பக்கம்:பெருஞ்சொல்லகராதி.pdf/621

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அறப்பரிசாரம்

அறப்பரிசாரம்

(அறப்பரிகாரம்) பெ. துறந்தோர்

முதலியோர்க்குச் செய்யும் பணிவிடை. மறப்பருங் கேண்மையோடு அறப்பரிசாரமும் வீறுபெறக் (சிலப். 2, 85-87).

காண

...

அறப்பளீசுரசதகம் பெ. கி. பி. பதினெட்டாம் நூற் றாண்டில் வாழ்ந்த அம்பலவாணக் கவிராயர் இயற்றிய நூறு பாடல்கள் கொண்ட ஒரு நூல். அறப்பளீசுர(ன்) சதகம் (அறப்பளீ. சத. காப்பு).

அறப்பாடல் பெ. கேடு விளைவிக்கும் சொல் பயின்று வரும் பாட்டு. சில புலவர்கள் அறப்பாடல்பாடி கேடு விளைப்பதாக அச்சுறுத்துவர் (பே.வ.).

அறப்பாடுபடு-தல் 6 வி. மிகஉடல்வருந்தி வேலை செய் தல். அறப்பாடுபட்டும் அரைவயிறுநிரம்பவில்லை (முன்.).

அறப்பார்'-த்தல் 11 வி. தீர ஆராய்தல். (செ.ப. அக.)

அறப்பார் 2 - த்தல் 11 வி. 1. அழிக்க வழி தேடுதல். (இலங், வ.) 2. சூனியம் வைத்தல். (சாம்ப. அக.)

அறப்பாவை பெ. (அறச்செல்வியாகிய) உமை. அறப் பாவை அத்தற்கு அருள் பாலா (திருப்பு. 101).

அறப்புறங்காவல்

பெ.

தருமத்துக்கு விடப்பட்ட பூமி களைப் பாதுகாக்கை. அறப்புறங் காவல் நாடு காவ லென (நம்பியகப். 72).

அறப்புறத்தண்டம் பெ. அறத்தை மீறியதற்காக விதிக் கும் தண்ட வரி. (கையேடு. ப.270)

அறப்புறம்1 பெ. 1. தருமத்திற்கு விடப்பட்ட வரியில்லா நிலம். அறப்புறமும் ஆயிரம் (சீவக. 76).2. பள்ளிக் கூடம். அறப்புறம் ஓதும் பள்ளியாகும் (திவா. 1004). 3. எளியோருக்குத் தருமம் செய்யும் நிலை யம். மடம் அறப்புற நீர்ச்சாலை (திருவிளை. பு.

நாட்டுச்சி.33).

அறப்புறம்2 பெ. தீவினை, பாவம். அறப்புறத்தினார் புரம் பொடித்த (திருவிளை. பு. 35,9).

அறப்பேறு பெ. நல்வினை, புண்ணியம். இஃது அறப் பேறு கூறிற்று (பாரிகாதை ப. 148).

4

91

அறம்'

அறப்போர் பெ. அறநெறியைக் கடைப்பிடித்துச் செய்யும் போர். காந்தி வெள்ளையரை எதிர்த்து அறப் போரைத் தொடங்கினார் (செய்தி.வ.). சீரிய அறப் போருக்குச் சத்தியாக் கிரகம் என்று தனிப் பெயர் சூட்டினாரால் (காந்திகாதை.3, 16, 58). அறபு பெ. அரபு நாட்டினர் பேசும் ஒரு மொழி. இசுலாமியர் அறபு படிக்கின்றார்கள் (செய்தி.

வ.).

அறம்' (அறன் ) பெ. 1. மக்கள் நல்வாழ்வு வாழச் சான்றோர்களால் வரையறுக்கப்பட்ட நன்னெறி, தருமம். அறமுதலாகிய மும்முதற் பொருட்கும் உரிய வென்ப (தொல். பொ. 411 இளம்.). அறநனி சிறக்க (ஐங். 7). அழுக்காறு அவாவெகுளி இன்னாச்சொல் நான்கும் இழுக்கா இயன்றது அறம் (குறள். 35). அறம் புரிந்து அல்லவை நீக்கல் (இனி. நாற்.2). அறம் நால்வர்க்கு அருள்புரிந்து (தேவா. 7,28,3). அறம் திகழும் மனத்தவர்தம் கதியை (பெருமாள்தி. 1, 7). அறம் வெல்லும் பாவம் தோற்கும் (கம்பரா. 5,2,95). அறம் வளரக் கற்பமைய (மெய்க். சோழர் 38,2). அறச் சொரூபனே உனையலால் மற்றிலை (குணசீலத். பு. குணசீலர். 27). 2. இல்லறம். வறியார்க்கு இரங்கல் அறங்காத்தல் (கோடீ. கோ.385). 3. துறவறம். இருமைவகை தெரிந்து ஈண்டு அறம் பூண்டார் (குறள். 23). அறம் துறவறமே (அரும். (குறள்.23). நி.631). 4.கற்பு. அணிபவளச் செவ்வாய் அறம் காவற் பெண்டிர் (பரிபா.திர.2, 48). பெண்டிர்க்கு அறம் என்பது கற்பு (இறை. அக. 29 உரை). இன்பம். (செ. ப. அக. அனு.) 6. ஏற்றது, இதம். (முன்.) 7. தகுதியானது. நான் நவிலும்படி நடத் தல் என்றும் உமக்கு அறமாகும் (குமணசரித்.144). அறம் அறிபவர் வாழ் தூப்புலோய் (வேதாந்த. சத. 64). 8. குற்றம் தீர்ந்த நன்மை. (குறள். 292 பரிமே.)

5.

அறம் 2 பெ. 1. நோன்பு. அறம் பெரிது ஆற்றி (பரிபா. 19,10). இலங்கிழை ... நல்லறம் தாக்க என்றாள் (சீவக. 386). அறங்கொள் கொம்பினை மீட்டு உடன் அகல் (கம்பரா. 5, 12, 56).2 சமய நெறி. அறத் தொடு வேதம் புணர்தவம் முற்றி (பரிபா.திர.1, 18). தாலமார் அறங்கள் எல்லாம் சத்தியத் தடங் கல் போல (எதுமலை. பு. 8). 3. வீடு பயக்கும் மெய்ப் பொருள். ஆலமர நீழல் அறம் நால்வர்க்கு அன் றுரைத்தான் (இயற்.முதல் திருவந். 4). ஆலின் கீழிருந்து அங்கு அறம் உரைத்தான் (திருவாச. 12,16). அறத் தின் விருப்புச் சிறப்பொடு நூக்க (ஞானா. பாயி. 5). 4. நல்வினை, புண்ணியம். அந்நாள் ஆங்கவன் அறவரசாண்டதும் (மணிமே.25,210-211). அறம்