பக்கம்:பெருஞ்சொல்லகராதி.pdf/642

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அறுவைவீதி

அறுவைவீதி பெ. துணிக்கடைத்தெரு. நறுமடி செறிந்த அறுவை வீதியும் (சிலப். 14, 207).

அறை - தல் 4 வி. 1. பறை முதலியன கொட்டுதல். விழுக்கடிப்பு அறைந்த முழுக்குரல் முரசம் (புறநா. 366, 1). நாக்கடிப்பாக வாய்ப் பறை அறைந்தீர் (மணிமே. 25,51). நாதப் பறை அறைமின் (திருவாச. 46,1). ஆடியல் துடியும் சாற்றி அறைந்த பேர் ஓசை கேட்டு (பெரியபு. 10, 29). அல்லது நீங்கு மென்றே யுலகேழும் அறைந்திடுவாய் முரசே (பாரதி. தோத்திரம். 18,2). 2. ஒலித்தல், கூவுதல். செங்கண் இருங்குயில் அறையும் பொழுதே (ஐங். 346). மதத்து வண்டு அறையும் சோலை (தேவா. 4, 22 7). திண் முரசறையு மாக்கடல் காரென ஆர்த்தன (சீவக. 2168). அறைகழல் அரசர் (கலிங். 265). 3. சொல்லுதல். எல்லோருங்கேட்ப அறைந் தறைந்து (கலித். அறைவன் பழிப்

பினையே

102, 11).

(திருவாச. 6,46). கணியாது முழுது ணர்ந்த கடவுளென்று அறையுமே (சூளா.182). அறைந்த பதிகத்தமிழ் மாலை நம்பி சாத்த (பெரியபு. 37, 87). அறைந்தனர் அறிவில்லாமை (யசோதர. 72). அண்ணல் கருத்தை அறையுமென (மதுரைச் உலா 163). தொன்னூல் அறைந்த புகழ் வியாதமுனி (செ. பாகவத. 1 கடவுள். 3). அறைகின்ற சுருதியின் பொருளான வள்ளலே (அறப்பளீ . சத. 27). ஈசனென்று அறையும் முன்னமே அனைத்தும் எய்துமே (கருவைப்பதிற். அந். 77). அடியவர் அஞ் செழுத்தை அறையவும் அஞ்சியே (வசவபு.

திருக்கலி.20).

...

அறை - தல் 4 வி. 1. உதைத்தல், அடித்தல். அறைந்த கற்றூணிடை வந்தாய் (பாரதம். 5, 4, 43). நெட்டி முளை பாறையிலே வைத்து அறைந்தால் பாயுமோ (தெய்வச். விறலி. தூது 375). வலக்கன்னத்தில் அறைந் தால்...மறுகன்னத்தையும் காட்டு (விவிலி. மத்தேயு 5, 39).2. மோதுதல். வஞ்சரைக் கைக்கொண்டு எடுத்து அறைந்து உரப்புகும்ப உக்ர குஞ்சரத்தான் (கூளப்ப, காதல் 16). 3. செலுத்துதல், ஆணி முதலி யன அடித்தல். பசுமரத்து ஆணி அறைந்தாற் போல (திருவாச. 4, 65). நினைப்புடையிதயத் தாணி யறைந்ததும் (இரகு. இந்துமதி. 85). 4.நறுக்குதல். பொன் அறைந்தன்ன நுண்ணேர் அரிசி (மலைபடு. 440). 5. மண்ணெறிந்து கட்டுதல். மண்சுவர் நாலு படை அறைந்தேன் (பே.வ.).

அறை3 பெ. 1.ஒலி, ஓசை. அறைபடுமாலைகள் (கந்தபு. திருநாட்டுச். 31). 2. சொல். நாக்கு ஆடு நாட்

5

12

அறை 10

என

டறை போக்கும் என (ஏலாதி 79). 3. மொழி. ஏழையேன் அறைகள் தொன்னூலில் தேன் இனிக்கும் (திருப்பா. 10, 6). 4. விடை. சொல்லுவார் தமக்கறையோ சொல்லொணாதே (சி. சி. 8,14). 5. சொல்லுகை. அறையெனத் திரியும் ஆய்பொற் பூமியில் (வக. 2180).

அறை பெ. வெட்டுகை. அறையுறுகரும்பின் தீஞ்சேற்றி யாணர் (பதிற்றுப். 75, 6). அறையுற்று ஆலைக்கு அலமருந்தீங்கழைக் கரும்பே (மலைபடு. 118). அறை பெ. துண்டம் (த. த.அக.)

அறை பெ. அடி. அறையொன்று கொண்டான் இரண்டறை மிகுதியென்பான் (சேதுபு. வேதாள. 43).

அறை பெ. மோதுகை. அறை...மோதல் (சூடா. நி.

றகர. 10).

அறை பெ.

அறை பெ. ஞாண்

அலை. அறை...திரை (முன்.).

மடப்பிள்ளைகள்

...

பாயி. 9).

1. உள்வீடு, வீட்டின் சிறுதடுப்பு. திண் எழினி வாங்கிய ஈரறைப் பள்ளியுள் (முல்லைப். 64). இருட்டறையின் மலடு கறந்து எய்த் தவாறே (தேவா. 4,5,6). அறையும் ஆடரங்கும் கீறிடில் (கம்பரா. இருட்டறையின் உள்ளே (குறள். 913 மணக்). 2. வீடு, தங்குமிடம். நீற்றறையின் உள்ளிருத்தி (பெரியபு. 21,96). ஐவர் மாழ்க அரக்கறை எரித்தல் கேளா (கூர்மபு. பூருவ. 30, 111). வெய்யவன் தொடு சிகையளவில் அறை விளங்கும் (குசே. 354). 3. சுரங்கம், குகை. பொய்யறைவாய்ப் புகப் பெய்த மல்லர் (பெரியதி. 2, 5, 5). தெண்பளிக்கு அறையும் தேடினார் (கம்பரா. 4, 14, 13). 4. மகப்பேற்றுக் குரிய அறை. அவள் எத்தனையோ அறை காத்தவள் (பே.வ.). 5. பாத்தி. குறையறை வாரா நிவப் பின் (மலைபடு. 118). அறைமடி கரும்பின் கண் ணிடை யன்ன (குறுந். 180). 6. வகுத்த இடம். குறித்த கோலறையில் ஆங்கோர் கூடைமண் இட்டாயில்லை (திருவால. பு. 30,27). 7. சதுரங்கம் முதலியவற்றின் கட்டம். (செ. ப. அக.) 8. பெட்டி யின் உட்பகுதி. அஞ்சறைப் பெட்டி (பே.வ.). அறை 10 பெ. 1. குன்றம், பாறை. மோரியர், பொன் புனை திகிரி திரிதரக் குறைத்த அறையிறந்து அகன் றனர் (அகநா. 69, 10-12). அறையும் பொறையும் மணந்த தலைய (புறநா. 118,1). கானமஞ்ஞை அறையீன் முட்டை (குறுந். 38). அறை உரல் ஐவனம் இடித்த... வாசவல் (சீவக. 1562). அறை