பக்கம்:பெருஞ்சொல்லகராதி.pdf/610

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அளுங்கோடு'

அளுங்கோடு2

பெ. அழுங்கின் (எறும்பு தின்னியின்) கொம்பு. (சாம்ப, அக,)

அளேசவெற்பு பெ. அதிவிடையம். (வாகட அக.)

அளேசுவிடயம் (அளேசுவிடையம்) பெ. அதிவிடையம். (மர இன.தொ.)

அளேசுவிடையம் (அளேசுவிடயம் பெ. அதிவிடையம். (LAGIT.)

அளேசு வெப்பம் (அளேசுவெப்பு) பெ. அதிவிடையம். (வைத். விரி. அக.ப. 24)

அளேசுவெப்பு (அளேக வெப்பம்) பெ. அதிவிடையம். (முன்.)

அளேரியம் பெ. வெங்காயம். (சித். அக./செ. ப. அக.

அனு.)

அளேருகம் பெ. தூதுவளை.

(பச்சிலை. அக.)

அளை1 - தல் 4வி. 1. ஒன்றுடன் ஒன்று கலத்தல், தோய்தல். தேங்கலந்து அளைஇய தீம்பால் ஏந்தி (அகநா. 207,14). கழறு குரல் அளைஇக் காலொடு வந்த கமஞ்சூல் மாமழை (குறுந். 158). செங்கண் மகளிரொடு சிறுதுனி அளைஇ (புறநா. 366,15). நுண்பொடி அளைஇக் கடல் தூர்ப்போளே (ஐங். 124). அகமலி உவகை ஆர்வமொடு அளை இ (மலைபடு. 184). இன்சொலால் ஈரம் அளைஇ (குறள். 91). மூவுலகும் உள்புக்கு அளைந்து எழுந்த செந்தீ (காரை. அந். 97). உதிரம் அளைந்த கோட்டதோர் களிறு (இறை. அக.7 உரை). ஊன் அளைந்த உடற்கு உயிராம் என (கம்பரா. 2,10,16). மதுத்தோய்ந்து தாது அளைந்து (பெரியபு. 28,8). பால் அளையில் உற்ற மணம் மேலளைய (முக்கூடற். 82). குங்குமக் கலவையும் காசறைச் சாந்தும் அளைந்த தெண்டி ரைப் பொருநை (திருவிளை. பு.நாட்டுச். 53). 2. தழுவு தல். அணிகிளர் மார்பின் ஆரமொடு அளைஇ (மதுரைக். 439). என் அணியார் முலை ஆகம் அளைந் துடன் இன்புறும் ஆகாதே (திருவாச. 49,4).3. நுகர்தல், அனுபவித்தல். ஆர் வநெஞ்சமொடு ஆய் நலன் அளைஇ (அகநா. 35, 12). அளைவது காமம் அடுநறவும் நெய்யொழுகும் ஊனும் (சீவக.1551). இப்பிறப்பினில் வந்து அளையார் யார் (பட்டினத்துப் திருவிடை. மும்.21). 4. பொருந்துதல். அல்லல் தீர

4

30

அளை ே

ஆர்வமொடு அளைஇச் சொல்லுறு பொருளின் கண்ணும் (தொல். பொ. 144, 10-11 இளம்.).

அளை' - தல் 4வி. 1. பெய்தல்.

பொலங்கலத்து

அளைஇ (பறநா. 392,17). 17). 2. பூசுதல். சாம்பர் வெண்ணீறு அளைந்தான் (தேவா. 4, 84, 7). 3. அடைதல். வான் அளைந்தது மாகதர் பாடலே (கம்பரா. 2,10 16). 4. சூடுதல். அனிச்சம்பூவை மயிரில் அவைந்தாள் (குறள். 1118 மணக்.).

.

...

அளை'-தல் 4 வி. 1. துழாவுதல். குறையணி கொல்லை முல்லை அளைந்து (தேவா. 7, 99, 1). இன்னடிசில் புக்கு அளையும் தாமரைக் கை (நளவெ. 2, 63). தம் முடைய மக்கள் சிறு கையாலே அளையப்பட்ட கூழ் (குறள். 64 64 மணக்.). கருந்துகளா அளைந்து (இராமநா. 3, 7 தரு 1). 2. கடைதல். ஆய்ச்சியர் சேரி அளை தயிர் பால் உண்டு (பெரியாழ். தி. 2, 10,5). 3. கிளறுதல். கைவரை சேப்ப மணல் அளை வாளைக் கருதி (சங்கர. கோவை 232). 4. குழம்புதல். பரம்படிக்க உடைந்து அளைந்த பழனச் சேறு (ஏரெழு.26).

அளை-தல் 4 வி. ஓதுதல். மறை அளை பவர்க்கும் அரசருக்கும் வழிவிட்டு ஒதுங்குக (திருக்காளத். பு.

13, 31).

அளை - தல் 4 வி. வயிறுவலித்தல். (செ. சொ . பேரக.) அளை" பெ. 1.மோர். செம்புற்று ஈயலின் இன் அளைப் புளித்து (புறநா. 119,3). அளைவிலை உணவின் கிளையுடன் அருத்தி (பெரும்பாண். 163). 2. தயிர். ததி அளை பெருகு தயிர் எனல் ஆகும் (பிங். 1131). பால் அளையில் உற்ற மணம் மேல் அளைய (முக்கூடற். 82). முடையிருக்கும் அளை நுகர்ந்தோன் (கருவைப்பு. 7, 2). பொங்குபால் குழம் பும் அளையும் (குசே.236). 3. வெண்ணெய். அளை சிதறியபோல் ஆம்பி பரந்தன (கல்லாடம் 14,10) அளையது திருடி அடிபடு நெடியவன் (திருப்பு. 740). அம்புலாம் கடல் அலைத்தநாளார் அளைக் கள்வன் (சேதுபு. விதூம். 75). ஆரிருள் அகத்து அளை எடுத்தனன் அருந்தும்

3,

...

...

(செ. பாகவத. 10,

17). விண் காற்று கனல் கமலம் குவளை (கு + அளை) உண்டான் (திருவரங். அந். 69). மறைந்து அளை வாரி உண்டதறிந்திலையோ

சங்கர.கோவை 95). செவ்விய அளையைத் திரட்டி உண்டு (குசே. 680). கண்ணனாம் மாமனைப் போல அளை கொள்ள எண்ணியே (தமிழரசி குற.31).