பக்கம்:பெருஞ்சொல்லகராதி.pdf/617

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அற்றேல்

அற்றேல் இ. சொ. அப்படியானால். அற்றேல் கேட் போர் மாணாக்கரும் கேட்பிப்போர் ஆசிரியருமாக லான் (நன். சிறப்புப். சிவஞான.ப.13).

அற்றை 1 சு. பெ. அந்நாள்.

அந்நாள். அற்றை இரவும் ஓர் பிற்றை நாளும் (பெருமாள்தி. 6,6). அருகம்புல் அற்றைப்படியாகும் (பாரத வெண். 161). அற்றைக்கு இரைதேடி (திருப்பு.109). அற்றை வெஞ்சமரில் அமர் முனைந்து ஆற்றாது (பாரதம். 8, 2, 2).

அற்றை' பெ. அ. 1. அந்த. அற்றைத் திங்கள் அவ் வெண்ணிலவில் (புறநா. 112, 1). அணிபூங் கழிக் கானல் அற்றை நாட் போலான் (திணைமொழி. 47). அற்றை அவ்விரவில் (கம்பரா.5,12,132). அற்றை நாள் தொடங்கி (பெரியபு.28,570). புன்னகை செய்திடுவாள் அற்றைப்போது முழுதும் மகிழ்ந் திருப்பேன் (பாரதி. தோத்திரம். 64). 2. அற்பமான. அற்றைக்காரியம் (இலங். வ.).

அற்றைக்கூலி பெ வேலைக்கு நாள்தோறும் பெறும் கூலி. அற்றைக்கூலி இற்றைநிலம் எனவும் வரும் (நன். 185 சங்கரநமச்.).

அற்றைக்கூழ் பெ. மாவைப்புளிக்க வைக்காது அன்றே

காய்ச்சும் கேழ்வரகுக் கூழ்.

ஆள் இல்லை (நாட் .வ.).

அற்றைக்கூழ் குடிக்க

அற்றைக்கொத்து பெ. நாள்தோறும் தானியமாகக் கொடுக்கும் கூலி. அற்றைக்கொத்துக்கு அரைவயி றும் நிரம்பாது (வட்.வ.).

அற்றைத்திங்கள் பெ. அந்த மாதம். அற்றைத் திங் கள் அவ்வெண்ணிலவின் (புறநா. 112,1).

அற்றைநாள் பெ. அன்று. அற்றை நாளாற் செங் கோலத்தொடுஞ்செல்ல (இறை. அக. 44 உரை). யான் காவல் பூண்ட அற்றைநாள் முதலா (அரிச். பு. 1,

29).

அற்றைப்படி பெ. நாள்தோறும் உணவுக்காக அளிக்கும் பண்டம் அல்லது பணம். நற்பரிகள் ஐயாயிரத்துக் கும் அற்றைப்படியாம்படி கொடுத்து (பாரத வெண். 161 உரை). நமக்கு அற்றைப்படியும் அறைச்சிலவும் நடக்கும்படிக்கு (தெ.இ.க.754).

487

அற3

அற்றைப்பரிகாரம் பெ. 1. நோய்தீர உடனே செய்யும் மருத்துவ உதவி. அற்றைப்பரிகாரம் கிடைக்காமல் செத்தான் (பே.வ.). 2. துன்பம் தீர்க்க உடனே உதவும் செயல். அவனுக்கு அற்றைப்பரிகாரம் எவ னும் செய்யவில்லை (வட்.வ.).

அற்றைப்பரிசம் பெ. விலைமாதர் அன்றன்று பெறும் பணம். பூவிலை மடந்தையர் - அற்றைப் பரிசம்

கொள்வார் (சிலப். 5, 51 அடியார்க்.).

அற்றைப்பாடு பெ. அன்றன்று உழைக்கும் உழைப்பு. அற்றைப் பாட்டுக்கும் அற்றைக் கூழுக்கும் சரி யாகப் போச்சு (பே.வ).

அற்றைப்பிழைப்பு பெ. அன்றன்று கூலிவாங்கி நடத்தும் வாழ்க்கை. அற்றைப் பிழைப்பு நாய்ப்பிழைப்பு (முன்.)

அற்றைப்பொழுது

பெ. அந்தநேரம், அந்த நாள். அற்றைப் பொழுதிற்கு அப்படிச்செய்ய வேண்டி யிருந்தது (நாட்.வ.)

அற்றோர் பெ. செல்வமில்லாதவர். கைக்கோர் காசும் அற்றோரைத் தனக்கடிமையாக (அந்தோனி. அண்.

7).

...

அற1 வி. அ. 1. முழுவதும். நொதுமலாளன் நெஞ்சு அறப்பெற்ற (அகநா. 17, 8). வகையறச் சூழாது எழுதல் பகைவரைப் பாத்திப்படுப்பதோர் ஆறு (குறள். 465). அறவே நின்னைச் சேர்ந்த அடியார் (திருவாச. 5, 86). அறக்கண் துஞ்சிலன் அனந் தன் (கம்பரா. 6,29,22). மனத்தின் மாசு அறக் களைவ (ஞானா.32, 10). 2. மிகவும். அறவே பெற்றார் நின்னன்பர் (திருவாச. 32, 6). சிற்றுண வினால் அற விளைத்தேன் (திருவால.பு. 7, 2). அறவே துயர் செய்து (கந்தபு. 2, 2, 15). அறப்பசி யினால் ஓடுங்கி (சீறாப்பு. 1, 6, 14).

அற2 வி. அ.

.

1.தெளிவாக. அறம் அறக்கண்ட

அவையத்து (புறநா. 224,4).2.

...

நன்றாக, செவ்வை

யாக. ஐந்திருள் அறநீக்கி (பரிபா. 4, 1). திண் ணையை அறக்கூட்டு (பே.வ.).

அற3 வி. அ. நீங்க. சிதைவு எனப்படுவது வசை அறநாடில் (தொல். பொ. 654, 1 இளம்.). இமைக்கும் உருவினர் (முருகு. 128). உருப்பு அறநிரப்பினை (பதிற்றுப்.50,16).

மாசு அற ஒன்னார்