பக்கம்:பெருஞ்சொல்லகராதி.pdf/606

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அளவைவடிவம்

எண்ணுப் பெயர் அவ்வளவைக்கொண்ட பொரு ளுக்கு ஆகுவது (நன். 290 சடகோப.)

அளவைவடிவம்

பெ. உருவத்தைக் காட்டுதற்கு வரைந்த

படம். (புதுவை வ.)

அளவைவாதம் பெ.காட்சி, கருதல் முதலாய பிரமாண வாதம். அளவைவாத முதல் பூதவாதம் இறுதி யாகிய சமயங்கள் (மணிமே. 29, 42 உ.வே.சா. அடிக் குறிப்பு).

அளவைவாதி பெ. பிரமாணங்களைக் கொண்டு வாதம் செய்பவன். வைதிக மார்க்கத்து அளவைவாதியை எய்தினள் (LDCLD. 27, 3-4).

அளவொழுகு பெ. 1. வயல்களை அளந்து பதிவு செய்கை. (ராட். அக.) 2.கிராம நிலங்களின் அளவு களைப் பதிவுசெய்த புத்தகம். (முன்.)

அளற்றுப்பொடி பெ. சேறு உலர்வதற்காக இடப்பெறு கின்ற மண். (திருப்பா. 12ஆறா.)

அளறு 1

(அழறு) பெ. 1. சேறு. கடும் சினத்த கமழ் கடாஅத்து அளறுபட்ட நறும்

(மதுரைக். 44-45). சாகாடு அளற்றுஉறின்

...

...

சென்னிய கரும்பு அடுக்கும் ஊர (அகநா. 116, 3-4). நல்லெருது முயலும் அளறுபோகு விழுமத்து (பதிற்றுப். 27,13). மார்பழி சாந்தின் மணல் அளறுபட்டன்று (பரிபா. கண்ணன் முற்றம் கலந்து அளறு 1). பன்றிபோல் விரிகடல் பருகி

12, 97).

ஆயிற்றே (பெரியாழ். தி. 1, 2, அளற்றிற்பட்டு (தேவா. 4, 77, 7). அளறுபட்டன்ன (சேரமான். மும். 1). அங்கலுழ் விரையின் சேற்றோடு அக நகர் அளறுசெய்து (சூளா. 923). அங்கண்மேவி அளறு புலர்த்துமால் (பெரியபு. திருநகரச். 7). கலுழி பாய்ந்தளறு செய்ய (மீனா. பிள், 3), 2. (சந்தனம் முதலியவற்றின்) குழம்பு. நகில்முகடு மெழுகிய அளறு மடைதிறந்து (பரிபா. 10, 73). சாந்தகிலின் அளறு தோய்ந்த பணைமுலையாள் (தேவா. 6, 83, 7). 3.நீர். குளிர்பொய்கை அளறு நிறைய (பரிபா. 8,93). 4. நரகம். பூரியர்கள் ஆழும் அளறு (குறள். 919). வேவார் அழலுள் விளியார் அவற்றினுள் (GTIT. 1951). அவனிவேவ வான்வேவ அளறு வேவ (தக்க. 103). ஓதினர் மற்று ஆராயினும் அவ்வளறு படியார்களே ( செ.பாகவத. 6, 1, 6). கோர இறை யாம் அளற்றில் புகுத்தியடித்து எற்ற அரந்தை படும் இவளை (ஞான. உபதேசகா.1030).

47

6

அளாவு - தல்

பொடியிலே

அளறு' பெ. காவிக்கல். அளற்றுப் புடவையைப் புரட்டி (திருப்பா. 14 வியாக்.).

அளறு பெ. பிணைகள்

கலக்கம். அளறு தீர்ந்து இளைப்பாறும் (சேதுபு. நாட்டுச். 58).

அளறு - தல் 5 9. 1. சிதறி வெடித்தல். (செ. ப.அக.) 2. பிளத்தல். (வின்.) 3. நெரிதல். (முன்.)

அளறுபடு-தல் 6 வி. 1. சேறாதல். (செ.ப. அக.) 2. நிலை கலங்குதல். இராவணனை அளறுபட அடர்த் தான் (தேவா. 1,10,8).

அளாப்பி பெ. விளையாட்டில் நேர்மையற்ற முறையில் ஆடுபவர். (இலங். வ.)

அளாப்பு-தல் 5 09. நேர்மையற்ற முறையில் விளை யாடுதல். (முன்.)

அளாய்குளாய் பெ. பரபரப்பான செய்கை.

திலே பசலும் குட்டியுமாய்

சம்சாரத்

அளாய்குளாயாய்ப்

போகுமது (திருவாய். 9, 1, 9 ஈடு).

அளாவன் பெ. கலப்பு. அளவனான சத்துவத்தை யுடையராயிருப்பாரும் (திருவாய். 1, 1, 5 ஈடு).

அளாவு-தல் 5 வி. 1. கலத்தல். பாலோடு அளாய நீர் பாலாகும் (நாலடி. 177). அகிற்புகை அளாய வாசமும் தாங்கலால் (சீவக. 1440). தேன் அளாவியும் செம்பொன் விராவியும் (கம்பரா. 1, 1, 8). குங்குமக் குழம்பு அளாய் (சூளா. 133). பண்ணிய தழல்காய் பால்அளாநீர் போல் (கருவூர். திருவிசை. 6, 9). அன்பு அளாவியிருந்தாள் (நளவெ. 6). 2.உசாவுதல்.

(செ . ப . அக.)

3. கையால் அளைதல். அமிழ் தினும் ஆற்ற இனிதே தம் மக்கள் சிறு கை அளாவிய கூழ் (குறள். 64). 4. துழாவுதல். பிறை யைக் கொள்ள அளாய்கின்ற பாம்பு ஒன்று உளது (சேரமான். பொன். 78). 5. சென்று பொருந்துதல். மாயிரு விசும்பினை அளாவும் மன்னவன் கோயிலை (சுந்தபு. 4, 9, 1). அண்டத்தளாவும் பல பொற்கோபுரமும் (மதுரை வீர.ப.12).6.

வான

...

(அரும்.நி.596).

ஓங்குதல். அளாவலே ஓங்கல் மஞ்சள் அங்கு அசைந்திடும் காய்க்கதிர்ச் செந் நெல் அளாவி நிற்கும் (முக்கூடற். 26). 7. பரத்தல். வெண்ணிலா நுழைந்து அளாயது (கம்பரா.5,2,

59).

...