பக்கம்:பெருஞ்சொல்லகராதி.pdf/630

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அறிவனார்

அறிவனார் பெ. பஞ்சமரபு என்ற இசைநாடக இலக்கண நூலாசிரியர். சேறை அறிவனார் செய்தமைத்த ஐந்துதொகை (பஞ்சமரபு 5). இன்னிசையின்பா என்றார் பஞ்ச மரபுடைய அறிவனார் (சிலப். 6, 35 அடியார்க்.).

அறிவனாள் பெ. முரசுநாள் (உத்திரட்டாதி). முரசு பிற்கொழுங்கோல் மன்னன் இம் மூன்றினோடு உரைசெய் அறிவனாள் உத்திரட்டாதி (திவா.

102).

அறிவனூல்

பெ. ஆப்தன்

வாக்கியமாகிய

நூல். அறிவனூல் போக புவன முண்டென (மணிமே.

27, 43-44).

அறிவாகரன் பெ. ஞானத்திற்கு இருப்பிடமாக உள்ள வன். (வின்.)

அறிவாணி பெ. காமமிக்க காமமிக்க பெண்டிர் பெண்டிர் வகை நான்க னுள் இரண்டாவதைச் சேர்ந்தவள். (சாம்ப. அக.) அறிவாளி பெ. கூர்மதியுள்ளவன். திருவள்ளுவர் மிகச் சிறந்த அறிவாளி (செய்தி.வ.).

அறிவாற்றல் பெ. மதிநுட்பம். இந்த நாட்டில் அறி வாற்றல் மிக்கவர் பலர் உள்ளனா (நாட்.வ.).

.

அறிவி -த்தல் 11 வி. 1.தெரிவித்தல், சொல்லுதல். அறிவித்து நீ நீங்க (கலித். 136,15). துரியோதனன் வந்தால் என்னை அறிவியாமல் வரவிடுவீர் (பாரத வெண். 73). அறிவித்தபடியே... சயனக்கோலம் கண் டார் (எதுமலை. பு. 11). 2. உணரச்செய்தல். உன்னை அறிவித்து என்னை ஆட்கொண்டு (திருவாச. 5,22). உயர்குடிப்பிறந்தாரை அவரவர் வாய்ச்சொல் அறி விக்கும் (குறள். 954 மணக்.). 3. எல்லோரும் அறியும்படி செய்தல். விண்ணரசு அறிவிக்கப்படுகிறது (விவிலி. மத்தேயு 3, 1). இன்று குளத்து மீன்கள் ஏலத்துக்கு விடப்படும் என்று அறிவித்தார்கள் (நாட்.வ.). இறையவனை தமிழே... என்று அறிவிக்கவரும் தோன்றல் (தமிழரசி குற. 8).

...

அறிவிக்கை பெ. அறிவிப்பு. தேர்தல் அறிவிக்கை எப்போது வரும் (பே.வ.).

அறிவிப்பாளர் பெ. (வானொலி தொலைக்காட்சி பொதுக்கூட்டம் முதலியவற்றில்) நிகழ்ச்சிகளைத் தெரிவிப்பவர். காந்தி அண்ணல் இறந்த செய்தியை வானொலி அறிவிப்பாளர் துயரம்தோய்ந்த குரலில் அறிவித்தார் (செய்தி.வ.).

அறிவிப்பு பெ. அறியச்செய்கை. (முன்.)

500

அறிவியல் பெ. பகுத்தறிவினாலும்

அறிவு

சோதனையினா

லும் இயற்கையில் அடங்கியுள்ள உண்மைகளைக் காணும்

கல்வி, விஞ்ஞானம். (முன்.)

அறிவிலாப்பித்தம் பெ. பித்தநோய் நாற்பதனுள் ஒன்று.

(சாம்ப. அக,)

அறிவிலி பெ. மதியில்லாதவன்.

யென்றாள் (கம்பரா. 2,2, 75).

அறிவிலியடங்குதி

அறிவினா பெ. தெரிந்து கேட்குங் கேள்வி. ஆசிரியன் இச் சூத்திரத்திற்குப் பொருள் யாது என்பது அறிவினா (நன். 385 சங்கரநமச்.).

அறிவினாள் பெ. கல்விக்கு அதிதேவதையாகிய கலை அறிவினாளை...யாழ் ஓர் கரவமுதை

மகள்,

...

காக்கவே (கலைமகள் பிள். 14).

அறிவினொளி பெ.

சூடக்கல்லின்

தின்) சாரம். (சாம்ப. அக.)

(கற்பூரசிலாசத்

அறிவீனம் பெ. மடமை, மதியின்மை. அவன் அறி வீனத்தைப் பேச்சே காட்டுகிறது (பே. வ.).

அறிவீனன் பெ. அறிவில்லாதவன். சீர் அறியா அறி வீனன் (அந்தோனி. அண்.8).

அறிவு பெ. 1. ஞானம், கல்வியறிவு.

கேள்வியும்

அறிவும் அறத்தொடு நுண்ணியை (பரிபா.13,55). அறிவிலா அரக்கன் ஓடி அருவரை எடுக்கலுற்று (தேவா. 4, 9, 10). தம்மின் தம் மக்கள் அறி வுடைமை (குறள். 68). அறிவு இலாத நாயினேன் (திருமழிசை. திருச்சந். 84). கருணை நோக்கம் அணை தலினால் அறிவின்மை அகன்று நீங்கி (பெரியபு. 28, 926). போகம் அறிவு அழகு...பதினாறு பேறுந்தரு வாய் (பெருந். 418). ஈண்டிய அறிவே மாண்புறு நிதி (கலைமகள் பிள். 28). 2. கூர்மதி. ஞாயிறு திங்கள் அறிவே நாணே (தொல். பொ. 501 இளம்.). அம்ம பாணனது அறிவே (ஐங். 474). எதிரதாக்காக்கும் அறிவினார்க்கு இல்லை அதிரவருவதோர் நோய் (குறள். 429). அறிவும் சால்பும் (மணிமே. 4,109). அறிவு ஒன்றுமில்லாத ஆய்க்குலத்து (திருப்பா.28). 3. நன்மை தீமை அறியும் பண்பு, பகுத்தறிவு. செறி வும் நிறைவும் செம்மையுஞ் செப்பும் அறிவும் அருமையும் பெண்பாலான (தொல். பொ.206 இளம்.). அறிவே ஆங்கட்செல்கம் எழுகென கூறி இருக் கும் (குறுந்.219). எப்பொருள் யார் யார்வாய்க் கேட்பினும் அப்பொருள் மெய்ப் பொருள் காண்

...