பக்கம்:பெருஞ்சொல்லகராதி.pdf/641

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அறுவரி

சமயத்தைச் சார்ந்தவர். அறுவர்தம் நூலும் அறிந்து (ஏலாதி 75,1).

அறுவரி பெ. தவணையிற் செலுத்தும் வரி. (வின்)

அறுவா1-தல் 5 வி. 1.

செலவழிந்துபோதல். (திரு

நெல்.வ.)

2.முடிதல். (ராட். அக.)

அறுவா?-தல் 5 வி.சேகரிக்கப்படுதல். (முன்.)

அறுவாக்கு-தல் 5 வி. 1. செலவழித்துவிடுதல். (திரு நெல்.வ.)2 முடித்தல். (ராட். அக.)

.

அறுவாய்' பெ. ஆரல் (கார்த்திகை) என்னும் மூன் றாம் நாண்மீன். அறுவாய் நிறைந்த மதிப்புறத்தோ வென (கல்லாடம் 95,9).

அறுவாய்'

பெ. 1. குறைந்த பகுதி. அறுவாய் நிறைந்த அவிர்மதிக்கு (குறள்.1117). 2. வாள் முதலியவற்றால் அறுபட்ட இடம். (பே.வ.) 3. வெட்டு வாய். (முன்.)

அறுவாய்ப்போ-தல் 5 வி. முற்றும் செலவாதல். நெல்.வ)

அறுவாள் பெ. வெட்டரிவாள். (செ. சொ. பேரக.)

...

(திரு

அறுவி -த்தல் 11 வி. நீக்குவித்தல். பாவமாயின பற்று அருவித்திடும் திருநாகேச்சரவரே (தேவா. 5,52, 2). சித்தமலம் அறுவித்துச் சிவமாக்கி எனை ஆண்ட (திருவாச. 51,1).

அறுவிடு-தல் 6 வி. நிலுவையை முற்றும் வசூலித்து விடுதல். (செ.ப. அக.)

அறுவிதி பெ. முடிவு. வழக்கு அறுவிதியாயிற்று

(ராட். அக.).

அறுவு பெ. முழுமை. பொன்னெலாம் கொண்டு வாங்குமின் (திருவிளை. பு.59,6).

அறுவு' பெ. நீர்வற்றிய கால். (வட்.வ.)

அறுவு' பெ. கடைசிப்பகுதி. (ராட். அக.)

அறுவு

5

11

அறுவைவாணிகன்

அறுவை' பெ. 1. துணி. அறுவை தோயும் ஒரு பெருங்குடுமி (அகநா. 195,12). வெறியுற விரிந்த அறுவை மெல்லணை (நற்.40, 5). 2. ஆடை. நோக்கு நுழைகல்லா நுண்மைய பூக்கனிந்து அரவு உரியன்ன அறுவை (பொருந.83). தூ வெள் அறுவை (புறநா.286,5). அறுவை ஒளித்தான அயர அயரும் (சிலப். 17, 23). ஆகும் அறுவை அழுக்கேற்றி ஏற்றல் போல் (திருமந்.2422). நீல அறுவை விரித்துடுத்து (சேரமான். உலா 82). ஆயிர மடவார் சூழ்தர அறுவை யகன்கரை வைத்தனர் (செ. பாகவத. 9, 14, 7).

"

அறுவை' பெ. தோளிலிடும் உறி. சுவன்மேல் அறுவை யும் (சிலப். 10,98). உள்ளீட்டு அறுவையும் (மணிமே.

6, 93).

அறுவை" பெ.

(அறுக்கும் கருவிகளால் நிகழும்) அறுப்பு. இந்த நேரத்தில் அறுவை நடந்து கொண் டிருக்கும் (பே.வ.).

அறுவை* பெ. (இக்.) சலிப்பு. வீண் பேச்சு பெரிய அறுவையாய்ப் போய்விட்டது (முன்.).

அறுவை" பெ. சித்திரை என்னும் விண்மீன். அறுவை சித்திரைப் பெயரே (பிங். 252).

...

அறுவை' பெ. 1. அறுவைச் சிகிச்சை. (சாம்ப. அக.) 2. அறுத்தபின் அறுவாய்க்கிடும் மருந்து. (முன்.)

அறுவை பெ. ஏற்கஇயலாமை. இந்தப்படம் அறுவை யாக இருக்கிறது (பே.வ.).

அறுவைநூல் பெ.

அறுவை மருத்துவம் பற்றிய புத்

தகம். (செ. சொ. பேரக.)

அறுவைமருத்துவம்

பெ. உடலில் தோன்றும் கட்டி போன்றவற்றை அறுத்துக் குணப்படுத்தும் மருத்துவ முறை. (மருத். க. சொ.)

அறுவையர் பெ. ஆடை நெய்வோர். இருநிலம் தோயும் விரிநூல் அறுவையர் (பதிற்றுப். 34,3). வண்ண அறுவையர் வளந்திகழ் மறுகும் (மணிமே. 28,53). அந்நகரதனில் வாழ்வார் அறுவையர் குலத்து வந்தார் (பெரியபு. 67, 2).

அறுவைவாணிகன் பெ. ஆடை விற்பவன். மதுரை அறுவைவாணிகன் இளவேட்டனார் (அகநா. 124 ஆசிரியர் பெயா).