளா.1701). செவ்வாய். அழலவன் பௌமன் அங்காரகனே சேய் இவை செவ்வாய் சிறந்த பெயரே (பிங்.230). அழலாடி பெ. நெருப்பில் ஆடுபவனாகிய சிவன். அழ லாடி தற்பரன் நித்தன் நீறணி கடவுள் (பிங். 94). அழலான் (அழலவன், அழலோன்) பெ. கதிரவன். ஆரழலான் பெயரான் அணிவெஞ்சிலை (சூளா. 1240. அழலானி பெ. வாட்டம். அழலானியையுடைய தாமரைப்பூவில் (அமலனாதி. தனியன். வியாக். ப.6). அழலி (அழல்', அழலம்) பெ. நெருப்பு. அனல் எரி அழலி கனல் அரி கருநெறி ... நெருப்பின் பெயரே

(பிங். 44).

அழலிக்கை பெ. எரிச்சல், என் உடைமையைக் கொடுக்க உனக்கேன் இத்தனை அழலிக்கை (ராட்.

அக.).

அழலிடமேந்தி பெ.

இடக்கையில் நெருப்பை ஏந்தி யிருக்கும்) சிவன். (செ.ப அக. அனு.)

அழலுடைக்கடவுள் பெ. கதிரவன். அழலுடைக்கட வுளை அரவு சேர்ந்தென (சீவக.109).

அழலூட்டு-தல் 5 வி. தீயுண்ணச் செய்தல்.

அரியன

முப்புரங்கள் அவை ஆர் அழலூட்டலென்னே (தேவா. 7,99,8).

அழலேந்தி பெ. (நெருப்பைக் கையிலுடைய) சிவன். அந்தகாரி அழலேந்தி முக்கணன் விமலன் (ஆசி.நி. 2). அழலை1 பெ. தொண்டைக் கரகரப்பு. (செ, ப. அக.) அழலை2 பெ. உடம்பின் உட்சூடு. (சாம்ப. அக.) அழலை பெ. ஆயாசம், களைப்பு. (செ. சொ. பேரக.) அழலை பெ. ஒருவகைப்பாம்பு. (முன்.)

4

50

அழற்குத்து-தல்

அழலைக்கிராணி பெ. உடம்பின் வெப்பத்தால் ஏற்படுங் கழிச்சல். (சாம்ப. அக.)

அழலோம்பு-தல் 5 வி. வேள்வித்தீவளர்த்துக் கடவுளரை வழிபடுதல். மழைவளந்தரூஉம் அழலோம்பாளன் (மணிமே. 5,34). அழலோம்பும் அப்பூதி (தேவா. 4,

12, 10).

அழலோன் 1. (அழலவன், அழலான்) பெ. கதிரவன். பனிக்கதிரல்லை நீ அழலோய் ( கந்தபு. ஆற்றுப். 24). செவ்வாய். (சூடா. நி./செ. சொ. பேரக.)

2.

அழவனம் பெ. மருதோன்றி. (வட்.வ.)

அழற்கங்கை பெ. கருக்குழியிலுண்டாகும் பனிக்குடநீர்.

(செ. சொ. பேரக.)

அழற்கண்ணன் பெ. (நெருப்பை நெற்றிக்கண்ணாகக் கொண்ட ) சிவன். (வின்.)

அழற்கண்வந்தோன் பெ. (சிவனுடைய நெருப்புக்

கண்ணில் தோன்றிய)

வீரபத்திரன்.

உக்கிரன்

அழற்கண்வந்தோன் உமைமகன் வீரபத்திரன்

பெயர் (பிங். 114).

அழற்கதிர் பெ. கதிரவன். வேலை அழற்கதிர்படிந்த வியன் கங்குல் (பெரியபு. 28,8).

அழற்கரத்தோன்

பெ. (கையில் நெருப்பு ஏந்திய)

சிவபிரான். ஐந்து முகத்தோன் அழற்கரத்தோன் அண்டரெலா முய்ந்திட நஞ்சுண்டோன்

1, 3).

(உரி.நி.

அழற்கருமம் பெ. தீயில் படைக்கும் சமயச்சடங்கு. இல் வாழ்வுற்றோர் தர்மம் அழற்கருமம் கொடுத்தல் (கூர்மபு. பூருவ. 2,12).

அழற்காமாலை

அக. அனு.)

பெ. காமாலை நோய்வகை. (செ. ப .

அழற்காய்' பெ.மிளகு. தோகைவிளங்கு அழற்காய்

(தைலவ.54/செ. ப. அக,)

அழற்காய் பெ. மிளகாய். (சாம்ப. அக.)

அழற்குட்டம் பெ. 1. கார்த்திகை. ஆடியல் அழற் குட்டத்து ஆரிருள் அரையிரவில்

(புறநா.229,1).

2. நெருப்புக்குழி. பெய்யா வருநஞ்சும் பேரழற் குட்டமும் (சூளா.1946).

அழற்குத்து-தல் 5 வி. 1. மணம் மிகுதல். (வட்.வ.) 2. கொடிய நாற்றம் வீசுதல். (சாம்ப. அக.)