பக்கம்:பெருஞ்சொல்லகராதி.pdf/585

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

4

அழிதோடம்

அழிதோடம் பெ. கருப்பம் அழிந்த குற்றம். (சித். பரி.

அக. ப. 155)

அழிந்தவள் பெ. கற்பிழந்தவள். (செ. ப. அக.)

...

அழிந்தோரைநிறுத்தல் பெ. 1. வேளாண் மாந்தர் இயல் புகளுள் ஒன்றாகிய நிலைதாழ்ந்தோரை ஆதரிக்கை. ஆணைவழிநிற்றல் அழிந்தோரை நிறுத்தல் வேளாண்மை மைந்தர்க்கோர் ஈரைந்தே (திவா. 2700). 2. எண்வகைக் காட்சியுள் ஒன்று. அறப்பழி மறுத்தல் அழிந்தோரை நிறுத்தல் எண்வகைக் காட்சி (பிங். 428).

அழிநோய் பெ. குட்டநோய். (நாட்.வ.)

800

அழிப்படு-த்தல் 11 வி. நெற்கதிரைக் கடாவிட்டு உழக்கு தல். ஆள் அழிப்படுத்த வாள் ஏர் உழவ (புறநா.

368, 13).

...

அழிப்பன்1 பெ. இல்லையாக்குபவன். அசுரர்களை கருவழித்த அழிப்பன் ஊர் (பெரியாழ். தி. 4, 8, 6).

அழிப்பன் 2 பெ. துன்புறுபவன், மனக்கலக்கமடைபவன். அழிப்பனாய் வாழமாட்டேன் (தேவா. 4,52,2).

அழிப்பாங்கதை பெ. விடுகதை. (திருநெல். வ.)

அழிப்பாய்ச்சு-தல் 5 வி. வீட்டின் முன்புறம் அல்லது முன் திண்ணையில் மறைப்பு வைத்து அடைப்புச் செய்தல். அழிப்பாய்ச்சின வீடு (முன்.).

அழிப்பாளன் பெ. தட்டான். அழிப்பாளனானவன் ஆபரணாதிகள் என்று பாராதே உருக்கி அழிக்கு மாபோலே (திருவாய். 5,8,1ஈடு).

அழிப்பாளி பெ. வீண் செலவு செய்வோன். (பே.வ.)

அழிப்பான் பெ. (இக்.) (மையாலும் பிறவற்றாலும் எழுதிய) எழுத்தை அழிக்கப் பயன்படும் இரப்பர்த் துண்டு. (அலுவலக வ.)

அழிப்பு பெ. 1. இல்லையாக்குகை. கருமம் அழிப்பு அளிப்பு (இயற். முதல்திருவந். 5). 2.குற்றம்.

நவை

...

அழிபடு-தல்

அழிப்பு குறை (திவா. 1684).

6 வி.

...

1.சிதைதல்.

2.செலவாதல். (முன்.)

காசு

(செ.ப. அக.)

55

அழிமேய்ச்சல்

அழிபடை பெ. தோற்று ஓடும் சேனை. அழிபடை அரண்காத்தன்று (புற. வெண். 93 கொளு). அழிபடை தாங்கல் ஆற்றும் ஆடவர் (கம்பரா. 6, 26, 165).

அழிபயல் பெ. தீய வழியில் செல்லும் பையன். (வட்

வ.)

அழிபாட்டுச்சின்னம் பெ. காலத்தால் அழிந்துகிடக்கும் வரலாற்று அடையாளம். கொடுமணலில் காணும் அழிபாட்டுச் சின்னங்களால் பழந்தமிழர் நாக ரிகம் புலப்படுகிறது (செய்தி.வ.).

அழிபாடு பெ. 1. அழிவு. அழிபாடு இலாத கடலின் (தேவா. 3, 86,8). 2. கோயில்கோட்டை போன்றவற்றின் இடிபாடு. எங்களூர்க்கோட்டை அழிபாடு பார்ப் போரைக் கலங்கச் செய்யும் (செய்தி.வ.).

அழிபு பெ. 1. வருத்தம். அழியல் ஆயிழை அழிபு பெரிதுடையன் (குறுந். 143).2. அழிவு. ஒன்னார் நாடு அழிபிரங்கின்று (புற. வெண். 43). 3. தோல்வி. அழிபு அடல் ஆற்றல் அறிமுறை ஏன்று (புற.

வெண்.173).

அழிபுண் பெ. அழுகு இரணம். (செ. ப. அக.)

அழிபெயல் பெ. மிக்க மழை. அழி துளி கழிப்பிய அழிபெயல் கடைநாள் (நற். 89,4). அழிபெயல் காலை (பரிபா. 10, 1).

அழிம்பன் பெ. தீமை செய்பவன். (பே.வ.)

அழிம்பு பெ. தீமை, தீம்பு. (முன்.)

அழிம்பு 2 பெ. 1. வெளிப்படையான பொய். (செ.ப. அக. அனு.) 2. அவதூறு. (முன்.) 3. உரிமையற்ற முறை யீடு. (முன்.)

அழிமதி பெ. 1. கெடுமதி. உனக்கு ஏன் இந்த அழிமதி (பே.வ.). 2. அழிமானம், சேதம். (இலங்.வ.)

அழிமானம் பெ. 1. சேதம். (நாட். வ.) 2. செலவழிவு. (முன்.)

அழிமுதல் பெ. மூலதனக்கேடு. (பே.வ.)

அழிமேய்ச்சல் பெ. பயிர் முழுதும் அழியக் கால்நடை களை விட்டுமேய்க்கை. (தஞ்.வ.)