பக்கம்:பெருஞ்சொல்லகராதி.pdf/632

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அறு2-தல்

அற

6,14,149).வாளேந்தி வந்தான் வலக்கை எய்தானே (பாரதவெண். 508). வடக் குங்குமக் கொங்கை வம்பறவே விம்ம (அம்பி. கோ.20).

அறு - தல் 4வி /6 வி. 1. இல்லாது போதல். அருவி அற்ற

பெருவறற் காலை சிறுமீன் (ஐங். 165). (கம்பரா. 5, 5, 9).

...

சாற்றும்

(பதிற்றுப். 43, 14). அறுகழிச் அரக்கர் குலம் அற்று அவிய மறுவற்ற சோதி மதிமுகப் பேதை (சங்கர.கோவை 15).பெண்கள் அறிவை வளர்த்தால் வையம் பேதைமை அற்றிடுங் காணீர் (பாரதி. பல்வகை. 3, 10). தவம் புரியப் பெற்றவரே தமது பிறப்பு அற்றவரே (குமணசரித் 145). அங்கம் இலான் நட்பை உருவற்ற நீயும் பெற்றாய் (தமிழரசி குற. 38). 2. தீர்தல், முடிதல். மாசுஅற விசித்த வார்புறு வள்பின் (புறநா. 50,1). நாள் அற்றது எண்ணி (கம்பரா. 1, 7, 42). அறு பொருள் - தீர்ந்த பொருள் என்றுமாம், அற்ற காரியம் என்றாற் போலே (சிலப். 17 முன்னிலைப்பரவல் 2 அடியார்க்.).3. நீங்குதல், கழிதல். மாசு அறக்கண் ணடி வயக்கி (பரிபா. 12, 20). அழிவந்த செய்யினும் அன்பறார் (குறள். 807). அற்றவர்க்கு அன்பர் (தேவா. 4,56,3). போனது பொற்பும் மேன்மை யும் அற்றேன் (கம்பரா. 3, 8,3). இடுக்கண் எல் லாம் அறுகின்றன (பட்டினத்துப். கோயில். 30). பொது வற அடிமை செய்திடு (மீனா. பிள்.53). யெலாம் நவில வரு புகழ் அறாக் கலைமகள் (கலை மகள் பிள். 55). 4. அழிதல். அற்று உலந்த குரங்கும் அனந்தமே (கம்பரா. 6, 14, 47). அரசர் மண்ட லத்து அரண்அறப் பறித்து (கலிங். 100). 5. செரித் தல். அற்றது போற்றி யுணின் (குறள். 942). முன்பு உண்டது அற்றால் (முன். 943 மணக்.). 6. பாழாதல். ஒன்றியவர் அற ஊர்ப்புலத்துத் தார்தாங்கி வென்றி அமரர்விருந்து (புற. வெண். 87).

மறை

அறு3- தல் 4 வி. / 6 வி. தங்குதல். மணிமாநிலத்து அற்றதோர் கோதையின் (சீவக. 226).

அறு-தல் 4 வி./6வி. நட்புச் செய்தல். பேணித் தம் மோடு அற்றவருக்கு (உத்தர. திக்குவி. 55).

அறு- த்தல் 11 வி. 1. அரிதல். வெண்ணெல் அரி நர் மாற்றினர் அறுக்கும் மெல்லம் புலம்பன் (ஐங். 190). மீன் தடிந்து விடக்கு அறுத்து (பட்டினப். 176). மீன் தலை எண்பலம் என்றால் அதனை அறுத்து நிறுப்போர் ஒருத்தர் இன்மையின் (நக்கீர. கோப. 1,88). வாடிய கொடியை அடியிலே அறுத்

50

2

அறு8-த்தல்

தாற் போலும் (குறள். 1304 மணக்.). கழனி புகுந்து அறுத்து அடைந்த களமர்கள் (சீறாப்பு. 1,2, 41). பசுவை மடியையே அறுத்தால் என்னும் (வேதாந்த சத. 6). 2. ஊடறுத்தல், துண்டித்தல். வருபுனல் கற் சிறை கடுப்ப இடையறுத்த ஒன்னார் (மதுரைக். 725). தலைஐந்திலும் ஒன்று அறுத்தாய் (தேவா. 7, 4, 8). விசும்பு அறுத்து இழிந்து (சீவக. 3055). அறம் தனை வேர் அறுத்து (கம்பரா. 2, 10, 48). காற் றால் இடை அறுக்கப்படாத முயக்கம் (குறள். 1108 மணக்.). பிரமன் சிரத்தை அறுத்த திறனும் (மதுரைச் உலா 260). ஆழ்தடம் கலந்த கரா துஞ்ச நேமி அறுக்கக் கண்டு (திருவரங். அந். 64). 3.வெட்டுதல். அறுத்தலின் குறைத்தலின் (தொல். சொல். 72 அறுத்தல் சிறிது இழவாமல் சினையையாயினும் முதலையாயினும் இரு கூறு செய்தல் -சேனா.). கருமா அறுத்துக் கோலின் ஏற்றிக் கொழுந்தீக் காய்ச்சி (கல்லாடதே. கண். மறம் 16) . பொருப்பினை முதற் சிறை அறுத்த விசயத்தினொடு (திருமலை முரு.

பிள். 11).

...

அறு 6 -த்தல் 11வி. 1. இல்லாமல் செய்தல். சூர் மருங்கு அறுத்த மொய்ம்பின் மதவலி (முருகு.275). ஏழ் பிறப்பும் யான் அறுத்தேன் (இயற். மூன்றாம் திருவந்.2). துயரங்கள் அண்டாவண்ணம் அறுப் பான் (தேவா. 2,61,1). குறும்பு அறுக்கும் வேல் வேந்தர் (ஏரெழு. 41). கரு வைகும் தம்பிறவிக் கட்டறுத்து (நூற்று.அந்.108). 2. (நீர் இல்லாமல்) வறளுதல். நீர். அறுத்த சுரம் (திணைமொழி.11). 3. (உண்டது இல்லாமற் போதல்) செரித்தல். ஆர

.

உண்டு அறுக்கல் ஆற்றாது (சீவக. 2839). 4. நீக்குதல். கண்டு மயர் அறுக்கும் காமக் கடவுள் (பரிபா. 15, 37). கட்டு மயக்கம் அறுத்த வர் (தேவா. 7,10,7). பாசமாம் பற்றறுத்துப் பாரிக்கும் ஆரியனே (திருவாச. 1, 64). மருளும் பிணி மாயை அறுத்திடுவான் (பெரியபு. 21,70). மறுஅறுத்திருந்த ... பூரணமா மதிக்குலம் (சீறாப்பு. 1,5, 73). மயக்கறுத்த யோகியைப் போல் (களப்ப.

காதல் 89).

அறு-த்தல் 11 வி. 1.தோல்வியடையச்செய்தல். ஆடு சிறை அறுத்த நரம்பு சேர் இன் குரல் (பதிற்றுப். 43, 21). 2. வருத்துதல், தொந்தரவு செய்தல். கறங்கு மணி நெடுந்தேர் கண்வாள் அறுப்ப (திணைமொழி.48). என்னை எப்போதும் அறுக்கி றான் (பே.வ.).

அறு8 - த்தல் 11 வி. வெல்லுதல். கயவர் தமையறுத்து மிகச்சினந்து (இருசமயவி. தனியன். 1).