பக்கம்:பெருஞ்சொல்லகராதி.pdf/651

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அன்றைநாள்

அன்றைநாள் பெ. (குறிப்பிட்டுச் சொல்லும்) அந்த

நாள். (பே.வ.)

அன்றோ இ. சொ.

.

தேற்றப்பொருள் தரும் வினாச் சொல், அல்லவா. பெருக்கு அன்றோ வையை வரவு (பரிபா. 6, 70).சயம் அன்றோ வானவர்க்கு (திருவாச. 12, 4).

அன்ன

கு.வி. வினைமுற்று)

...

(அஃறிணைப் பன்மைக் குறிப்பு அத்தன்மையன. மாமரக் கிளவி யும் ஆவும் மாவும் அவற்று ஓர் அன்ன (தொல். எழுத். 232 இளம்.). தந்தையர்க்கு அருள் வந்தன வாற் புதல்வர்தம் மழலை என் வாய்ச்சொல்லும் அன்ன (புறநா. 92, 2-4).

அன்ன

பெ. அத்தன்மையன, அத்தகைய மூன்றும் உளப்படத் தொகைஇ அன்ன பிறவும் அவற் றொடு சிவணி (தொல்.சொல். 56 சேனா.). அன்னவோ இந் நன்னுதல் நிலை (நற். 109, 3). இனந்தோட கல நிலங்கண் வாட .. அன்னவாயின பழனந் தோறும் (பதிற்றுப். 19,16-19). அன்னவகை ஆட்டு அயர்ந்து (பரிபா. 10,96-97). அன்ன ஓர் வெகுளி' யன் (கம்பரா. 5,12,69).

...

கணை

...

அன்ன3 இ.சொ. 1. ஓர் உவமஉருபு. ஆறு கிடந் தன்ன அகல் நெடுந்தெருவில் (நெடுநல். 30). காலை அன்ன சீர்சால் வாய்மொழி (பதிற்றுப். 21, 4). பவழத் தன்ன செம்பூ (பரிபா. 14. 16). கொடிது யாழ்கோடு செவ்விதாங்கன்ன கொளல் (குறள். 279). நானிலம் புரக்கும் உரை சால் சிறப்பின் நெடியோன் அன்ன (சிலப். 22, 59- 60). மாவின் வடுவகிர் அன்ன கண் கண் (திருவாச. 9, 2). காவிரி நாடு அன்ன கழனிநாடு ஒரீஇ (கம்பரா. 2,12,1). நிலவு நூற்றன்ன பித்தை நெடுந்தவர் (கூர்மபு. பூருவ. பதிகம் 31). பைந்தேறல் துளக்கு அற ஒழுகி அன்ன யாழ் (செ. பாகவத. 1, 2, 14). 2. (முன்னர் ஒன்றின் தன்மையாக எதுவும் கூறப்படாதபோது) அந்த என்னும் பொருள் அன்ன வான் என்ன தரும் சுட்டு. பொரு

...

களிறு ஆட்டுவார்கள் அன்ன காலையில்

கதை 479).

...

(திருவிளை. பு. நகாச்சி. 76).

கணை ஓட்ட (சீவல

...

மாலும் அன்ன கணத்தின் வாளி

ஒன்று தொட்டதுவும் (கம்பன் பிள். 3,3).

...

அன்னக்கழுத்துநம்மாட்டி பெ. அழகிய குடுமியைக் கொண்ட கைப்பிடியுள்ள மண்வெட்டி. (தொ. வ.)

521

அன்னக்கொப்பு

அன்னக்களை பெ. பசியாலோ மிகுதியாக உண்ட தாலோ வரும் சோர்வு. (செ. ப. அக.)

அன்னக்காலன் பெ. அன்னபேதி என்னும் மருந்துச் சரக்கு. (போகர்நி. 21)

அன்னக்காவடி பெ. 1.நுகம்போன்ற தண்டின் இரு முனைகளிலும் உறியில் தொங்கும் கலங்களுடன் பிச்சை ஏற்பதற்குத் துறவிகள் தோளில் தாங்கிச் செல் லும் காவடி. (பே.வ.) 2.(பிச்சை எடுத்துப் பிழைக்கும் நிலைக்குரிய) வறியவன். அன்னக் காவடி பிச்சை என்று ஏங்கிடுவான் குரலும் (பாரதி. தனிப்பா. 3, 5). 3. அன்னக்காவடியால் சோறு பெற்றுப் பிச்சைக்காரருக்கு அளிப்பதற்காக ஏற்பட்ட கொடை. (செ.ப.அக. அனு.)

அன்னக்கிளி பெ. 1. அன்னத்தின் உருவமும் கிளியின் உருவமும் இணைத்துக் குழந்தையின் தொட்டிலில் அமைக்கும் பொம்மை. (நாட். வ.) 2. குழந்தையைச் செல்லமாக அழைக்கும் சொல். அன்னக்கிளியே சாய்ந் தாடு (மலைய.ப.259).

அன்னக்குருகு பெ. அன்னப்பறவை. கொம்பனை யாட்கு அன்னக்குருகு அன்றே ... ஊர்தி (ஆனந்த

வண்டு. 332-333).

அன்னக்கூர்மை பெ. கல்லுப்பு. (போகர் நி.21)

அன்னக்கொடி பெ.

உணவிடுவதற்கு அடையாளமாக

உயர்த்தப்படும் கொடி. அன்னக்கொடி நின்றங்கே வாவென்றழைக்குமாம் (சிறுத். கதை ப. 4).

அன்னக்கொடியான் பெ. அன்னப்பறவையுருவம் வரைந்த கொடியுடைய நம்மாழ்வார். தீவிசா மிடியால் வரு கொடிய பசியாற்ற நின்று அழைக்கும் அன்னக் கொடியான் (குருகூர். பவனி 8).

அன்னக்கொடியோன் பெ. (அன்னப்பறவைக் கொடி யுடைய) நான்முகன். சதுமறையோன் அன்னக் கொடியோன் (கயா. நி. 13).

...

அன்னக்கொண்டி பெ. அன்னவடிவாகச் செய்த பித் தளைப்பாத்திரம். (சென்னை கல். அறி. 22, 1920)

அன்னக்கொப்பு பெ. காதில் (மேல் விளிம்பில்) அணி யும் அணிகலன். செவியிலாண் டன்னக் கொப்பு (வருணா. குற.50).