பக்கம்:பெருஞ்சொல்லகராதி.pdf/649

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அன்றில்"

பெடைகளை அணுகி (கந்தபு. நாட்டுச்.51). அன்றி லைப் போன்று என்னை அரைக் கணமேனும் பிரிந்தால் குன்றி மனஞ் சோர்வாள் (பாரதி. தேசியம்.

48, 4).

அன்றில்' பெ. மயில். (சம். அக./செ. ப. அக. அனு.)

அன்றில்' பெ. மூல நட்சத்திரம்.

கொக்கே தேட் கடை அன்றில் ... மூலம் மூலம் (பிங்.257).

...

அன்றில்' பெ. (இசை) 'ம' என்னும் சுரம், மத்திமம்.

(சேந். செந்.)

கல்பக

அன்றில்" பெ. கிரவுஞ்ச மலை. அன் றில் வேல் எறி வேள் துணைவன் (கல்வளை அந். 1).

அன்றில்வெற்பட்டோன்1 பெ. (அன்றில் + வெற்பு + அட் டோன்) (கிரவுஞ்சகிரியை அழித்தவனாகிய) முரு கன். அன்றில் வெற்பட்டோன் ... சுப்பிரமணியன் (நாம.நி.33 உரை).

அன்றில்வெற்பட்டோன்2

பெ. அகத்தியன். அன்றில் வெற்பட்டோன் அகத்தியன் (முன். 121 உரை).

...

அன்றிலான் பெ. கிரௌஞ்சப் பறவையாய் வந்த ஓர் அசுரன். கார்நின்ற அன்றிலானைக் கதை கொடு துகைத்தாய் (திருநெல்பு. காசிபேசுர. 32).

அன்றிற்கல் பெ. கிரவுஞ்ச மலை. அன்றிற்கல் பக வேல் எறி வேள் (கல்வளையந்.1).

அன்றிற்காளத்தான் பெ. (அன்றிலைத் தமது சின்ன மாகவுடைய) காமதேவன். அன்றிற்காளத்தான்

...

சோலைப் படைவீட்டான் (நாம.நி.58 உரை).

அன்றிற்றீவு பெ. கிரவுஞ்சத் தீவு. அன்றிற்றீவினில் உறைபவர் (கம்பரா. 6,29,13).

அன்றினர் (அன்றினவர், அன்றினார்) பெ. பகை வர். அன்றினர் பலருளர் (கம்பரா. 5, 9, 45). அன்றினர் புரங்கள் அழலிடையவிய (பட்டினத்துப். திருவிடை. மும்.16, 1). அன்றினரைப் பங்கம் பட வென்ற... தலைவர் (அம்பி. கோ. 537). அன்றினர் கள் ஓடும் திறல் கண்டதாளன் (பெருந். 1071). அன்றினர் கடிந்து சோரரை நீக்கி அறநெறியாக் கினன் (சான்றாண்மை-137).

5

19

அன்று2-தல்

அன்றினவர் (அன்றினர், அன்றினார்) பெ.

பகை

வர். அன்றினவர் புரம்மூன்றும் (தேவா. 6,88,4).

அன்றினார் (அன்றினர், அன்றினவர்) பெ. பகைவர். அன்றினார் வெந்து வீழவும் (முன். 4,89,10). அன்றினார் புரம் எரித்தார் அருளால் (பெரியபு. 37, 166). அன்றினார் புரம்சுடும் அடிகள் (கச்சி. காஞ்சி. திருக்கண். 178).

அன்று' சு. சொ. 1. (முன்னர் நடந்த நிகழ்ச்சியைச் சுட்டியுரைக்கும் சொல்) முந்தியநாள், (முன்னொரு நிகழ்ச்சி நடந்த நாள்) அந்நாள், (பண்டைக் காலத்தில்) முன்னோர்நாள். அன்று அவண் அசைஇ

080

...

அல்கி (மலைபடு. 158). சென்று அமர்கடந்து நின் ஆற்றல் தோற்றிய அன்றும் (புறநா. 99, 10-11. மணப்பறையாயின அன்று அவர்க்கு ஆங்கேபிணப் பறையாய் (நாலடி. 23). ஆலின் கீழ் அறம் நால் வர்க்கு அன்று உரைத்தான் (தேவா. 4,6,10). அன்று கருவரங்கத்துள் கிடந்து (இயற். முதல் திரு வந். 6). அன்று முதல் இன்று அறுதியா (திருவாய். 4, 1, 6). அஞ்சுவை அமுதம் அன்றளித்தானை (பெரியதி. 2, 3, 3). அன்றே என்றன் ஆவியும் உட லும் உடைமை எல்லாமும் கொண்டிலையோ (திருவாச. 33,7). அன்றுமுதல் புவி யாவும் அளிப் பாள் சீவல. கதை 107). கழுத்திற் கட்டும் நூல் வாங்கிடாது அன்று வேல்வாங்கி (கந்தரலங். 77). அடியால் உலகெல்லாம் அன்று அளந்துகொண்ட நெடியோன் (நூற்று.அந்.23). அன்று வன் செங் கல்லை அம்பொன் ஆக்கிய நாவலன் (சானந்த பு. பாயி. 7). அன்று நம்பி ஆரூரர்பாட்டு விருப் புறக் கேட்டனனே (தமிழரசி குற.19). நன்றாய தொழிலினை...அன்றே செய்வது வேண்டும் (குமண சரித். 118). 2. (செயல் நிகழும்) அப்பொழுது, அக் கணம். நின்றனெனாக அன்றே...வேர்புரை சிதாஅர் நீக்கி (புறநா. 392, 12-14). நன்றல்லது அன் றே மறப்பது நன்று (குறள். 108). மாவின் வித்து ஒன்று இட்டு அன்றே பழம் பழுப்பித்து (நந்திக்கலம். 64). வஞ்சனை செய்து எழுவான் அன்றே முடி வான் (கம்பரா. 6,17,80). அன்று இமய வெற் பினிடை நின்று வரும் அப் பேய் (கலிங். 220). 3. பின்பு. அன்றறிவாம் என்னாது அறம் செய்க (குறள். 36).

...

...

அன்று '-தல் 5வி. 1.பகைத்தல், மாறுபடுதல். சமண் சாக்கியர் அன்றி அங்கவர் சொன்ன சொல் (தேவா. 2,75,10). அன்றிய வாணன் ஆயிரம் தோளும் துணிய (பெரியதி. 4, 3,8). அன்றும் பகை அடர்க் கும் பரிமாவும் ( பட்டினத்துப். அந். 30). கொன்று