பக்கம்:பெருஞ்சொல்லகராதி.pdf/644

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அறைசெய்-தல்

கூறவே (தக்க. 460). அறைகூறி அமர்செய்யும் இளையோனே (திருப்பு. 123). 2. வலிய அழைத் தல். வாலி கையாலே நெருக்குண்டு போனவர் இப்போது இப்படித் தெளிந்துவந்து அறைகூறுகிற து (திருவாய். 1, 4, 9 ஈடு).

அறைசெய்-தல்

1 வி.

(சாம்ப. அக.)

அறுத்துத்துண்டமாக்குதல்.

அறைத்தி பெ. கடுக்காய் மரம். (மரஇன. தொ.)

அறைத்தொழில் பெ. வஞ்சகச் செயல். அறைத் தொழிலார்க்கும் செல்லா அருமிளை

என்றான் (சீவக. 1142).

புகுமின்

அறைநர் பெ. அறுப்பவர். அறைநர் கரும்பிற்

கொண்டதேனும் (புறநா. 42, 14-15).

அறைநன்1 பெ. சொல்லுவோன். (த. த. அக.)

அறைநன்' பெ. அடிப்பவன். (முன்.)

அறைநீலி பெ. கொத்தமல்லிச்செடி. (மரஇன. தொ.)

அறைப்பிள்ளை

பெ.

மகப்பேற்று

அறையை

விட்டு

வெளியே கொண்டு வரப்படாத குழந்தை. (செ.ப.

அக. அனு.)

அறைப்புரை பெ. அறைவீடு. அரங்கு பூட்டாம் அறைப்புரை பூட்டாம் (நாஞ். மரு. மான். 2, 3).

அறைபவனாதி

பெ.

வெண்காரவுள்ளி. (சாம்ப. அக.)

அறைபுகு-தல் 4 வி. /6 வி. சரணடைதல். சோணேசற்கு என்றும் அறை புகுந்தோம் (அருணகிரி. அந். 68). அறைபோ-தல் 4 வி / 5 வி. 1. உள்ளே வலிமை இல்லாதா குதல், கீழறுக்கப்படுதல். அழிவின்று அறைபோகா . தாகி (குறள். 764). அறிவு அறைபோகிய பொறியறு நெஞ்சத்து(சிலப். 20, 25). அறை போனது அன்றிங்கு அதன் வழியேயென் அணிவளையும் (அம்பி. கோ. 513). 2. கெட்டழிதல். நெஞ்சு அறைபோகிய அறி வினேற்கு (அகநா. 26,26). நெஞ்சு அவன்பால் அறைபோயது அறிந்திலமே (கப்பற்கோ.381). வஞ்சித்தல். அறைபோம் இவன்

என

3.

ஆருணி யுரைத்த ... விழுப்பொருள் (பெருங். 4, 1,7). அறைபோக்கு பெ. 1. ஒதுங்குகை. அறைபோக்கொழி யக் குலமுழுதும் வளைஇ (ஞானா. 53, 14).2. கெட்டழிகை. கள்ளுண்டல் காமமென்ப கருத்தறை போக்குச் செய்வது (திருவிளை. பு. 26,26).3. அற்றுப் போகை. (த. த. அக.)

அறைமுறையிடு-தல் 6 வி. குறை தெரிவித்தல். (வின்.)

514

அறைவீட்டுநோய்

அறையிடு-தல் 6 வி. போருக்கழைத்தல், அறைகூறுதல். மாரிகையேறி அறையிடுங் காலத்தும் (நம். திருவிருத்.

19).

அறையினாம் பெ. கோயில் அறைகாரனுக்குவிட்ட மானி யம். (ரா. வட். அக.)

அறையுண்(ணு)1-தல் 7 வி. அடிக்கப்படுதல். (த.த.அக.) அறையுண்(ணு)2- தல் 7 வி. அறுக்கப்படுதல். (முன்.) அறையோ இ. சொ. 1. அறைகூவல். நிறையான் மிகு கலா நேரிழையாரைச்சிறையான் அகப்படுத்தல் ஆகா அறையோ (பழமொ. நா. 30). அறையோ என் நின்று அதிரும் கருங்கடல் அறையோவறை என்றறை கூறுவாரைப் போல இராநின்றது (நம். திருவிருத். 62 பெரியவாச்.). 2. ஆணைமொழி. சாற்று கின்றேன் அறையோ சிவயோகத்தை (திருமந். 2988). சிவனெனும் ஓசை அல்லது அறையோ (தேவா. 4, 8, 1). 3. வெற்றிக்களிப்புப் பற்றிவரும் குறிப்புச்சொல். (த.த.அக.) 4. வஞ்சின மொழி. (முன்.)

வரை

அறை

அறையோலை பெ. யாவரும் அறிவதற்காக யறுப்புச் செய்யும் ஓலை. பெருநான்கெல்லை ஓலை செய்த அறைஓலைப்படி (தெ.இ.க.3,70). நாட்டார் விடுத்த அறையோலைப் படிக்கெல்லை (பல். செப். முப். 1, 32, 36). கல்லும் கள்ளியும் நாட்டி அறையோலை செய்து கொடுத்து (சாசன

மாலை ப. 5).

அறைவகு-த்தல் 11 வி. புரையோடுதல். (செ.ப. அக.அனு.) அறைவாசல்! பெ. கோயில் சரக்கறை. (வட். வ.) அறைவாசல்' பெ. அறையின் வாயில். (த. த.அக.)

அறைவாசல்மூடி பெ. தீக்கோட் காலத்தில் உள்வீட்டு வாசலை அடைத்து வைக்க உதவும் சதுரக்குதிர். (திருநெல்.வ.)

அறைவாடிக்கிளி பெ. பொன்னாங் காய். (சாம்ப. அக.) அறைவாய் பெ. கணவாய். உலக இடைகழி அறை

வாய் (புறநா. 175.8).

அறைவீட்டுக்காரி பெ. மகப்பேறு அடைந்த பெண்.

(சாம்ப. அக.)

அறைவீட்டுக்குழந்தை பெ. 1. அறைக்குழந்தை. (செ. சொ. பேரக.) 2. பத்து பதினைந்து நாட்பட்ட குழவி. (சாம்ப. அக.)

அறைவீட்டுநோய் பெ. பிள்ளைபெற்ற அறையினின்று தாய் வெளியேறு முன்பே தோன்றும் இசிவு, காய்ச்சல், நாட்பட்டவலி முதலிய நோய்கள். (முன்.)