பக்கம்:பெருஞ்சொல்லகராதி.pdf/581

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அழற்கொடி

அழற்கொடி பெ. தீக்கொழுந்து. நகுதொறும் அழற் கொடி நடுங்கு நுண்துளி (சூளா. 1207).

அழற்சி பெ. 1. எரிவுணர்ச்சி. வலக்கணும் அழற்சி நீங்கா (கூர்மபு. பூருவ.29,124). 2. உறைப்புச் சுவை. புளிப்புக் கைப்பு அழற்சி உப்பு பகர் நிறைவு குறைவு சமமாய்ப் புசிப்போன் (ஞானவா. உபசாந்தி. விரதசூ. 13). 3. கோபம். அது அவள் கண்டு அகத்தறாஅ அழற்சியில் (பெருங்.2, 16, 47). 4. அழுக்காறு. (வின்.) 5. காயம் போன்றவற்றால் உடலில் ஏற்படும் வீக்கம். (உடலியங். க. சொ.) 6. உள் ளழற்சி. (செ. சொ. பேரக.) 7. கால் நடைகளுக்குச் சுரமுண்டாக்கும் ஒரு நோய். (பே.வ.)

அழற்சிசுரம் பெ. ஒத்துக் கொள்ளாத உணவுப்பண்டம் உண்பதால் ஏற்படும் காய்ச்சல். (சாம்ப. அக.)

அழற்சிநஞ்சு பெ. உடம்பின் உள்ளுறுப்பை வெந்து போகச் செய்யும் நஞ்சு அல்லது நஞ்சு கூடிய மருந்து

(சாம்ப. அக.)

அழற்சிவிழி பெ. அழற்சியுண்டாக்குங்கண்ணோய். (சாம்ப

அக.)

அழற்சூடி பெ. கொடுவேலி. (மரஇன. தொ.)

அழற்படை பெ. நெருப்பைக் கக்கும் போர்க்கருவி. தழற்புகை நவின்ற கைத் தானை வீரர்தம் அழற் படையொடு புகுந்து அமைக காவலே (சூளா.905).

அழற்பால் பெ. 1. எருக்கம்பால். (வைத். விரி. அக.ப. 24) 2. எருக்கு. (பச்சிலை. அக.)

அழற்பாறைக்காலம் பெ. அக்கினிக்குழம்புப் பாறைக் காலம். (மானிடவியல் க. அக. ப.88)

அழற்பித்தம் பெ. பித்தநோய்வகை. (வின்.)

அழற்பிரவை பெ. நரகவகை. (வின்.)

அழற்புண் பெ. சிவந்து இரத்தம் வடியும் புண்.

ப. அக.)

(செ.

அழற்புற்று பெ. வெள்ளைவிழியில் எரிவுணர்ச்சிதரும் சதையை உண்டாக்கும் ஒரு நோய். (சீவரட்.353)

அழற்றடம் பெ. குளிர் காய்வதற்குப் பயன்படுத்தும் தணல்சட்டி. அழற்றடம் புரையும் அருஞ்சுரம்

(திருக்கோ.202).

அழற்றி பெ. எரிவு. (செ. ப. அக. அனு.)

அழற்றி2 பெ. சினம். (முன்.)

பெ. சொ. அ.1-29 அ

4

51

அழான்

அழற்றி' பெ. அழுக்காறு. (முன்.)

அழற்றி பெ. அழலச் செய்வது. (செ. ப. அக.)

அழற்று-தல் 5 வி. வெம்மை செய்தல். அழற்றிய பல்கதிர் (கந்தபு. 5, 1, 6). கீழெழு செந்தீக் கிளை பிரித்து அழற்ற (பெருங். 1, 43,192).

அழறு (அளறு') பெ. சேறு. அழறு அலர் தாம ரைக்கண்ணன் (நம். திருவிருத். 58).

அழன் (அழனம்1) பெ. 1. பிணம். அழன் என்பது பிணம் (தொல். எழுத். 355 இளம்.). அழக்கடக் கொழும்புகை (கச்சி. காஞ்சி. கழு. 61). 2. பேய். அழனே குணங்கு குணபாசி... பேய் பெயர் கூறும்

(பிங். 209).

அழன்மண் பெ. உவர்மண்.

அழன்மண்வெதுப்புங்கோபி

செடி. (சாம்ப. அக.)

(சாம்ப. அக.)

பெ.

குழல்ஆதொண்டைச்

சவ

அழனம்' (அழன்) பெ. 1. பிணம். அழனமும் மும் குணபமும் பிரேதமும் பிணமே (பிங்.1086). 2. எலும்பு. எலும்பு என்பு அழனம் அத்தி களே பரம் (நாம.நி.594).

அழனம்' பெ. 1. வெம்மை. அழனமும் வெம்மை (பிங். 1863). 2. தீ. அழலும்... அழனம் என்ப (முன்.

3101).

அழனாகம் பெ. ஒரு நச்சுப்பாம்பு. (வின்.)

அழனிறக்கடவுள் பெ. (நெருப்பு வண்ணமுடைய) சிவபிரான். ஆலவாயின் அழனிறக் கடவுள் (இறை. அக. 1 உரை).

அழனீர் பெ. தென்னங்கள். (சாம்ப. அக.)

அழாஅல் பெ. அழுகை. அழாஅல் மறந்த புன்தலைச் சிறாஅர் (புறநா. 46, 5-6).

அழாக்கு (ஆழாக்கு) பெ. அரைக்காற்படி என்னும் முகத்தல் அளவு. வீரியம் அழாக்கு உடற்பித்தம் உழக்கு (தணிகைப்பு. அகத். 308).

அழாந்தை பெ. அழானுக்குத் தந்தை. அழான் புழான் என நிறுத்திப் பொருந்தின செய்கை செய்து

அழாந்தை புழாந்தை என முடிக்க (தொல். எழுத். 349 இளம்.).

அழான் பெ. பண்டைய உரையாசிரியர் இலக்கணவிதிக்கு எடுத்துக்காட்டு வேண்டும்போது வழங்கிய ஆடவர் பெயர் களுள் ஒன்று. அழான் புழான் என நிறுத்திப் பொருந்தின செய்கை செய்து (Loir.).

...