பக்கம்:பெருஞ்சொல்லகராதி.pdf/590

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அழுங்கு-தல்

கின்றேன்

உடையாய் (திருவாச. 24, 10). அருந்தும்

மெல் அடகு ஆர் இட அருந்தும் என்று அழுங்கும் (கம்பரா. 5,3,15). அல்லலுற்று அழுங்கிச் சோர அங்கையில் தீண்டிற்றன்றே (பெரியபு. 25, 24).

...

0

நெஞ்சு அழுங்கா நின்றது (சிலப். 13.91, அடியார்க்.) நொதுமலர் வந்து அறியுறல் கூடு மொன்றோ திருமேனி அழுங்குவதே (அம்பி. கோ. 12), ஈசன் ஒரு தாளில் நின்றான் என்று அழுங்குவான் (கடம்ப. பு. 507). அல்லல் உற்று அழுங்குகின்ற அந்தணன் வதனம் நோக்கி (செ. பாகவத. 10, 53, 4), மொத் துண்டு அழுங்கு அஞர் எய்திய யாக்கை (பாப்பா. 47, 3).2. தளர்தல், துவள்தல். மலர்ந்த பொய் கைப் பூக்குற்று அழுங்க அயர்ந்த ஆயம் (நற்.115, 1-2). அல்லலின் அழுங்கினை (கம்பரா. 2, 13,56). 3. இரங்குதல். நாடு பல இறந்த நன்னராட்டிக்கு ஆயமும் அணி இழந்து அழுங்கின்று (அகநா. 165, 6-7). கையில் ஒளித்தான் முகங் கண்டு அழுங்கி (சிலப். 17,25,3). அழுங்கினார் ஐயுறவு தீர்ப்பர் ஐயனாரே (தேவா. 6, 9, 10).அல்லல் உற்று அழுங் கும் நெஞ்சிற் கட்டியங்காரன் ஆழ்ந்தான் (சீவக. 438). 4. அழுதல். அந்திப்பொழுது வர உள்ளம் புழுங்கி அழுங்கி (மதுரைச். உலா 303). 5. உருவழிதல். பிணன் அழுங்கக் களன் உழக்கி (புறநா. 98,5). 6. கெடுதல், இழத்தல். நின் எயிறு கெழு துவர்வாய் இன்னகை அழுங்க (அகநா. 29,13). உணர்வு அழுங்க உயிர்த்தனள் ஆவியே (கம்பரா. 1,20,30). கொழுங்கயற் கண்ணினாளைச் சீவக குமரன் சூழ்ந்தால் அழுங்கச் சென்றணைதல் அனங்கற் கும் ஆவதுண்டோ (சீவக. 752). 7. தவிர்தல். பழங் கண்ணோட்டமும் நலிய அழுங்கினன் அல்லனோ அயர்ந்த தன் மணனே (அகநா. 66,25). அரை நாள் வேட்டம் அழுங்கின் (பெரும்பாண். 111). தேர் செலவு அழுங்கத் திருவிற்கோலி ஆர்கலி... தொடங் கின்றே (ஐங். 428). நெஞ்சே காதலி ஊர் கவ்வை அழுங்கச் செலற்கு (கார்நாற்.28).

...

அழுங்கு-தல் 5 வி. அஞ்சுதல். அழுங்கா மனத்து அண்ணல் (கம்பரா. 5, 1,51).

அழுங்கு-தல் 5.வி ஒலித்தல். அழுங்கிய கழற்கால் வீரன் (கந்தபு. 3, 2, 1).

அழுங்கு - தல் 5 வி. செறிதல். அகலிடு கொழும் புகை அழுங்கலின் (கம்பரா. 1, 14, 27).

அழுங்கு (அழுங்காமை', அளுங்கு) பெ. எறும்பு தின்னும் விலங்கு. ஆடும் குதிரையும் மான் அழுங் கும் மறியெனல் (பிங். 2589).

46

அழுத்தம்"

அழுங்கு' (அழுக்காமை, அழுக்கு, அழுங்காமை

பெ. கடலாமைவகை. (வின்.)

அழுங்கு? பெ. கற்றாழை, குமரி. (பச்சிலை. அக.)

அழுங்கு பெ. பாலையாழ்த்திறம் இருபதனுள் ஒன்று. திராடம் அழுங்கு தனாசி இருபதும் பாலை யாழ்த்திறம் என்ப (பிங். 1381).

...

அழுங்குப்பிடி பெ. விடாப்பிடி. (வின்.)

அழுங்குவி-த்தல் 11 வி. துன்புறுத்துதல். அன் புருகு நெஞ்சம் அழுங்குவிக்கு மாலை (சீவக.2051).

அழுங்குவி'-த்தல் 11வி. விலக்குதல், தவிர்த்தல். உடன்போக்கு அழுங்குவித்தவிடத்துத் தலைமகனும் அந்நாள் வரைவொடு விரைந்து புகுவானாம் (இறை. அக. 23 உரை). சொல்லும் செயலும் ஒவ் வாமைக் குற்றம் அவர்க்கு எய்தும் அஃது எய்தா வகை அழுங்குவி என்பது கருத்து (குறள்.1154 பரிமே.).

அழுங்கோடு பெ. அழுங்கின் செதிள். (செ.ப.அக.)

அழுத்தக்காரன் பெ. 1. பொருள் செட்டுடையவன், உலோபி. (நாட். வ.) 2. அழுத்தமாகச் செயல்படுபவன், ஆழமானவன். (செ.ப.அக.) எதையும் குறை காணத்துருவித்துருவி ஆய்பவன். அழுத்தக்காரனுக்

3.

குப் புழுத்த கத்தரிக்காய் (பழமொழி).

அழுத்தகம் பெ. அச்சகம். சுன்னாகம் தாருக்கும் பாராட்டுக்கள் உரியன த.கோ.பதிப்புரை).

அழுத்தகத் (நான்கா. அ.

4.

அழுத்தம்1 பெ. 1.கடினம், கெட்டி. அழுத்தமான கட்டடம் (நாட் .வ.). 2.உறுதி, திடம். நெஞ்சழுத் தம் உடையவன் (பே.வ.). 3. நெருக்கம். இது மிக அழுத்தமாக நெய்யப்பட்ட ஆடை (நாட்.வ.). கண்டிப்பு. அவன் பேச்சு அழுத்தம் திருத்தமானது (முன்.). 5. பிடிவாதம். இத்தனை பேர் சொல்லி யும் அவன் ஒரே அழுத்தம் காட்டுகிறான் (முன்.). 6. உலோபம். அவன் காசில் அழுத்தமுள்ளவன் (முன்.). 7. ஆழ்ந்தறியும் இயல்பு. அழுத்தமான படிப்புடையவன் (பே.வ.).

அழுத்தம் 2 பெ. (அறிவியல்) அலகுபரப்பின் மீது செயற்படும் நீரின் எடை. நீர்மத்தின் அழுத்தம் அதன் உயரத்தையும் அடர்த்தியையும் பொறுத்தது (அறிவி. 8 ப.13).