பக்கம்:பெருஞ்சொல்லகராதி.pdf/631

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அறிவுகெடு-தல்

...

பது அறிவு (குறள். 423). 4. பொறியுணர்வு. இம் மொழி கேட்டு அறிவுற்றாள் (கம்பரா. 5, 5, 75). அறிவால் உன்னவரிய வொருமுதல்வன் (மதுரைச் உலா 2).5. அறியவேண்டியது. அறிவு அறியாமக்கட் பெறல் இன்னா (இன். நாற்.29). அறிவோர்க்கு அறிவு அஅந்நியம் (ஞானா. 14,12) 6. கல்வி. நூலறிவு பேசி நுழைவிலாதார் திரிக (காரை. அந். 33). அறி விற்கும் மலரில் உறை பிரமற்கும் ஒரு தலைவி (கலைமகள் பிள். 61). 7. ஆன்மா. அறிவுக்கு அறிவிப் போன் சன்மார்க்கி (திருமந். 1701). வெல்லப்பட் டார் புலன்கள் ஒத்தார் அவனும் நல்லறிவை ஒத்தான் (கம்பரா. 5, 9, 64). அறிவினுக்கு அறிவும் அவனே (கம்பன் பிள். 2, 1). அறிவில் தோய்ந்த சுவைப்பயனே (கலைமகள் பிள்.28). 8. (அறிவுவடி வான) இறைவன். ஆதிபோற்றி அறிவே போற்றி (திருவாச. 4.107).

...

அறிவுகெடு-தல் 6 வி. மயங்குதல். (இலங்.வ.)

அறிவுகேடன் பெ. மதியற்றவன்.

ப. அக.

(திருவாய். ஈடு / செ.

அறிவுகொளுத்து-தல் 5 வி. புத்தி புகட்டுதல். யானாம அறிவு கொளுத்துகிற்பேன் இங்ஙன் ஏறனையான்

(அம்பி. கோ.52).

அறிவுநூல் பெ. ஞான விளக்கம் தரும் புத்தகம். அறிவு நூல் கல்லாது உலக நூலோதுவது எல்லாம் (நாலடி. 140). அறிவு நூல் விரித்தல் (ஞானா. 24, 20).

அறிவுப்பல் பெ. அறிவு பெறும் காலத்தில் முளைக்கும் கடைவாய்ப் பல். (மருத்.க.சொ.)

அறிவுபிற-த்தல் 12 வி. 1. ஞானம் உண்டாதல். (செ. ப. அக.) 2. மூர்ச்சை தெளிதல்.(வின்.)

அறிவுப்புகட்டு-தல் 5 வி. புத்திமதி கூறுதல். நன்றாகப் வேண்டுமென்று

படிக்க

ஆசிரியர் மாணவர்

களுக்கு அறிவு புகட்டினார் (நாட். வ).

அறிவுமகள் பெ. கலைமகள், வெண் மரை மலரில் நிலவுமகள் அறிவு மகள் (கலைமகள் பிள். 10).

அறிவுமடம்படு-தல் 6வி. அறிந்தும் அறியவியலா உணர்ச்சிவயப்படுதல். அறிவு மடம்படுதலும் அறிவு நன்குடைமையும் (சிறுபாண். 216).

அறிவுமயங்கு-தல் 5 வி. நினைவிழத்தல். (செ.ப.அக.)

501

அறு1-தல்

அறிவுரை பெ. ஒருவர் எவ்வாறு நடந்துகொள்ள வேண்டும் என்று மற்றவருக்குக் கூறும் புத்திமதி. தொண்டர்களுக்குத் தலைவர் அறிவுரை கூறினார் (செய்தி.வ.).

அறிவுறால் பெ.

அறிவுறுத்துகை.

பழியுமுண்டோ (குறிஞ்சிப். 22).

நாமறிவுறாலிற்

அறிவுறு -தல் 6வி. 1. அறிதல். பலர் அறிவுறுதல் அஞ்சி (அகநா. 142,15). தாய் அறிவுறுதலின் ஏனோரும் அறிப (இறை. அக. 27). 2 (உணர்வு பெறுதலாகிய) துயிலெழுதல். கிடந்துறங்குஞ்சீரிய சிங்கம் அறிவுற்று (திருப்பா.23).

அறிவுறுத்து-தல் 5 வி. 1. தெரிவித்தல். அலர் அறி வுறுத்தல் (இறை. அக. 23 உரை). அறிவுறுப்பது செப்பு எனின் (தொல். சொல். 13 சேனா.). 2. அறிவு புகட்டல். துன்னுநர் சுட்டவும் சுட்டறிவுறுத்தவும் (பரிபா. 19, 54).

அறிவை பெ. பெ. ஞானம். அறிவை ஆறு (பெரியாழ். தி. 5, 4, 2).

என்னும் அமுத

அறிவொப்புக்காண்டல் பெ. தானறிந்தவற்றைப் பிறன் அறிவோடு ஒப்புநோக்குகை. அறியான் வினாதல் அறிவொப்புக் காண்டல் ... மெய்யவற்குக் காட்ட லோடு ஐவகை வினாவே (நன். 385 சங்கரநமச்.).

அறிவொப்புக்காண்டல்வினா பெ. தானறிந்ததைப் பிற னறிவோடு ஒப்பு நோக்கக் கேட்குங் கேள்வி. அறியான் வினாதல் அறிவொப்புக் காண்டல்... மெய்யவற்குக் காட்டலோடு ஐவகை வினாவே (நேமி 35,6

உரைமேற்.).

...

அறு 1 -தல் 4 வி. 16 வி. 1. (கயிறு முதலியன) அறுந்து போதல். அறுநூல் பளிங்கின் துளைக்காசு (அகநா. 315,12). அமுதுகடைய இருவயின் நாணாகி அறாஅது அணிந்தாரும் தாம் (பரிபா.திர.1,68-71). தவக் கிழமைபோல இறாத வில் அறாத நாண் (சீவக. 2204). அம்பொன்று வில்லொடிதல் நாணறு தல் (நந்திக்கலம். 77). சாப நாணறு குமிலவோதை (இரகு. யாகப். 87). வான் மடவார் கண்ட மங்கல நாண்

அறாது ஆலம் உண்டு (திருப்பூவணப்பு. திருக்கை. 7). 2. துண்டுபடுதல், வெட்டுப்படுதல் கிழிதல். கேடகத்தோடு அற்ற தடக்கை (கள.நாற். 28). நெறியின் வில்லூன்றி நிற்ப நிழல் மணிப் பன்றி அற்று மறியுமோ (சீவக. 2201). தலை எலாம் அற்ற முற்றும் தாளெலாம் அற்ற (கம்பரா.