பக்கம்:பெருஞ்சொல்லகராதி.pdf/637

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அறுதொழில்

அறுதொழில் பெ. அந்தணர்க்குரிய ஓதல், ஓதுவித்தல், வேட்டல், வேட்பித்தல், ஈதல், ஏற்றல் என்னும் ஆறு தொழில்கள். அறுதொழில் அந்தணர் அறம்புரிந் தெடுத்த (புறநா. 397,20). அறுதொழில் அந்த ணர் வணங்கும் தன்மையை (இயற். திருவெழு.14). அறுதொழில் முத்தீயருந்துறை போகிய (பெருங். 2,

3, 9).

அறுதொழிலாளர் பெ. பார்ப்பனர். அறுதொழிலாளர்

பார்ப்பார் தொல்பெயராகும் (பிங். 726). அறுதொழிலாளர்க் குறுதி பயந்தனை (நக்கீர. திரு Gay. 28).

அறுதொழிலோர் பெ. பார்ப்பனர். அறுதொழிலோர் நூன்மறப்பர் (குறள். 560). அறுதொழிலோர் ஈந்த அருக்கியம் (கழுக்குன்றப்பு. தினகர. 14).

...

அறுதோசி பெ. ஒன்றுக்கும் உதவாதவன். (இலங். வ.) அறுந்தருணம் பெ. அவசரசமயம். (வின்.)

அறுந்தறுவாய் பெ. அவசரசமயம். (செ. ப. அக.)

...

அறுந்தொகை பெ. மிச்சமின்றிப் பிரிக்கப்படும் எண். ஐந்தாற்பிரித்தால் பதினைந்து மிச்சந்தராது ஆத லால் அது அறுந்தொகையாகும் (கணக்கதி. சங். அக.).

அறுநீர்' பெ. நீரின்மை. அறுநீர்ப்பைஞ்சுனை (அகநா.

1, 12).

அறுநீர்' பெ. சீக்கிரம் வற்றிப் போகும் நிலைமை யிலுள்ள நீர். இந்த நிலத்துக்கு அறுநீர் பெருநீர் கூடை இறைத்துக் கொள்ளவும் (தெ.இ.க. 17,732).

அறுநூறு பெ. ஆறு நூறுகள். இருநூறு அறுநூறு எனவரும் (தொல். எழுத். 460 நச்.).

அறுப்படிகணக்கு பெ. இலாப இழப்புக்களைக் காட்டுங் கணக்கு. (வட்.வ.)

அறுப்பம்புல் பெ. புல்வகை. நீடு அறுப்பம் புல்லாய்ப் படுபாதிபோக (சரவண. பணவிடு. 144).

அறுப்பலகு பெ. சம்பக்கத்தி. (எந்திர. க. சொ.)

அறுப்பன்பூச்சி பெ. தானியப்பூச்சி வகை.

(வட்.வ.)

அறுப்பின் பண்டிகை பெ. விளைவுக் காலத்துக்குப் பின் காணிக்கை செலுத்தும் கிறித்துவ நல்ல நாள். (கிறித். வ.)

50

07

அறுபத்துநாலுகலை

அறுப்பு1 பெ. 1. கதிர் அறுக்கை. தைமாதம் அறுப்பு (பே.வ.). 2. மரத்தின் அறுத்த பக்கம். (வின்.) 3. அறுத்த துண்டு. (முன்.) 4. தாலியறுக்கை. (முன்.) 5. புண்ணை அறுத்த இடம். (முன்.)

அறுப்பு' பெ, கண்டனம். (த.த.அக.)

அறுப்புக்காலம் பெ. கதிர் அறுக்கும் பருவம். ஆண்டு தோறும் அறுப்புக் காலம் (நாஞ். மரு. மான். 8, 70).

அறுப்புக்கூலி' பெ. 1. கதிரறுக்குங்கூலி. (செ. ப. அக.) 2. மரம்முதலியன அறுக்குங் கூலி. (முன்.)

அறுப்புக்கூலி' பெ. 1. கைம்பெண்ணுக்குக் கொடுக்கும் வாழ்க்கைப்படி. (முன்.) 2. அறுத்துக்கட்டும் சாதி களில் கைம்பெண்ணுக்குக் கொடுத்து விலக்கும் வாழ்க்கைப்படி. (மூன்.)

அறுப்புக்கோடி பெ. தாலியறுத்தவட்குச் சுற்றத்தார் இடும் புதுத்துணி. (பே.வ.)

அறுப்புச்சீட்டு பெ. கதிரறுக்கக் கொடுக்கும் ஆணை. (செ.ப.அக.)

அறுப்புச்சுகம் பெ. கைம்பெண்ணுக்குக் கொடுக்கும் வாழ்க்கைப்படி. (வட்.வ.)

அறுப்புச்சொம்மு பெ. பிள்ளையில்லாத கைம்பெண் ணுக்குக் கணவன் வீட்டார் வாழ்க்கை நடத்த மொத்த மாய்க் கொடுக்குந்தொகை. (செ. ப. அக. அனு.)

அறுப்புப்பணம் பெ. கதிரறுக்குங்கூலி. (செ.சொ. பேரக.)

அறுபகை பெ. காமம், குரோதம், உலோபம், மோகம், மதம், மாற்சரியம் என்ற ஆறு உட்பகை. அறுபகை செற்று... ஞானம்புகலுடையோர் (தேவா. 1,132, 6). ஐம்புலன்களையடக்கி நின்று அறுபகை துறந்து (சிவஞா. காஞ்சி. திருமேற். 6).

அறுபடு-தல் 6 வி. அறுக்கப்படுதல். மரம் இரண்டாக அறுபட்டது (பே.வ.).

அறுபத்துநாலுகலை பெ. 1. அக்கரவிலக்கணம், 2. இலி கிதம், 3. கணிதம், 4. வேதம், 5. புராணம், 6. வியா கரணம், 7. நீதிசாத்திரம், 8. சோதிடசாத்திரம்,9. தரும