பக்கம்:பெருஞ்சொல்லகராதி.pdf/605

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அளவுகோல்

அளவுகோல் பெ. அளக்குந்தடி. கோல் (பிரபு. லீலை 1, 16).

வியனிலத்தளவு

அளவுத்தடி பெ. தண்டு. (வைத். விரி. அக. ப. 16)

அளவுத்திட்டம் பெ.

வரைபடங்களில் பொருள்களின் அளவுகளை விகிதப்படுத்தி வரைபடத்தின் தூரத்தைக் குறிப்பது. 'எக்சு' அச்சு, 'ஒய்' அச்சு இவைகளின் அளவுத் திட்டங்களும் தொடக்கமும் ஒன்றாக இருக்கவேண்டும் (அறிவி. 10.ப.39).

அளவுநாடா பெ. நீளம் அகலம் இவற்றை அளக்கும் (மானிடவியல் க. அக. ப. 52)

பட்டை.

அளவுநாழி பெ. முத்திரைப்படி. (செ.ப.அக.)

அளவுப்பெட்டி பெ. நெல்லை அளக்க உபயோகப்படும் பனை ஓலையாலாய பெட்டி. (தொ.வ.)

அளவுபடி பெ. அரசாங்க முத்திரை பொறிக்கப்பெற்ற

படி. (நாட்.வ.)

அளவுபடுத்து - தல் 5 வி. வரையறை செய்தல். (முன்.)

அளவுபடை பெ. சிறுசேனை. அளவுபடைக்குப் பெரும்படை தோற்பது (திருவாய். 2,4,7ஈடு).

அளவுபைமாசு பெ. வயல்களை அளந்து பதிவு செய்த கணக்கு. (ராட். அக.)

அளவுவர்க்கம் பெ. ஒரு பழைய வரி. (செ.ப.அக.)

அளவுறு-தல் 6வி. கலத்தல். தேம்பெய்து அளவுறு தீம்பால் (அகநா. 89, 19-20).

அளவெடு -த்தல் 11 வி. ஒன்றன் நீளம் அகலம் முதலிய வற்றை அளந்து குறித்தல். (செ.ப.அக.

அளவெண் பெ. (யாப்.) கலிப்பாவில் ஓரடியாய் வரும் அம்போதரங்க உறுப்புவகை. அவற்றைப் பேரெண், அளவெண், இடையெண், சிற்றெண் என்று பெய ரிட்டு வழங்குவாரும் உளர்(யாப். காரிகை 38 குணசா.).

று

அளவை' பெ. 1.எண்ணல், எடுத்தல், முகத்தல், நீட் டல் முதலிய அளவு. நா லுழக்குக் கொண்டது நாழி என்றாற் போல் அவ் அளவைக்கு அளவை

-75

அளவையாகுபெயர்

பெறாமை அறிக (தொல். எழுத். 7 இளம்.). 2. அளவு கருவி. மனைப்பால் உள்ள அளவைகள் நிறை கோல் மக்கள் ஆவொடு மேதி (பெரியபு. 25, 2). 3. ஒரு கருத்தினைத் தெளிவுபடுத்த மேற்கொள்ளும் காண்டல் கருதல் உரை ஆகிய தருக்கப்பிரமாணம்.ஆதி சினேந்திரன். அளவை இரண்டே. (மணிமே. 29, 47). அளவையான் அளப்ப அரிது (கம்பரா. 6,3,62). அளவையிற் றெளிக்கும் விளைபொருட் டிறமே (தண்டி. 123). அளவை ஒழிவற நிறைந்தோன் (ஞானா. 61,12). அளவை காண்டல் கருதல் உரை அபாவம் பொருளொப்பு (சி. சி. சுப. 6). மேல் அளவை காட்சியொடு கருதல் உரை மூன்றாம் (தத்து. பிர.9). 4. எல்லை. அவன் பகைப்புலம் அளவை (புறநா.181, 9). ஐந்தியாண் டெனும் அளவை நிற்கு அகன்றுழி (கந்தபு. 6,5, 49). சற்றும் அளவையைக் கடந்து கடந்து பரிசித்தார் (சிவமகாபு. சோதிலிங். 16). 5. நாள். அளவையே எல்லை நாளாம் (சூடா.நி. ளகர.15).6. சந்தர்ப்பம், வேளை மண்ணி வாரா அளவை (புறநா. 50,6). நின்னிலை தெரியா அளவை (பெரும்பாண். 464). செவி துமித்து அறிந்து மாற்றிய அளவையில் அரற்றினாள் (கம்பரா.3,11,91). அன்னதோர் அளவை தன்னில் (கந்தபு.5,3,38).

படரா

...

...

அளவை" பெ. 1. தன்மை, நிலை. வயிற்றுத் தீத் தணியத் தாமிரந்துண்ணும் அளவை ஈன்மரோ (புறநா. 74,6). தவம்செய் மாக்கள் தம்உடம்பு இடாஅது அதன்பயம் எய்திய அளவைமான (பொருந.92).2. அறிகுறி. இவை அளவையாக இடர்க்கடல் கடத்தி (கம்பரா.6,22,29).

அளவை' பெ.

பெ. இடம். இராவணன் உறையும் ஊரும் இவ்வளவையது ஆகுதல் அறிதி (முன். 3,10,

8 வை. மு. கோ.).

அளவைக்கால் பெ. முகத்தல் அளவைக்கருவி, மரக் கால். குளகம் அம்பணம் தூம்பு கச்சம் அளவைக் காலென்று அறையல் வேண்டும் (திவா.1400).

அளவைநூல்

பெ. தருக்கநூல். சொல்லிலக்கண நெறியானே அளவை நூலை அமைச்சர் உட்பட்டுக் கற்க (குறள். 725 பரிமே.).

அளவையாகுபெயர் பெ. (இலக்) எண்ணல் முதலிய அளவைப் பெயர் அளக்கப்படும் பொருளுக்கு ஆகிவரு வது. எண்ணல் அளவையாகுபெயராவது எண்ணி அளக்கின்ற ஒன்று இரண்டு அரை கால் முதலிய

து