பக்கம்:பெருஞ்சொல்லகராதி.pdf/623

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அறல் +

குழல் அறல்

...

386). காரும் அறலும் கருநீலமும் இலச்சையாகும் (திருவனந்தை விலா. 208). 2. நுண்மணல். நுண்மணலுமென நுவலலாகும் (பொதி. நி. 2,162). 3. மயிர்நெறிப்பு. குறியதாகிய அற லைத் தன்னிடத்தே கொண்ட மயிரினையுமுடைய (பெரும்பாண். 162 நச்.). அளி அன்னது ஓர் அறல் துன்னிய குழலாள் (கம்பரா. 2, 6, 2). நெய்ய ஓதி யும் வீதியும் நீள் அறல் நெறிய (திருவிளை. பு. நகரச்சி. 39). 4. (மயிர்போல் அடர்ந்த) சிறுதூறு. அறல் சிறு தூறு (பிங். 2846).

அறல் பெ. 1. திருமணம். அறல் இமையோருற

(மாறனலங். 723). 2. விழா. அறல் நுவலலாகும் (பொதி. நி. 2, 162).

...

விழா என

880

அறல்' பெ. கொற்றான் கொடி. (பச்சிலை. அக.) அறவச்சுன்னம் பெ. புடமிட்ட சுன்னம். (சாம்ப. அக.)

அறவணவடி கள் பெ. (காப்.) புத்த சங்கத்தினரான ஒரு முதிய முனிவர். அறவணவடிகளாபுத் திரன்றிறம் (மணிமே. பதிகம் 57).

உப

அறவழக்கம் பெ. நல்லுரை கற்பித்தல், தரும் தேசம். அருளிருந்த திருமொழியால் அறவழக்கம் கேட்டிலமால் (வீரசோ. 119 உரைமேற்கோள்).

அறவன் பெ. 1. அருளுடையவன். அறவன் போலும் அருளுமாரதுவே (ஐங். 152). அறவன் சேவடி அடைந்தன (தேவா. 2,82,3). அறவன் நீயல்லை யோ (திருவிளை. பு.35,36). 2. பார்ப்பனன். அறவர் அடிதொடினும் (பரிபா. 8, 68). வீமன் ... அறவரை மகிழ்வித்தனன் (வேதாந்த. சத. 85). 3. அறத்தைக் கூறுவோன். அருகன் அறவன் அறிவோற் கல்லது என் இருகையும் கூடி ஒருவழிக் குவியா (சிலப். 10, 202). அறவன் ஆர்த்தெழும் ஓசையும் (கம்பரா. 5, 6, 30). அறவன் அமலன் அருளாளன் (மதுரைச். உலா 157). 4. அறம் செய்பவன். அறவர் தங்கள் அகம்தொறும் ஐயம் உண்துறவர் (பிரபு. லீலை 3, 8). 5. கடவுள். (திருமால்) அறவனை யாழிப்படை யந்தணனை (திருவாய். 1, 7, 1). 6. புத்தன். அண்ணல்... அறவன்... இன்னவும்பலவே (திவா.12).

அறவாடி

பெ. எல்லா மருந்துப் பொருள்களையும் கரை யச் செய்யும் ஓர் செயநீர், சர்வத்திராவகம்.

(சாம்ப. அக.)

அறவாணன் பெ. 1. கடவுள். அறவாணர்க்கு அன் பெனும் அமுதமைத்து அர்ச்சனை செய்வார் (பெரியபு. 51,8). 2. அறவழி ஒழுகுவோன். (சைன வ.)

493

அறவியான்

3. சிவபெருமான். அறவாணன் திருவடிக்கீழ் அன் பினரேல் (சிவஞா. காஞ்சி. பாயி. 21).

அறவாய்ப்போ - தல் 4 வி./ 5வி. செலவழிதல். (திருநெல்.வ.)

அறவாழி பெ. 1. அறக்கடல். அறவாழி அந்தணன் (குறள். 8). 2. தருமச்சக்கரம், அளிசேர் அறவாழி அண்ணல் இவன் என்பர் (சீவக. 1611). அருளோடு எழும் அறவாழியப்பா (திருநூற்று அந். 5).

அறவாழிக்கை பெ. நடனத்திற்குரிய இணைக்கை வகை அமைதி. (சிற். செந். ப. 43)

அறவாழிவேந்தன் பெ. அருகன். வென்றோர் பெரு மான் அறவாழி வேந்தன் விரிபூந்தாமரைமேல் (சீவக. 2814). அறவாழி வேந்தன்... அருகன் பெயரே

(பிங். 191).

அறவாளன் பெ. தருமவான். (செ. ப. அக.)

அறவி! பெ. 1. அறச்சாலை. உலக அறவியின் ஒரு புடை இருத்தலும் (மணிமே.7,93). 2. அறம். ஓங்குயர் சமந்தத்துச்சி மீமிசை அறவியங் கிழ வோன் (மணிமே.11,22-23).

அறவி2 பெ. 1. துறவு பூண்டவள். ஆசில் கொள்கை யறவிபாலணைந்து (சிலப். 13, 103). 2. (அறவடி வானவள், சக்தி) அறத்தி. அறவிநுண் பச்சைப் பொற்கொடி (திருப்பு.472).

அறவிடு-தல் 6 வி. 1. முற்றும் நீக்குதல். உளதும் இலதும் அறவிட்டு (ஞானவா. உபசாந்தி. மானுவே.17). 2. விற்றல். ஆபத்துக் காலத்திலே அறவிட்டுச் சீவிப்பாரும் (திருவாய். 3,6,9 ஈடு).

அறவிநாவாய் பெ. ஆன்மாக்களைப் பிறவிப் பெருங்கட லினின்று கரையேற்றும் கப்பலாகிய புத்தன் இணை யடி. பிறவி என்னும் பெருங்கடல் விடூஉம் அறவி நாவாய் (மணிமே. 11,25).

அறவிய பெ. அ. அறத்தோடு கூடிய. அறவிய மனத் தரன்றி (சூளா.521).

அறவியங்கிழவோன்

பெ. புத்தன். ஓங்குயர் சமந் தத் துச்சி மீமிசை அறவியங் கிழவோன் (மணிமே.

11, 22-23).

அறவியல் பெ. 1.நன்னெறி, தரும இயல்பு. அற வியன் மனத்தை ஆகி (யசோதர. 60).2. (இக்.) ஒழுக்கக் கோட்பாடு. (வரலாறு க.சொ.)

அறவியான் பெ. அறத்தில் நிற்பவன். அறவியாற்கு