பக்கம்:பெருஞ்சொல்லகராதி.pdf/628

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அறிபயிர்

அறிபயிர் பெ. இருவர் மட்டுமே அறிந்துள்ள ஒலிக் குறிப்பு. அறிந்துவேந்தன அறிபயிர் காட்ட (பெருங்.

4, 14, 10).

அறிபு பெ. அறிகை.

மலைக்கட்சி மயில் அறிபு அறியா (நற். 13,8). அன்பு கரியாக அறிபு துணி கல்லேன் (பெருங். 1,36,206).

பய

அறிபொருள்வினா பெ. (இலக்.) அறியப்பட்ட பொருளை ஒரு பயன் நோக்கிக் கேட்குங் கேள்வி. அறிபொருள் வினா அறியப்பட்ட பொருளையே ஒரு னோக்கி அவ்வாய்பாட்டினொன்றான் வினாவுவது (தொல்.சொல். 13 சேனா.).

அறிமடம் பெ. 1. அறிவின் ஒட்பமின்மை, அறிவின் மடப்பம். புணர்ந்துழி உணர்ந்த அறிமடச் சிறப் பினும் (தொல். பொ. 112, 24 இளம்.). 2. அறிந்தும் அறியாத நிலை போன்றிருக்கை. அறிமடமும் சான் றோர்க்கு அணி (பழமொ.நா. 361). 3. நினைவின்மை. (செ. ப. அக. அனு.) 4. அறிந்தபடி நடக்க இயலாமை.

(முன்.)

அறிமுகப்படுத்து-தல் 5 வி. (தெரியாதவரை அல்லது தெரியாததைத்) தெரியச் செய்தல். தனது நண் பரை மற்றவர்களுக்கு அறிமுகப்படுத்தினான் (பே. வ.). புதிய பயிர்த்திட்டம் உழவர்களுக்கு அறிமுகப் படுத்தப்படும் (செய்தி.வ.).

அறிமுகம் பெ. 1. தெரிந்த முகம். அறிமுகம் பிற காண்கிலேன் அடுத்த ஊரறியேன் (சேதுபு. விதூமச். 99). 2. பழக்கம். எனக்கு அவரோடு அறிமுகம் இல்லை (பே.வ.)

அறிமுகம்செய்-தல் 1வி. அறிமுகப்படுத்துதல். (முன்.)

அறியக்கொடு-த்தல் 11 வி. 1.குற்றமேற்றுதல். (வின்.) 2.தெரிவித்தல். நீங்கள் எனக்கு அறியக்கொடுக்க வேண்டும் (இலங்.வ).

அறியகம் பெ. நோயை உண்டாக்கும் ஒரு பேய். (சாம்ப. அக.)

அறியபலம் பெ. திப்பிலி. (முன்.)

அறியல் பெ. மூங்கில். (சங். அக.)

49

98

அறியாவினா

அறியலுறவு பெ. அறிதற்கண் விருப்பம். வினாவாவது அறியலுறவு வெளிப்படுப்பது

சேனா.).

(தொல். சொல். 13

அறியாக்கரி பெ. பொய்ச்சான்று/சாட்சி. அறியாக்கரி பொய்த்து (சிலப். 15, 78).

அறியாத்தனம் பெ. தெரியாத்தன்மை. (இலங்.வ.)

அறியாதுடன்படல் பெ. தான் அறியாதவற்றைப் பிற பெரியோர் கூறியவாற்றான் உடம்படல். (மாறனலங்.

25 2000)

அறியாப்பருவம் பெ. (நன்மை தீமையுணராத) இள மைக்காலம். அறியாப் பருவத்து அடங்காரோடு ஒன்றி (நாலடி. 171). அறியாப் பருவம் அதிலென் றும் (பட்டினத்தார். அருட்பு. மகடூஉ. 46).

அறியாப்பிள்ளை பெ. விளைவு தெரியாத பிள்ளை. அறியாப்பிள்ளை புத்தியைப்போல (பழ. அக. 788).

அறியாப்பெண் பெ. (அறிவறியாத)

இளம்பெண். அஞ்சும் மூன்றும் உண்டானால் அறியாப்பெண் ணும் கறியாக்கும் (முன், 125).

அறியாமை பெ. 1. அறிவின்மை, மடமை. எய்யா மையே அறியாமையே (தொல். சொல். 342 சேனா.). அறியாமையின் வெறியென மயங்கி அன்னையும் அருந்துயர் உழந்தனள் (ஐங். 242). கருணாகர மூர்த்திக்கு ஆராதனை என் அறியாமை ஒன்றுமே (பெருந்.20). அறிவினில் சிறிய நீரார் அறிந்து அறியாமை யானும் (தணிகைப்பு. வீராட். 104). அறி யாமை என்னும் இருள் (கலைமகள் பிள். 22). 2. தெரிந்துகொள்ளாமை. அறிதோ றறியாமை கண்டற்றால் (குறள். 1110). அடியேன் அறியாமை அறிந்து நீயே அருள் செய்து (திருவால. பு. 33, 4). அறியாமை தொடங்கு முன்னே (சங்கர. கோவை

225).

...

அறியாமைமலம் பெ. (தத்துவம்) ஆணவ மலம். அறியாமை மலத்தால் அறிவுமுதல் கெட்டு (பட்டினத் தார். அருட்பு. முதல்வன். 3).

அறியாவினா பெ. தெரியாதது ஒன்றைத் தெரிதற்குக் கேட்குங் கேள்வி. ஆசிரியன் இச்சூத்திரத்திற்குப் பொருள் யாதென்பது அறிவினா மாணாக்கன் அவ்வாறு கூறுவது அறியாவினா (நன். 385 சங்கர நமச்.).