பக்கம்:பெருஞ்சொல்லகராதி.pdf/591

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அழுத்தமானி

அழுத்தமானி பெ. திரவத்தின் அழுத்தத்தை அளக்கும் கருவி. (அறிவி. 8 ப.79).

அழுத்தவரைவி பெ. ஒலியலைகளின் அழுத்தவேறுபாடு களைப் பதிவு செய்யும் கருவி. (கலை. அக. 2 ப. 24)

அழுத்து 1-தல்

பெ. 1. ஒன்றை இன்னொன்றனுள் பதியச் செய்தல், பதித்தல். மூவன் முழுவலி முள் எயிறு அழுத்திய கதவின் (நற். 18,2). எழினி பல் லெறிந்து அழுத்திய வன்கண் கதவின் (அகநா. 211, 13-14). மைதீர் பசும்பொன்மேல் மாண்ட மணி அழுத்தி (நாலடி. 347). வண்ண நல்மணியும் மரகத மும் அழுத்தி நிழல்எழும் திண்ணை (பெரியாழ். தி. 4, 4, 3).பொன்னின்கலசம் ஒன்றும் இதின் வாயின் அழுத்தின சாந்திவர்ணம் ஒன்பதும் உள்பட (தெ.இ.க.22, 24). அழுத்தும் சுடர் மணிப் பூண் அன்ன (சங்கர. கோவை 61). சிவாயம் என்று திரிபுண்டரம் அழுத்தி எழில் சேர் நுதலினார் (திருக்காளத். பு. 20,3). 2. தைக்கச் செய்தல், பாயச் செய்தல். பகழி வாங்கிக்கடுவிசை அண்ணல் யானை அணிமுகத்து அழுத்தலின் (குறிஞ்சிப். 171), கலைநிறத்து அழுத்திக் குருதி யொடு பறித்த செங்கோல் வாளி (குறுந். 278). தெவ்வுக்குன்றத்துத் திருந்துவேல் அழுத்தி (பரிபா. 19, 102). வாள் கோடுற அழுத்தலின (சீவக. 278). ஆறும் ஆறும் அயில் வெங்கணை அழுத்த (கம்பரா. 3,1,31). இருகணையால் கொடியை வீழ்த்து

3.

ஆகத்து அழுத்தினான் (பாரத வெண். 685). நடுதல். வினைஞர் முடிநாறு அழுத்திய நெடுநீர்ச் செறுவின் (பெரும்பாண். 211-212). நீருறு செறுவில் நாறுமுடி அழுத்த (நற். 60.7). 4. செறித்தல், அணி தல். வாயுறை அழுத்திய வறிது வீழ்காதின் (நெடு நல். 140). சில்போது கொண்டு பல்குரல் அழுத்திய அந்நிலை (நற். 42, 9-10). 5. கடித்தல். களிற்றுக் கோட்டன்ன வால் எயிறு அழுத்தி விழுக்கொடு விரைஇய வெண் நிணச்சுவையினள் (புறநா. 371,

21-22). 6. அமிழ்த்துதல், ஆழ்த்துதல். தன் கருணை வெள்ளத் தழுத்தி வினைகடிந்த வேதியன் (திரு வாச.8,5). அழுத்திய பெருஞ் சினத்து அரக்கர்

(கம்பரா. 6, 18, 41).

அழுத்து--தல் 5 வி. உறுதியாக்குதல். இச் செயலை முடித்துத் தருவேன் என்று அழுத்திக் கூறினான்

(பே.வ.).

அழுத்து-தல் 5 5 வி. 1. வற்புறுத்துதல். நீ இதனை மறந்து விடவேண்டும் என்று நான் அழுத்திச்

461

அழுந்து2-தல்

சொல்கிறேன் (பே.வ.). 2. ஒத்தல். சங்கு அழுத்தும் உங்கள் தனிக்கழுத்து (கூளப்ப. காதல் 186).

அழுத்து' பெ. 1. பதிவு. நகநுதி அழுத்தைக் காட்டி (திருப்பு.90), 2. அமுக்குகை. ஓர் அழுத்து அழுத் தினான் (பே.வ.).

அழுத்துவி-த்தல் 11 வி. மூழ்குவித்தல். ஆனந்த வெள்ளத்து அழுத்துவித்தான் (திருவாச. 12, 11).

அழுதுவடி-தல் 4 வி. பொலிவின்றி இருத்தல். (பே.வ.) அழுதுவழிதல் 4 வி. பொலிவின்றி இருத்தல். ( முன்.)

அழுந்த வி. அ. இறுக. அவரை அழுந்தப் பற்றி ... அட்டதை (புறநா. 77, 10-12). மடித்த செவ்வாய் அழுந்தக் கவ்வி (பெருங். 1,46, 38).

...

சில்

அழுந்து1-தல் 5வி. 1. ஒரு பொருள் இன்னொரு பொருளில் பதிதல். சுவல் அழுந்தப் பலகாய ஓதிப் பல் இளைஞரும் (புறநா. 139, 1-2). மாமூது அள்ளல் அழுந்திய சாகாட்டு எவ்வம் தீர (அகநா. 140, 12-13). முழங்குதிரைப் புதுமணல் அழுந்தக் கொட்கும் தேர் (நற்.135, 7). திங்கட் கொழுந் தர் நஞ்சு அழுந்து கண்டர் (தேவா. 4, 64, 1). மணிமார்பு அழுந்த விரைவோடுபுல்லி (கம்பரா.3, 10,65). அத்திரிதான் பூருவத்தில் மந்தரம் ஒன்று அழுந்தி உறும் (சிவதரு. 12,35). சாந்தம் கழியு மாறு அழுந்தத் தேய்த்தும் (சேதுபு. நாட்டுச்.26). 2. (நீருள்) மூழ்குதல், ஆழ்தல். வேய் நீர் அழுந்து தன் கையின்விடுகென (பரிபா. 21, 41). இடைக் கயத்து அழுந்த (பெருங். 1, 36,161). ஆழ்குழிப் பட்டு அழுந்துவேனுக்கு (தேவா. 7, 5, 1). துன் பக்கடலகத்து அழுந்த வேண்டா (சீவக. 1914). அருளார் அமுதப் பெருங்கடல்வாய் அடியார் எல் லாம் புக்கு அழுந்த (திருவாச. 32, 3). குருதிச்செம் புனல் வெள்ளத்து அழுந்தாநின்றாள் (கம்பரா. 5, 2, 92). சுழிக்கே அழுந்து நதிக்கொரு வான்புணை தோன்றி (அம்பி.கோ. 51). ஆசைப் 51). ஆசைப் பௌவத்து அளறுபட அழுந்தி (ஞானா. 23,15). நெடிய கடலைக் கடந்திலங்கை நீரில் அழுந்தக் குதித்து (திருமலைமுரு. பிள். 23). மிடியெனும் பெருங்கடலுள் அழுந்தி (குசே. 80). 3. ஒன்றன்கீழ் அமுக்குண்ணுதல். காலின் கீழ் அழுந்திற்று (பே.வ.).

அழுந்து-தல் 5வி. 1.உறுதிப்பட இருத்தல். அண் அழுந்திய நால்வர்க்கு அருள் புரிந்தானே (திருமந். 553).2. உறுதியாகப் பற்றுதல். அத்தியில்

ணல்

...