பக்கம்:பெருஞ்சொல்லகராதி.pdf/594

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அழைப்புச்சுருள்

2. பொருள்புணரா ஓசை. பித்து என்றது ஈண்டுப் பித்தாற்பிறந்த அழைப்பை (திருக்கோ. 102 அழைப்பு- பொருள் புணரா ஓசை. உரை). 3. மணமக்களை அழைக்கை. மாப்பிள்ளை அழைப்பு பெண் ணழைப்பு (நாட். வ.).

அழைப்புச்சுருள் பெ. திருமணத்திற்கு அழைக்கும் போது மணமக்களுக்கும் உறவினர்க்கும் வெற்றிலை பாக்குடன் கொடுக்கும் பணம். (நாஞ்.வ.)

அழைப்புத்தூரம் பெ. கூப்பிடுதூரம். (நாட், வ.) அழைப்புப்பத்திரம் பெ. 1. அழைப்புமடல். (அருகிய வ.) 2. கிறித்துவ சபைக்குக் குருவாகும்படி அழைக்கும் பத்திரம். (செ. ப. அக.)

அழைப்புமூலி பெ. சிறியாநங்கை என்னும் மூலிகை. (சித், பரி, அக. ப. 156)

அழைப்புமூலிகை பெ. மாந்திரிக வசியத்திற்குப் பயன் படுத்தும் துடரிவேர், சிறியானங்கை, அழிகண்ணி முத லியன. (சாம்ப. அக.)

அழையுறு-த்தல் 11 வி. கூவுதல். அழையுறுத்து மா மயில்கள் ஆலும் சோலை (தேவா. 6, 47, 7).

அள்1 பெ. 1. செறிவு, நெருங்கியிருக்கை, நெருக்கம். அள் இலைப் பலவின் கனி (அகநா. 378,20). அள் இலைத்தாளி கொய்யுமோனே (புறநா. 252, 3). அள் இலைப் பலவின் முள்ளுடை அமிர்தமும் (பெருங். 3,2,30) அள் ஆடிய கவசத்து அவிர் மணியற்றன (கம்பரா. 6, 14, 177). பலவீன்றன முள்ளுடை அள் அமிர்தும் (சீவக. 1191). அள்ளிலைக் குவளை (சூளா. 27). அள் இலைத் துளவப் பைந்தார் (செ.பாகவத 4, 4, 77). அள் இதழ்க் கமலச் செங்கேழ் அலர் பல (கச்சி. காஞ்சி. திருக்கண். 251). அள் ஒளிய நித்திலத் தால் செய்த அம்மனை (கலைமகள் பிள். 83). 2. அழுத் தம், இறுக்கம். அள்ளுறத் தழுவினான் போன்று அகமகிழ்ந்து இனிதின் நோக்கி (கம்பரா. 6, 39,11). 3. மிகுதி, அதிகம். இவ்வூரை அள் எரி மடுத்து (கம்பரா. 6,25,50). 4. வன்மை. அள்ளே காதும் வன்மையும் (அக. நி. அம்முதல். 205).

800

அள்2 பெ. கூர்மை. அள்ளே கூர்மையும் செறிவுமா கும் (திவா. 2189). அள் இலைப் படை அகம்பனே (கம்பரா. 6,21,95).அள் இலை அள் இலை வேல் கொள் மன்னற்கு (சீவக.1341). அள் இலைக் கழுமுள் (திருக்காளத்.பு.29,25). அள் இலை வேல் (சேந். செந். அமைதி. 11). அள் இலை வேற் கையனை வாழ்த்துகின்றோம் (தமிழரசி குற. தலைவன்வாழ். 2)

...

64

அள்ளல்'

அள் பெ. முடிச்சு. கயிற்றில் இன்னும் ஓர் அள் ளுப் போடு (தஞ்.வ.).

அள் பெ. பூட்டு.

அள்ளும் கொல்லும் பூட் டும் துறப்பெனப் புகல்வர் (பிங்.684).

...

அள் பெ. (பகுதிகளை இணைக்கும்) பற்றிரும்பு. கற்பொறி அள் பற்றிரும்பாகும்

...

(முன். 1602).

அள்ே பெ. மாட்டு வண்டியின் வில்லைத் தாங்கும் கட்டை. (செ. ப. அக.)

அமைய காது கீர்த்தி

...

அள் பெ. காது. எம் தாதை மகிழ் அள் ஞானவித்து ஓது கந்தா (திருப்பு. 1205). அள்ளே சோத்திரமாகும் (பிங். 1052). விறல் அமுது அள்ளாம் வாயில் ஊட்ட கோவ.பு.19,53). அள் எனும் பாத்திரத் துளை யால் நனி அருந்தியும் (தேவிமான். 9,2).

8

(திருக்

அள் பெ. அள்ளுமாந்தம் என்னும் இழுப்பு நோய். (தைலவ. 8/செ. ப. அக.)

அள்' பெ. நீர்முள்ளி. (செ. ப. அக.)

அள்10 பெ. (அள்ளப்படும் அளவு) கையளவு, அள்ளிக் கொள்ளுமாறு அமைந்தது. அள் ஒளிக் கற்றை (குசே.555).

அள்11 இ.சொ. இ.சொ. உயர்திணைப் படர்க்கைப் பெண்பால் (தெரிநிலை, குறிப்பு) விகுதி. அன் ஆன் அள் ஆள் என்னும் நான்கும் ஒருவர் மருங்கின் படர்க்கை ... (தொல். சொல். 205 சேனா). இல் வந்து நின் றோன் கண்டனள் அன்னை (அகநா. 248, 14). பேரஞர்க் கண்ணள் (புறநா. 247, 6). உண்டனள், உண்கின்றனள், உண்பள் இவை பெண்பால் உணர வந்தன (தொல். சொல். 199 தெய்வச்.).

...

அள்வழுப்பு பெ. காதுக்குறும்பி. அத்திப்பால் பலநாடி குழாய் அள்வழுப்புச் சார்வலமே விளை (திருப்பு.7).

அள்ளத்தி (அள்ளாத்தி) பெ. கண்பெருத்த ஒருவகை மீன். (செ. சொ. பேரக.)

அள்ளல்' பெ. சேறு, சேற்றுநிலம். அள்ளல் தங்கிய பகடுஉறு விழுமம் (மதுரைக். 259). எருமை ஆடிய அள்ளல் மணிநிற நெய்தல் கலிக்கும் (ஐங். 96). அள்ளற்பட்டுத் துள்ளுபு துரப்ப நல்எருது முயலும் (பதிற்றுப்.27,12-13).

...

அள்ளல்