பக்கம்:பெருஞ்சொல்லகராதி.pdf/613

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அற்பம்'

அற்பம்' (அல்பம்) பெ. 1. சிறுமை, சிறிதளவு. அற்ப மொடு பெருமையுமாய் அருமையாகி (தேவா. 6, 98,7). அற்ப மனமே அகிலவாழ்வு அத்தனையும் சொற்பனமே (தாயுமா. 28, 13). அற்பம் உறு திரு வேட்டல் (குசே. 195). வேட்டது அற்பமே ஆயினும் மேவுமா முயல்வார் (பேரூர்ப்பு. 1, 12). அன்பின் பகுதியில் அற்பம் குன்றும் சித்தனே (வசவபு. திருக்கலி. 25). அல்லும் பகலும் நிதம் அற்ப வயிற்றினுக்கே காடெல்லாம் சுற்றிவந்து (பாரதி. குயில்.7,32). அற்பமும் ஆசை எனக்கிலை (நாஞ். மரு. மான். 9, 257). 2. சுருக்கம். அருத்தத்தால் அக்கரத்தால் அதிக அற்பம் (சிவதரு.1,19). 3. சிற்றளவை. (சேந்.செந். 57) 4. அணு. (தமிழ்ப்பாது .நூ.) 5. இலேசு. பிரபஞ்சம்

...

...

ஒடுங்கும் காலத்தில் சூக்குமமாய் அற்பமாய் விடுதல் (சி. சி. சுப. 46 நிரம்ப.). கற்பகம் நின் வண்மைக்கு அற்பமும்ஒவ்வா (குமணசரித். 259).6. இழிவு, இழிந்தபொருள். அற்பம் கருதேன் (கம்பரா. 3,2,18). அற்பத் தொழிலாகாது (சிலையெழு. 43). குறைகின்ற புத்தியாய் அதில் அற்ப சாதியாய் (அறப்பளீ. சத. 27).

அற்பம்' பெ. நாய். அற்பம் என்பது சிறிது நாய் இரண்டே (அக.நி. அம்முதல். 100). வெரூஉக் கொண்டு ஒதுங்கும் நின் அற்ப வாழ்வு

...

மகள் பிள். 78).

(கலை

அற்பம்' பெ. பஞ்சு. பஞ்சு.

(த.த. அக.)

அற்பம்' பெ.

புகை. (முன்.)

அற்பமாரி (அற்பமாரிசம், அற்பமாரிடம்) பெ. சிறு கீரை. (த. த.அக.)

அற்பமாரிசம் (அற்பமாரி, அற்பமாரிடம்) பெ. கீரை.(வைத். விரி. அக. ப. 24)

சிறு

அற்பமாரிடம் (அற்பமாரி, அற்பமாரிசம்) பெ. சிறு கீரை. (சங். அக.)

அற்பமூத்திரவர்த்தினி பெ. சிறுநீரைச் சிறிய அளவில் அதிகப்படுத்தும் மருந்து. (குண. 1 ப .1)

அற்பரம் பெ. மக்கட்படுக்கை. (சதுரக.)

அற்பருத்தம் பெ. வாழை. (வைத், விரி. அக. ப.25)

அற்பன் பெ. 1. தாழ்ந்தவன். அற்பன் என்னுள்ளத்து அளவிலா உன்னைத் தந்த (திருமாளி. திரு விசை. 1,3).2. இழிகுணத்தான். அறிவிலாத அற் பரானவர்க்குச் செல்வம் அல்லது பகை உண்டோ (திருவிளை. பு. 1,65). அற்பர் போலப் பிறர் கரம்நோக்கி ... வாழ்கலாகாதென (பாரதி.

பெ. சொ.அ.1-31 அ

வேறு

483

அற்புத்தளை

புதுப்பா. 12). அற்பனுக்கு ஐசுவரியம் வந்தால் அர்த்தராத்திரியிற் குடை பிடிப்பான் (பழ. அக.

843).

அற்பாசமனம் (அற்பாசனம்) பெ. சிறுநீர் கழிக்கை. (ராட். அக.)

அற்பாசனம் (அற்பாசமனம்) பெ. சிறுநீர் கழிக்கை. (புதுவை வ.)

அற்பாயு (அற்பாயுசு) பெ. குறைந்த வாழ்நாள். அற்பாயு நரர்க்கென்றே (சிவதரு.1,26).

அற்பாயுசு (அற்பாயு) பெ. குறைந்த வாழ்நாள். அவர் அற்பாயுசில் போய்விட்டார் (பே.வ.).

அற்பி-த்தல் (அர்ப்பி -த்தல்) 11 வி. உரியது ஆக்குதல். ஐம்பொறியாற் கண்டு பின்னை அற்பித்தால் (போரூர். சந்.12,5).

அற்பிக்குறுவை (அற்பிசைக்குறுவை) பெ. ஐப்பசியில் விளையும் நெல். ஆடிக்குறுவை அற்பிக்குறு வைக்கு இதிலொன்று பாதியும் (புது. கல். 257). அற்பிசைக்குறுவை (அற்பிக்குறுவை) பெ. ஐப்பசியில் விளையும் நெல். ஆடிக்குறுவை அற்பிசைக் குறுவை விளைஞ்ச நிலத்துக்கு (முன். 318).

அற்பிதம் பெ. காணிக்கையாக்குகை, உரியதாக்கப் படுகை. நிவர்த்தியே செய்து தான் அற்பிதம் செய் தார் (செங்கோட். பள். 302).

அற்பு (அன்பு ) பெ. தொடர்புடையார் மீது உண்டாகும் பற்று. அற்பு இணை கிழமை (பரிபா. 9, 81). அற்புத்தளையும் அவிழ்ந்தன (நாலடி. 12). அற் புளம் சிறந்தாங்கு அருண்மொழி அளைஇ (சிலப்.16, 77). அற்புக் கடன் நில்லாது (மணிமே. 26, 7). மாதரார் அற்பின் நின்றன அறங்கள் (கம்பரா. 1, மாதர் அற்பு முதிர் கலவியினில் பரிந்து சிந்தும் அணி (பெரியபு. 19, 94). குறப்பாவை அற்பில் புணர்வோனே (திருப்பு. 101). அற்பொடு கேட் டலும் சுகமுனி சொல்வான் (குசே. 536). மாதை அற்பின் உறக்காக்கவே (கலைமகள் பிள். 17).

2, 59).

கலை

அற்புக்கடன் பெ. (கணவன்மேல் கொண்ட அன் பினால் செய்யும் கடனாகிய) உடன் இறத்தல், தீப் பாய்தல். அற்புக்கடன் நில்லாது நற்றவம் படராது

(LDGALD. 26, 7).

அற்புத்தளை பெ. அன்புப் பிணைப்பு. அற்புத் தளை யும் அவிழ்ந்தன (நாலடி. 12). அற்புத்தளை அறப் புரிந்திட்டானே (சீவக. 2885).