பக்கம்:பெருஞ்சொல்லகராதி.pdf/611

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அளை'

...

நறும்

000

அளை பெ. 1. பொந்து, வளை. பலவின் பழம் இருங்கல்விடர் அளை வீழ்ந்தென (ஐங்.214). அணங்குடை நெடுங்கோட்டு அளையகம் (புறநா. 52, 1). எறும்பி அளையில் குறும்பல் சுனைய (குறுந். 12). கவைத்தாள் அலவன் அளற்று அளை சிதைய (பெரும்பாண். 208). வேகவெந்தீ நாகம் கிடந்த போகுயர் புற்றளை புகுவான்போல (மணிமே. 20, 98-99). அளை பிரிந்த அலவன் போய்ப்புகுந்த (தேவா. 4,20,9). ஆழ் அளை உடும்பு பற்றிப் பறித்து மார்பு ஒடுங்கியுள்ளான் (சீவக.1230).வஞ்ச அரவு வாழ் அளையை (ஞானா. 50,18). அளைதாழ் அளைதாழ் அரவும் அரியும்வெந்தீயும் அரசும் (அம்பி. கோ. 127). அளை அழுந்து ஞெண்டு (பேரூர்ப்பு.1,56). 2. குகை. சிறுகண்பன்றி பல்லி பட்டென கல்லளைப் பள்ளி வதியும் (நற். 98,2.7). ஏகல் அடுக்கத்து இருள் அளைச் சிலம்பு (அகநா. 52, 5). குடாவடி உளியம் பெருங் கல் விடர் அளைச்செறிய (முருகு. 313-314). அளைச் செறி இரும்புலி அனைய ஆடவர் (சீவக.1851). அளையில் வாள் அரி அனையவன் (கம்பரா. 5, 2, 141).அளையுறை அரிஏறு அன்னான் (செ. பாகவத. 5, 1, 18). 3. புற்று. பாம்பு அளைச் செறிய (நற். 264, 1). அளையுறைபாம்பும் அரசும் நெருப் பும் (ஆசாரக். 84). அளைப் பிரியா அரவு (தேவா. 7, 43, 4).மாதர் அடங்கலும் அசனி கேட்ட அளை உறை அரவம் ஒத்தார் (கம்பரா. 6,18,284). குருமணி கான்று ஆடும் அரவம் எல்லாம் அளை அடைய (நக்கீர. கார்.5). அளை உறைந்த வாள் அரவென முனிந்து (செ. பாகவத. 10, 1, 38). வம் சோர்ந்து சுருண்டு அளை ஒதுங்க (திருவிளை.

4. 43, 5).

அர

அளை பெ. நிலத்தை வெட்டி அமைக்கும் வடிகால். (இலங். வ.)

அளை இ.சொ. (இலக்.) ஏழாம் வேற்றுமை இடப் பொருள் தரும் உருபு. கல்லளைக் குறக் குறுமாக்கள் (நற்.168,3-4). கல்லளைச் சுனைநீர் கையில் உண் டமையான் (நன். 301 மயிலை.).

அளைச்சல் பெ. வயிற்றுப்போக்கு. (பே.வ.)

அளைமறிபாப்பு பெ.

(இலக்.) (புற்றுள் நுழைந்த வுடன் தலை மறித்தெழுந்து உடலை அளைக்குள் இழுத்துக் கொள்ளும் பாம்பு போன்று.) பாட்டின் ஈற்றில் நின்ற நின்ற சொல், இடையிலும் முதலிலும் பொருந்திப் பொருள்தரும் பொருள்கோள் வகை. பெ. சொ.அ. 1-31

81

அற்கம்!?

செய்யுள் இறுதி மொழியிடை முதலினும் எய்திய பொருள்கோள் அளைமறிபாப்பே (நன். 417).

அளைமுறி பெ. நெய். நெடிய அளைமுறி இக்கொடு லட்டுகம் (திருப்பு. 899). கற்கண்டுஇளநீர் அளை முறி சீனி (முத்திநிச் சிறப்புப். உரை).

அளையெடு-த்தல் 11 வி. 1. வளைதோண்டுதல். (வின்.) 2. புரைவைத்தல். (முன்.)

அளைவு பெ. 1. (சோறு முதலியன) குழைகை, (மனம்) குழைவு. அங்கு அளைவுடன் எம்மாதர்க்கு அன்னையின் உபசரித்தே (திருக்கோவ..22,31). அளைவுதானே குழைவெனலாகும் (அக.நி.அம் முதல் 68). 2. கலப்பு. (த.த.அக.)

அற்கத்தி பெ. திப்பிலி. (பச்சிலை. அக.)

அற்கம் 1 பெ. 1. அடக்கம். அற்கமொன்றும் அறி வுறாள் (திருவாய். 6, 5, 4 அற்கம் - அடக்கம். ஈடு).2. சுருக்கம். அற்கம் தவிர் உன் இச்சையிலே உரோதிப் பிப்பாய் (திருக்காளத். பு. 5, 48).

அற்கம்' பெ. நீர்க்காக்கை. அற்கமே நீர்க்காக்கைப் பேர் (அரும்.நி.651).

அற்கம்' பெ. வெண்துளசி.

(வைத். விரி. அக. ப. 11)

எருக்கு. அற்கமே ... எருக்கும்பேசும்

அற்கம் + பெ. எருக்கு.

(அரும்.நி. 651).

அற்கம்' பெ. நந்தியாவட்டம். (சங். அக.)

அற்கம் பெ. தும்பைச் செடி. (சாம்ப. அக.)

அற்கம்' பெ. முருக்கு. (கதிரை. அக.)

அற்கம்' பெ. வேம்பு. (முன்.)

அற்கம்' பெ. வன்னிமரம். (முன்.)

அற்கம் 10 பெ. குன்றி. (சங். அக.)

அற்கம் 11 பெ. 1. காணிக்கை. (கதிரை. அக.) 2. செல் வம். முன்.) 3. விலை. (முன்.)

அற்கம் 12 பெ. வழிபாட்டு விதி, (நாநார்த்த. 1053)