பக்கம்:பெருஞ்சொல்லகராதி.pdf/600

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அளகையர்கோன்

அளகையர்கோன் பெ. (அளகாபுரியில் வாழ்வோர்க்கு அரசனான) குபேரன். அளகையர்கோன் நகரில் வளரும் (மீனா. பிள். 47).

அளகையரசு பெ. குபேரன்.

அண்டமுகடணவு

கொடி நெடுமாட அளகையரசு முன் நோற்று (ஞான. உபதேசகா.800).

அளகையாளி பெ. (அளகாபுரியை ஆள்பவனான) குபேரன். இருநிதிக்கிழவன்

...

குபேரன் தன் பெயர் (பிங். 195).

அளகையாளி

...

அளகைவேந்தன் பெ. (அளகாபுரிக்கு அரசனாகிய) குபேரன். நம்பர் அருளினால் அளகைவேந்தன் தன் பெருநிதியம் தூர்த்து (பெரியபு. 11, 14). புனை மணி அளகைவேந்தன் புகவிடு நிதியம் பெற்றான்

(ஆச்சா.பு.7,9)

அளகைவேந்து பெ. (அளகாபுரிக்கு அரசனாகிய) குபேரன். மாத் திருந்து அளகை வேந்தும் வானரசு அளிக்கும் வேந்தும் (குசே.287).

அளஞ்சி (அளஞ்சை, அளிஞ்சி) பெ. அழிஞ்சில். (மரஇன. தொ.)

அளஞ்சை (அளஞ்சி, அளிஞ்சி) பெ. அழிஞ்சில். (முன்.)

அளத்தமுது பெ. உப்பு அள்ளல் ஓங்கு அளத்தமு தின் பண்டி (கம்பரா. 1, 2, 54 பா.பே.).

அளத்திட பெ. கடலும் கடல்சார்ந்த பகுதியுமான நெய் தல் நிலத்து வாழும் பெண். நுளைச்சியே அளத்தி நெய்தலிற் பெண்ணின் நாமம் (சூடா. நி. 2, 72). சாயன் மெல்லிடை அளத்தியர் அளப்பன தரளம் (பெரியபு. 19,34).

...

அளத்தி2 பெ. கடற்கரைப் பட்டினமாகக் கருதப்படும் ஓர் ஊர். பண்டு ஓர்நாள் அளத்தி பட்டது (கலிங். 385). அளத்தியில் இட்ட களிற்றினது ஈட்டமும் (மெய்க். சோழர் 20,31).

அளத்தியம்1 பெ. சவக்காரம். (செ.ப. அக. அனு.)

அளத்தியம் 2 பெ. நீலபாடாணம். (முன்.)

அளத் தீயன் பெ. சோமனாதி. (வாகட அக.)

70

அளப்பு!

அளத்துநிலம் பெ. அளர்நிலம், களர்நிலம்.

அக.அனு.)

(செ. ப.

அளத்துப்பச்சை (அளத்துப் பூசை) பெ. மருக்கொழுந் துச் சக்களத்தி என்னும் செடி. (செ.ப. அக.)

அளத்துப்பாசிதம் பெ. பெருமுன்னை. (சாம்ப. அக.)

அளத்துப்புல் பெ. முயிற்றுப்புல். (வைத். விரி. அக.ப. 24)

அளத்துப்பூசனி (அளத்துப்பூசினி) பெ. பூசணி. (மரஇன.தொ.)

கலியாணப்

அளத்துப்பூசினி (அளத்துப்பூசனி) பெ. கலியாணப் பூசணி. (முன்.)

அளத்துப்பூசை (அளத்துப்பச்சை) பெ. மருக்கொழுந் துச் சக்களத்தி என்னும் செடி. (செ.ப. அக. அனு.)

அளத்துப்பூளை பெ. ஒருவகைச் செடி. (செ.ப.அக.)

அளப்பம்1 பெ. அளவு. (வின்.)

அளப்பம்' பெ. செயல் முடிக்கும் எளிய வழி, உபாயம். அளப்பமறிந்தவன் (பே.வ.).

அளப்பம்' பெ. அங்கப்பிச்சு, பித்தநாளம். (சாம்ப. அக.)

அளப்பள 1-த்தல் 12 வி. 1. செய்தியைப் பெரிதுபடுத்தி மிகுத்துச் சொல்லுதல். அம்பலத்தே சென்று அளப் பளந்தால் வம்பியென்று சொல்லாரோ (தெய் வச். விறலி. தூது 439). என்ன அளப்பளக்கிறான் (பே.வ.). 2. குறைகளை முணுமுணுத்தல். (வின்.)

...

அளப்பள '-த்தல் 12 வி. உட்கருத்தைத் தந்திரமாக அறி தல். (செ.ப. அக.)

அளப்பறி -தல் 4 வி. ஒருவர் எண்ணப்போக்கினைத் தந் திரமாய் அறிதல். நீ அவன் அளப்பறிந்து வர வேண்டும் (நாட்.வ.).

அளப்பன் பெ. வீணாக மிகைப்படுத்திப் பேசுபவன். இவன் வெறும் அளப்பனாக இருக்கிறான் (முன்.).

அளப்பு1 பெ. 1. அளவிடுகை, அளவு, அளப்பு அருமை யின் இருவிசும்பு அனையை (பதிற்றுப். 90,15). அன்றவர் குழீஇய அளப்பு அரும் கட்டூர் (அகநா. 44, 10). தாமரை அன்ன நாட்டத்து அளப்பு