பக்கம்:பெருஞ்சொல்லகராதி.pdf/647

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அன்மையார்

000

தன்மை சுட்டலும் உரித்தென மொழிப அன்மைக் கிளவி வேறிடத்தான (தொல். சொல். 25 சேனா.). என் னைக்கு ஊர் இஃது அன்மையானும் (புறநா.85,1). ஊஉன் அன்மையின் உண்ணாது (மலைபடு. 148). இறும்பூது அன்மை நற்கு அறிந்தேம் (பரிபா. 4, 4). நடுவன்மை நாணுபவர் (குறள்.172). 2. ஒன்றற்கு ஏற்றதாக இல்லாமை. நோய் அளவு உயிர் செகுக்கல்லா மதுகைத்து அன்மையின் (புறநா. 245, 2). நினக்கு மருந்தாகிய யான் இனி இவட்கு மருந்து அன்மை (ஐங். 59). 3. எதிர்மறைக் குறிப்பு வினையடி. பொழுதும் ஆறும் புரைவது அன்மை யின் (தொல்.பொ. 109, 31 இளம்.). அறஞ்சொல் லும் நெஞ்சத்தான் அன்மை (குறள். 185). ஒருகருமம் நோக்கிப் பெயர்ந்தன அன்மையின் (இறை. அக.34 உரை). 4. தீமை. அன்மை கடியும் தவவலியால் (சேதுபு.முத்தீர். 8).

அன்மையார் பெ. (தம் சமயத்தவரல்லாதவர்) பிற சமயக் கோட்பாடுடையவர். அன்மையாரவர் தாந் தம் அறிந்தன உரைத்த பொய்யாக்கி (நீல. 161).

அன்மொழி பெ. (இலக்.) அன்மொழித் தொகை. ஐந்தொகை மொழிமேல் பிற தொகல் அன்மொழி (நன். 369).

அன்மொழித்தொகை டெ. (இலக்.) பண்பு உம்மை வேற் றுமை முதலிய தொகைகளின் நேர் பொருளுக்கு மேல் பிறிது பொருள் தரும் வகையில் இவை அல்லாத சொல் தொக்கு நிற்பது. பண்புதொக வரூஉங் கிளவியானும்... ஈற்று நின்று இயலும் அன்மொழித் தொகையே (தொல். சொல். 418 சேனா.). கல்லார்ப் பிணிக்கும் கடுங்கோல் அது வல்லது இல்லை நிலக்குப் பொறை என்ற வழிக்கடுங்கோல் என்பது அஃதுடைய அரசர்க்குப் பெயராகி வருதலின் அன்மொழித் தொகை ஆயிற்று (தொல். சொல். 413 தெய்வச்.). அன் மொழித்தொகையும் ஒரு சொல் போலக் கொள்ளப் பட்டு (இலக். வி. 54 உரை).

அன்யாபதேசம்' பெ. உள்ளுறையல்லாத வெளிப்படைப் பொருள். தமக்குப் பகவத் விடயத்தில் உண்டான பிராவண்ய அதிசயத்தை அன்யாபதேசத்தாலே பேசுகிறார் (திருவாய். 6,5,ஈடு, பிர.).

அன்யாபதேசம் 2 பெ. மறைமுகமாகப் பிறரைக் குறை கூறும் சொல். (செ. ப. அக.)

517

அன்றாடகம்

அன்யாயம் (அநியாயம்!, அன்னியாயம், அனியாயம்) பெ. முறைமையின்மை. அன்யாயமாய் நாளையும் கழித்தாரே (நந்த. கீர்த்.ப.105).

அன்வயத்தார் பெ. சுற்றத்தார். நாங்களும் எங்கள் அன்வயத்தாரும் (தெ.இ.க.

ப. 325).

அன்வயம் (அந்நுவயம், அன்னுவயம்) பெ. 1.குலம், கால்வழி. நீ நின் அன்வயம் ஏதும் அறிந்திலை (கம்பரா. 6,25,35). அமிர்தகிரணன் அன்வயத் தில் ஆகண்டலனது அழிவகல (பாண்டி. செப். சின்ன. சிறிய. 1). 2. தொடர்பு, பொருத்தம். உரைத்த நல் உரைக்கு அன்வயம் இல்லை என்று அயிர்க்கின் றேன் அலேன் (கம்பரா. 6, 23, 92).

அன்வயி-த்தல் (அன்னுவயித்தல்) 11 வி. 1. பின் தொடர்தல். தொன்மையின் தொடர்ந்த வாய்மை அறத்தொடும் துறந்திலோரை அன்வயித்து (கம்பரா. 6, 3, 136). 2. (பெரும்பான்மையும்) செய்யுளில் ஒரு சொல்லை மற்றொன்றோடு வாக்கிய நிலை அல்லது பொருட்பொருத்த நிலை கருதி இணைத்தல். (சங். அக.) 3. ஒரு சொல் மற்றொன்றுடன் (வாக்கிய நிலையில்) இயைதல். (செ.ப.அக.)

தாய்வழி

அனவாதேயம் பெ. திருமணத்தின் பின்பு தந்தைவழி சுற்றத்தார் கணவன் குலத்தினர் முதலி யோரால் பெண்ணுக்குக் கொடுக்கப்படும் சீர்ப்பொருள். (முன்.)

அன்றமை பெ. காற்று. அன்றமை என்பது காற்றின் பெயரே (அக. நி. அம்முதல். 64).

அன்றன்றாடம் இ.சொ. அன்றன்றைக்கு. (இலங்.வ.)

அன்றன்றாடு வி. அ. ஒவ்வொருநாளும். அன்றன்றாடு பாடுகழிகிறதே பெரிதாயிருக்கின்றது. அதில் எப் படி மீத்து வைக்கமுடியும் (பே.வ.).

அன்றன்று பெ. அந்தந்த நாள். அன்றன்றைய. தொல்லை அன்றன்றைக்குப் போதும் (விவிலி. மத் தேயு 6, 34),

அன்றன்று கு. வி. அடுக்கி வந்த ஒன்றன் பாற்படர்க்கை எதிர்மறைக் குறிப்பு வினைமுற்று. (செ.சொ. பேரக.)

அன்றாடகம் (அன்றாடம்) வி. அ. நாள்தோறும்.

(செ.ப.அக.)