பக்கம்:பெருஞ்சொல்லகராதி.pdf/634

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அறுகு2

...

(திருவாச. 19, 9). இருபிறப்பாளர் அறுகுநீர் தெளித்து (கம்பரா. 1, 13, 73). துளித்தலை மெல் லறுகு பனிதொடுத்தசைய (பெரியபு. 28, 329). பச்சைத் தோட்டு மெல்லறுகு நீட்டும் (செ. பாகவத 5, 2, 7). அறுகாற் பீடுயர் முடியார் (திருவிளை. பு. பாயி. 1). அறுகு நிம்பம் அடிசில் அரிசனம் (கந்தபு. 1,10,35). அறுகுபிறை செருகுசடை அண்ணல் (ஞான. உபதேசகா. 2056). அறுகு படர்ந்திருக்கும்... கிண று (நல்ல தங்.ப.28).

அறுகு2 பெ. 1.சிங்கம். அறுகு ஓட்டு யானைப் பொதினி (அகநா. 1, 4). மாளிகை வாயில் அறுகு சூழ் நிரைத்தெற்றி (திருவிளை. பு. 20, 7). அறுகும் அம்புலி ஆமையோடு (சங்கர. கோ. பு. 1, 3). கரடி பன்றி மதமலை அறுகுசெய்யும் குமுறல் (குமண சரித். 192). 2. யாளி. அறுகு மாமுகத் தண்ணல் (கந்தபு. 3, 18, 37). அறுகு எனும் பெயரே யாளி யும்...(வட.நி.98). 3. யானை. அறுகு சிங்கமும்... யானையும் (பொதி.நி. 2, 165). அறுகு முக்கடம் பொழிந்து வீறு இயற்றுதல் அடுக்கும் (புவனேந். காவி. நகரப். 15). 4. ஆண்புலி. அறுகு சிங்கமும் புலியும் யானையும் (பொதி.நி.2,165).

அறுகு3 பெ. 1. வெளித்திண்ணை. (செ. ப. அக. அனு.) 2. தெருப்பந்தல். (வட்.வ.)

அறுகு பெ. ஆளிவிதை அரைத்துப் பிழிந்த ரசம். (இராச வைத்.சங். அக.)

அறுகுணம் பெ. அரசர்க்குரிய சந்தி விக்கிரகம் யானம் ஆதனம் கூட்டுதல் பிரித்தல் எனும் ஆறுகுணங்கள். அறுகுணம் சந்தி முதலியன (கௌடலீயம் ப.11).

அறுகுணன் பெ. (ஆறு குணங்களைக் கொண்ட தெய்வம்.(வின்.)

அறுகுதராசு பெ. மருந்துப்பொருளையும், தங்கத்தை யும் நிறுக்கும் சிறுதராசு. (செ.ப.அக.)

அறுகுமூலி பெ. ஒரு மருந்து மூலிகையான வெள்ளறுகு. (சாம்ப. அக.)

அறுகுவெட்டுத்தரிசுக்கூலி பெ. காடுகளை வெட்டிச் செம்மை செய்து உழவுக்குக் கொண்டு வந்தவர்க்கு அதுபற்றி அந்நிலத்தில் ஏற்பட்ட அநுபோகவுரிமை.

(வட். வ.)

அறுகுறை பெ. தலையற்ற உடல், முண்டம். ஆடின அறுகுறை அலகைகளுடனின்று (பாரதம். 3,2,141). அறுகெடு-த்தல் 11 வி. 1. அறுகம்புல் இட்டு வாழ்த் துதல். மறையோர் அறுகெடுக்க (சேக்கிழார்ப்பு. 88).

504

அறுசமயம்

2.வழிபடுதல். அறுகெடுப்பார் அயனும் அரியும் (திருவாச. 9, 5). அரசர் அப்பொழுது அடிமிசை அறுகெடுத்திட (கலிங். 264).

அறுகெரு பெ. பாத்தியத் திரவியங்களின் தொகுதி. அறுகெருவுடன் கை அள்ளுநீர் என (திருச்செந்.

அக. 97).

அறுகெழுந்தபடுதரை பெ. அறுகு முளைத்து உழவுக்குப் பயன்படாத தரிசு நிலம். (தெ.இ.க. 5,376)

...

அறுகை" (அறுகு 1) பெ. அறுகம்புல். மணிவார்ந் தன்ன மாக்கொடி அறுகை (குறுந்.256). பழங்கன்று கறித்த பயம்பு அமல் அறுகை (அகநா. 136, 11). சிறுபூ நெருஞ்சியோடு அறுகை பம்பி (பட்டினப்.256). அறுகை நந்தி என்று இன்னவை முடித்த சென்னியன் (சிலப். 22, 19-20). ஆவினிரையலரும் அறுகையும் செரீஇ (பெருங். 1,40, 267). வேர றுகை பம்பிச் சுரைபடர்ந்து வேளைபூத்து (முத் தொள். 116). அறுகையும் நெருஞ்சியும் அடர்ந்து (மணிமே. 12,60).

.

அறுகை2 பெ. ஒரு குறுநில மன்னன். வெள்போர் அறுகை சேணன் ஆயினும் (பதிற்றுப். 44, 10-11).

அறுகைவாணிகன்

7, 318)

பெ. துணிவிற்பவன். (தெ. இ. க.

அறுகோணபதி பெ. ஆறுநிலைக்களங்களுள் ஒன்றான தும் பதினாறிதழ்த் தாமரை வடிவினதாகக் கருதப் படுவதுமான அடி நாத்தாவின் அதிகாரி. (சாம்ப. அக.)

அறுகோணம் பெ. 1. ஆறுமூலை கொண்ட வடிவம். தண்பிறை மூன்றுகோணம் தகும் அறுகோணம் வட்டம் (சி. சி. 2, 67). 2. உயர்தர வைரத்திற் குரிய குணம். (குண. 2 ப. 293)

அறுகோணவமைதி பெ. சிவபெருமானின் நடனத்திரு மேனியுருவம் ஆறுகோணக் கட்டத்திற்குள் அமைந் துள்ள நிலை. அறுகோணவமைதியில் அமைந்த இத்திருவுருவம் (சிற். செந்./செ.சொ. பேரக.).

அறுசங்கம் பெ. புணர்ச்சி. (சித். அக.)

அறுசமயம் பெ. சைவம், வைணவம், சாக்தம், சௌரம், காணபத்தியம், கௌமாரம் என்னும் ஆறு சமயங்கள். தலைப்படுவார்க்கிங்கு அவமல்லதில்லை அறுசமயங் கள் (திருமந். 1534). அறுசமயம் பணிவகை செய்து (திருவாச. 43,3). கொள்கை சான்ற அறுசமயமும்