பக்கம்:பெருஞ்சொல்லகராதி.pdf/595

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அள்ளல்'

பழனத்து அரக்காம்பல் (முத்தொள். 110). அள்ளற் பழனக் கணமங்கலத்து அரிவாட்டாயனே (நம்பி யாண். திருத்தொண்டர். 14). அள்ளற் கழனி ஆரூர் (பெரியபு.28,498). 2. கலங்கிய சேற்று நீர். நீர் பெயர்ந்து மாறிய செறி சேற்று அள்ளல் மீன் அருந்த (நற். 291, 1-2). அள்ளற்பட்ட போதகம் போல (பெருங்.2,9,100).

...

அள்ளல்2 பெ. 1. நெருக்கம், செறிவு. வெள்ளெயிற்று அரவு அளாய் அள்ளலாய்க் கடைந்த அன்று (திருமழிசை. திருச்சந்த. 88). அள்ளல் வேலை சூழ் மகேந்திரபுரி (கந்தபு. 3,8,17). அள்ளல் அஞ் சேற்றில் தோன்றும் ஆடகப் பசும்பொன் தோட்டு

...

முளரி (செ. பாகவத. 4, 5, 37). வேலை அள்ளல் அம்பெருநீர் (சேதுபு. நாட்டுச்.18), 2. கூட்டம், திரள். அள்ளல் வெஞ்சர மாரனை அஞ்சியோ (கம்பரா. 5, 2, 171). 3. (பழத்தின்) சதை மிகுந்த பகுதி. மாங்கனி அள்ளல் தீஞ்சுவை அருந்திய (அதிரா.

மூத்த. 13).

000

அள்ளல்' பெ. வாயூறுகை. உள்ளுமாய்ப் புறமுமாகி அருத்தமாகி அள்ளுவார்க்கு அள்ளல் செய் திட்டிருந்த ஆப்பாடியாரே (தேவா. 4,48,7).

அள்ளல் பெ. கடல். அள்ளல் நீர் முழுதும் அளித்து விள்ளலின்றிக் கொண்டென்ன விளர்த்தவே (குசே. 456).

...

...

அள்ளல்' பெ. தீய நரகம். கைதொழ மாட்டாதார் அள்ளற் கடலுள் அழுந்துகின்றாரே (திருமந். 1834). அள்ளல் வாய கள்ளரை காணா கண் (திருமாளி. திருவிசை. 4, 7). கூடசாலம் கும்பிபாகம் அள்ளல் ஏழும் தீ நரகப் பெயர் (பிங். 456). பன்னரும் அள்ளல் கனலில் பதைக்கின்றார் (ஞான. உபதேசகா.

...

1522).

அள்ளற்பூ பெ. (சேற்றுநீரில் மலரும்) தாமரை. அள்ளற்பூமகள் ஆகுங் கொலோ எனது உள்ளத் தாமரை உள் உறைகின்றதே (கம்பரா. 1, 10, 141). வி. அ. நடை தளர்ந்து. அள்

அள்ளாடித்தள்ளாடி

ளாடித்தள்ளாடி வருகிறான் (.வ.).

அள்ளாடு-தல் 5 வி. செறிவு குலைதல். அள்ளாடிய கவசத்து அவிர்மணி அற்றன (கம்பரா. 6, 14, 177).

அள்ளாத்தி (அள்ளத்தி) பெ. ஒருவகை மீன். (கதிரை.

அக.)

பெ. சொ . அ.1-30

465

அள்ளிவை -த்தல்

அள்ளாயமானியம் பெ. விற்பதில் கையளவு தானியம் பெறும் உரிமை. (செ. ப. அக.)

அள்ளி பெ.

வெண்ணெய். (கதிரை. அக.)

அள்ளிக்குத்து -தல் 5 வி. 5வி. 1. செடி முதலியவற்றின் மேல் நீர்தெளித்தல். (இலங். வ.) 2. கஞ்சி முதலி யவை சிறுகக் கொடுத்தல். (முன்.) 3. 3.காயவைத்த நெல்லை வெயில்சூட்டுடன் அள்ளிக்குத்துதல். (முன்.)

அள்ளிக்குவி-த்தல் 11 வி. அளவுக்கு அதிகமாகச் சேர்த் தல். (முன்.)

அள்ளிக்கொட்டு-தல் 5 வி, 1. மிகுதியாகக் காணப்படு தல். அம்மை அள்ளிக்கொட்டி யிருக்கிறது (பே.வ.). 2. மிகுதியாகப் பொருள் சேர்த்தல். அவன் வியா பாரம் செய்து பணத்தை அள்ளிக் கொட்டுகிறான் (முன்.). 3. மிகுதியாகப் பயனின்றிச் செலவழித்தல். பணத்தை அள்ளிக்கொட்டித் திருமணம் நடத்தி னார் (முன்.).

அள்ளிக்கொண்டுபோ-தல் 5 வி.1. வேகமாய் ஓடுதல். (செ. ப.அக.) 2. (நோய் மிகுதியாகப் பரவிப்) பல உயிரைக் கொள்ளை கொள்ளுதல். ஊரில் பேதி அள்ளிக்கொண்டு போகிறது (பே.வ.).

அள்ளிச்செருகு-தல் 5 வி. கூந்தலை முடிக்காமல் சேர்த் துச் செருகிக்கொள்ளுதல். அள்ளிச் செருகிய கொண்டையிலே என் ஆவி துடிக்குதடி (நாட்.பா.). அள்ளித்துள்ளு-தல் 5 வி. செருக்கித் திரிதல். அள்ளித் துள்ளி அரிவாள்மணையில் விழாதே (பழமொழி). அள்ளித்தெளி-த்தல் 11 வி. பரவலாக விழும்படி தெளித் தல். அள்ளித்தெளி சந்தனம் (திருமணப்பா.ப.2). அள்ளிமுடி-த்தல் 11 வி. மங்கையர் கொண்டைக் கூந் தலை மொத்தமாகக் கையால் வாரியெடுத்து முடிச்சிடு தல். தலையிலுள்ள கேசத்தை அள்ளிச்செருகியும் முடித்தும் (சிற். செந்.ப. 74).

அள்ளியிறை -த்தல் 11 வி. மிதமிஞ்சிச் செலவிடுதல். கடன்வாங்கிய பணத்தை ஏன் இப்படி அள்ளி யிறைக்கிறார் (பே.வ.).

அள்ளிருள் பெ. அடர்ந்த இருட்டு, கும்மிருட்டு. (சங். அக.)

அள்ளிவிடு-தல் 6 வி. தடையின்றி மிகுதியாகக் கொடுத் தல். தானதருமங்களுக்குப் பணத்தை அள்ளி

விட்டார் (பே.வ.).

அள்ளிவை-த்தல் 11 வி. கேடு செய்தல். (இலங். வ.)