பக்கம்:பெருஞ்சொல்லகராதி.pdf/622

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அறம்3

பாவமென்னும் அருங்கயிற்றாற் கட்டி (திருவாச. 1, 52). அறம் பாவங்கள் பெரிதாற்றி (தணிகைப்பு. அகத். 333). 5. அறநிலையம். (செ.ப. அக.)

அறம்' பெ. 1. அறக்கடவுள். என்பிலதனை வெயில் போலக் காயுமே அன்பிலதனை அறம் (குறள். 77). 2. இயமன். அறத்தின் மைந்தனுக்கு (பாரதம். 1,

3, 112).

அறம் + பெ. செய்யுளில் அல்லது பேச்சில் தீமை விளைக் கும் சொல். நான் வரகவி; அறம் வைத்துப்பாடுகிற வழக்கமும் எனக்குண்டு அப்படியே பாடிச் சிலருக் குத் தீங்கும் விளைவித்திருக்கிறேன் (மீனா. சரித்.

ப. 53).

அறம்பாடு ! பெ. அறத்தின் தோற்றம் மிகுகை, தரு மோற்பத்தி. அறிபிறப் புற்றனை யறம்பா டறிந் தனை (LDGGLD. 10, 75).

அறம்பாடு?-தல் 5வி. அறநூல் கூறுதல். அறம் பாடிற்றே ஆயிழை கணவ (புறநா. 34, 7).

அறம்பாடு'-தல் 5 வி. தீச்சொற்பட்டுத் தீப்பயனுண்டாகப் பாடுதல். உன்னை அறம்பாடியே கொல்லுவேன்

(பே.வ.).

அறம்பாய் பெ. பாயின் படுத்தற்குரிய பக்கம். அறம் பாய் புறம்பாய் பார்த்துப் போடு (நாட். வ.).

அறம் புறம்1 பெ. (கம்பம் அல்லது தூணின்) இருபுற மும் துளையிட்டுச் செய்யும் தச்சுவேலை. அறம்புற மாகத் துளையிடு (வட். வ.).

அறம்புறம் 2 பெ. தடுமாற்றம், நன்மை தீமை. (சாம்ப.

அக.)

அறம்புறமாகப்பேசு-தல்

5 வி. மரியாதை இன்றித்

தாழ்வாகப் பேசுதல். (இலங்.வ.)

அம்

அறம்வளர்த்தவள் பெ. திருவையாற்றுக் கோயில் மனின் பெயர். அகிலாண்டநாயகி அறம்வளர்த்த வள் (சிவஞானதேசி. திருவருட். 7, 3).

அறமறை பெ. வாழை. (சாம்ப. அக.)

அறமன்றம் பெ. வழக்குமன்றம். (செ.சொ. பேரக.)

அறமனை பெ. மனையறம். (சிலப். 30,196 அரும்.) அறமனைவார்த்தை பெ. அரசாங்க நடவடிக்கைகளில் வழங்குஞ்சொல். (செ. ப. அக. அனு.)

49

2

அறல் 3

அறமிடி பெ. மிக்க வறுமை. இரட்டைச் சுழியுடைப் பரிதன் கருத்தனுக்கு அறமிடி காட்டும் (திருவிளை. 4. 59, 113).

அறமிளகரணை: பெ. மிளகரணைச் செடி வகை. (சாம்ப. அக.)

அறமுறி பெ. அறக்கொடை பற்றிக் கல்லிலோ செப் புத்தகட்டிலோ பொறித்த ஆவணம். வேள்விக் குடி அறமுறி நெடுஞ்சடையன் பராந்தகன் என்ப வனால் வழங்கப் பெற்றது (பெரியபு.ஆ.ப.102.)

அறமொழி பெ. தருமபதம். அரியருலகத் தாங்கவர்க் கறமொழி (மணிமே. 11,34).

அறல்1 பெ.

000

1.அரித்தோடுகை. மட்டறல் நல்யாற்று எக்கர் ஏறி (புறநா. 177, 10). 2. அறுகை, நீங்குகை. நீர் அறல் மருங்குவழிப் படா கொக்கு (பதிற்றுப். 21,26). உணலினும் உண்டது அறல் இனிது (குறள். 1326). மாசறல் முந்து வேட்டுயர் முத்தியைவேட்டது (திருவால..63,10) 3. மழை. சத்தமேகமும் அடைகிடந்து அறல் பொழிதகையும் (அருணகிரி. பு.2). 4. நீர். அவிர் அறல் ஒழுகும் (நற். 144,7). அது தெள் அறல் யாறு (சீவக. 1194). அம்செம் சேதா உண் அறல் உண்அறல் அமிழ்தே (ஞானா. 49). அறல் மொண்டு சூல் கொள் கருமுகில் என (திருப்பு.241). தண் அறல் சேர் வேணியும் ஆனந்தம் (ஆனந்த வண்டு. 499- 500). அறல பணைசூழ்தண்கிடங்கின் மச்சம் சூழ் நாடன் (பாரத வெண். 397). அறல் கால் மண் எனப்பகுக்க (கருவைப் பதிற். அந். 15). முத்தா நதி அறலின் மூழ்கு அருந்தவர் (திருவாடானைப்பு. 1.15). நிகழ்சருகு அறல்வளி அருந்தி (குசே. 83). 5. அறுத்துச் செல்லும் நீர். எக்கர் போழ்ந்தறல் வார (கலித்.29,6). 6. நீர்த்திரை. அறலே நீர்த்திரையும் ஆகும் (திவா. 2190). யின் தெளிவு. தெள்திரை அவிர் அறல் குறியவும் நெடியவும் மடி தரூஉ விரித்து 519-520). 8. பொய்கை. அறல் வந்து சேந்தன் நெஞ்சங் களிக்க (சேந். செந். அமைதி. 39).

அறல் 2 பெ. நீர்க்கடுப்பு. (சாம்ப. அக.)

7.

...

நீர் அலை

கடுப்ப ...

(மதுரைக்.

அறல்' பெ. 1. கருமணல். அரிசிலந் தெள் அறல் அன்ன இவள் விரி ஒளி கூந்தல் (நற்.141,11-12). அவிர் அறல் வையைத்துறை துறைதோறும் (மதுரைக். 340). தண்ணறல் வண்ணந்திரிந்து வேறாகி (மணிமே.20, 41). அறல் மலியுங் கான் யாற்றின் நீர் நசையால் அணையும் (பெரியபு. 28,