பக்கம்:பெருஞ்சொல்லகராதி.pdf/608

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அளி-த்தல்

அளி - த்தல் 11 வி. பொறுத்தல். அளித்திடல் வேண் டும் என்னா அமலனைத் தொழுது சொல்வான் (செ. பாகவத. 5, 2, 22).

அளி-த்தல் 11 வி. (ஒன்றின் தன்மையை மற் றொன்றிற்கு அளிப்பதாக உவமித்தலாகிய) ஓர் உவம் வாசகம், ஒத்தல். குன்று அளிக்கும் குல மணித்தோள் சம்பரன் (கம்பரா. 1, 6, 9).

அளி பெ. 1. அன்பு. ஆர்வலர்க்கு அளியும் நீ (பரிபா. 1,38). அளியிலாதவரைக் கண்டால் அம்ம நாம் அஞ்சுமாறே (திருவாச. 35, 4). அளி வளர் உள்ளத்து ஆனந்தக் கனியே (திருமாளி. திருவிசை. 1). காமஞ் சிறப்பினும் அவன் அளி சிறப்பினும் (தொல். பொ. 109,33 இளம்.). அளிவரும் மனத் தோர்க் கெல்லாம் அரும்பத அமுதம் ஆனான் (கம்பரா. 6, 37,320). தண் அளி வெண்குடை வேந்தன் (பெரியபு. திருநகரச் 45). அளி செயும் மனத்தராகி (செ.பாகவத. 11,5,19). அளியொடு பழகி (சான்றாண்மை 126). 2. (பிற உயிர்கள் மீது தோன்றும்) அருள். தெறலும் அளியும் உடையோய் (புறநா.2, 8).நின்அளி வேண்டிக் கலங்கியாள் (கலித். 100,17). வேந்தன் அளி யின்மை (குறள். 557). அளியிடை அற்றம் பார்ப்பாய் (முத்தொள். 102). அளி பொறையாய் நின்ற பரன் (திருவாய். 1,1,11). தண் அளியின் சாலை போல்வான் (கம்பரா. 1,5,35). அளியார உலகம் நீ ஆள்கின்றாய் (சூளா. 1906). பெருகு தண் அளியின் பாசந்தொட்டு இழிந்து (திருவரங். கலம். 97). முனங் கொண்ட மாதவிகாள் அளி கூரும் முகமலர்ந்தே (ஆதி. வ. கோ. 13), 3. வருந்தத் தக்கது என்பதால் உண்டாகும்) இரக்கம். அளியி னால் தொழுவார் வினை அல்குமே (தேவா. 5,23, 10). அளி கலந்த நின் அருட்குணம் உரைப்பதார் (கருவைப்பதிற். அந்.23). அளியில்லா அரையர் (சிவதரு. 11,27). 4. தண்மை. திங்களுள் அளியும் நீ (பரிபா. 3, 67).

அளி12

(கம்பரா. 5,

பெ. 1. விருப்பம். அளியால் இவ்வூர் காணும் நலத்தால் அணைகின்றேன் 2, 83). 2. ஆன்ம இச்சை. அளியில் அடங்கியவாறும் (திருமந். 124).

அளிபோய்

அளி13 பெ. முயக்கம். நும் ஆகத்து உடையேன் யான் (கலித். 20,10).

அளியென

வியன்மதி ... தண் அளிகொண்ட

13, 5-6). அளியும்

அளி14 பெ. பாதுகாக்கை. விண் அளிகொண்ட

தெறலும் (பெரும்பாண்.422).

...

மால்

(பரிபா.

478

அளிகள்

000

அளி15 பெ. கொடை, ஈகை. அன்பு அளி (கயா.நி.470).

அளி1 (அழி13) பெ. (பொதுவாக) வண்டு, (சிறப் பாகத்) தேனீ. நல்ல கமழ் தேன் அளி வழக்கம் எல்லாமும் (பரிபா. 10, 118). அளி ஆர் குழல் மங்கையொடு அன்பாய் (தேவா. 1, 34, 4). அளி தேர் விளரி ஒலி நின்ற பூம்பொழில் (திருவாச. 6,10). அளிகள் பம்பும் சுரிகுழல் (கம்பரா. 5, 2, 183). தேன் உண்டு அளிகள் தாம் பாடும் (நக்கீர. கயிலை. 55). அளகபந்திமிசை அளிகள் பந்தரிடும் (கலிங். 60). அளிமுரல் கமலமும் ஆம்பலும் (தெ. இ.க.8,69). அளி முரன்று மூசும் பனிமலர் (செ. பாகவத. 2, 1, 15). அளிநறவம் உண்டு அயர்ந்தது போல் (தாயுமா. 24, 39). அளி ஒண்கிள்ளைகள்

...

இசைகுயிலும் (பேரூர்ப்பு. 2, 24). அளி முரலக் கிளி மழலை அரற்ற (பாரதி. பாஞ்சாலி. 117). தண் அளி அம் குழல் குலைய ஏங்கினர் மடவார்

(குமணசரித். 141).

...

...

அளி பெ. தேன். அளிதரக் களிதரு வண்டு (தேவா. 7, 76, 8). அளி முற்றிய சோரியின் ஆழ் (கம்ப ரா. 6,30,204). அளிசெறி வேம்பின் அணிமலர் (மெய்க். பாண்டியர் 17, 59). அளி அறா மலரும் (சான் றாண்மை 40).

...

அளி18 பெ. கள். அறுபதமும் கள்ளும் அளி எனல் (பிங்.3106). கஞ்சம் செறி கான் அளி யுண்டு அணையில் அஞ்சம் உறங்கும் (ஞானா திக்க. நாட்டு.39).

...

அளி1 பெ. வண்டுகொல்லி. (பச்சிலை. அக.)

20

அளி2 பெ. மரவுரி மரம். (செ. ப. அக. அனு.)

அளி1 பெ. காய். (வைத். விரி. அக. ப. 24)

இரும்புக்கம்பி முதலியன

அளி 22 பெ.

வீடு (திருநெல்.வ.)

கொண்டு

அமைக்கப்படும் வரிச்சட்டம், கிராதி. அளிப்பாய்ச்சிய

அளி2 பெ. மாட்டுக்கு வைக்கோல் போடுவதற்கு அமைக்கப்படும் கவணை, மாட்டுக்காடி. (வட்.வ.)

அளிகம்' (அளீகம்3) பெ. நெற்றி. நெற்றி... நுதலே அளிகம் (பிங்.1080).

அளிகம்' பெ. நெல்லி. (பச்சிலை. அக.)

அளிகள் பெ. யானை மதம். மதம் அளிகள்

கடம் (ஆசி.நி.98)

800