பக்கம்:பெருஞ்சொல்லகராதி.pdf/656

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அன்னவூறல்

பிரமயாகச் .3).2. (அன்னத்தை ஊர்தியாக உடைய) கலைமகள். (கதிரை. அக.) 3. அன்னவாகனம். (முன்.)

அன்னவூறல் பெ. வடிகஞ்சி. (வின்.)

அன்னவெட்டி பெ. சோற்றை எடுத்துப் பரிமாற உதவும் உலோகக் கரண்டி. (பே.வ.)

அன்னவேதி

(al cir.)

(அன்னபேதி1) பெ. மருந்துச்சரக்கு.

அன்னவேதி (அன்னபேதி) பெ. ஒரு பூண்டு. (கதிரை.

அக.)

அன்னவேறு பெ. அன்னச்சேவல். அன்னவேறு உயர்த்த நான்மறை முனிவன் (குசே. 155).

அந்தக் காரி

அன்னளி-த்தல் 11 வி. விசாரித்தல். அந்தக் யத்தை அன்னளித்து வா (நாஞ்.வ.).

அன்னன்1 பெ. நான்முகன். அன்னனைச் சென்னி கொய் சோழீசர் (சோழீ. மல். கோ.43).

அன்னன் 2 கு.வி.

1. அப்படிப்பட்டவன். ஏமுற்றுக் கழிந்த மள்ளர்க்கு உமணர் வெரூஉந் துறை யன்னன்னே (புறநா. 84,6). புரம் மூன்றெய்த அன்னன் (தேவா. 5,4,5). 2.ஒத்தவன், போன்றவன். செருப்பிடைச் சிறுபரல் அன்னன் (புறநா. 257, 1). சேயிருந்தாமரைத் தெய்வம் அன்னர் என்று (சூளா. 62).

அன்னா

சு. சொ. 1. அங்கு என்னும் சுட்டுச்சொல். அன்னா வருகிறான் (திருநெல்.வ.). 2.ஒன்றைச் சுட்டிக்காட்டுகையில் சேய்மையில் உள்ளதைக் காட்டும் சொல். அன்னா தெரிகிறது பார் பச்சை விளக்கு (முன்.).

அன்னாகாரம் பெ. உணவு. எவ்வித அன்னாகாரமு மில்லாமல் கிடக்கிறான் (நாட்.வ.).

அன்னாசயம் பெ. இரைப்பை, அன்னக்குடல், வயிறு. ஆசிய வகை:- அன்னாசயம், மலாசயம், சலாசயம் (நாம.நி.600 உரை).

...

அன்னாசி (அன்னசி', அன்னாசு, அனாசி1) பெ. 1. பறங்கித்தாழை. (பச்சிலை. அக.) 2. கற்றாழை போன்ற இலையுடைய செடிதரும் செதில் போன்ற

526

அன்னார்3

தோலும் மிக்க நறுமணமும் சுவையுமுடைய பழம். (குண. 1 ப.39)

அன்னாசி 2

பெ. சிறுமரவகை. (மரஇன. தொ.)

அன்னாசு 1 .ெ பெருஞ்சீரகம். (செ.ப. அக . அனு.)

அன்னாசு (அன்னசி, அன்னாசி', அனாசி') பெ. 2 1. பறங்கித்தாழை. (கதிரை. அக.) 2. அன்னாசிப் பழம். (பே. வ.)

அன்னாசு 3

பெ. ஒருவகை மரம். (மரஇன. தொ.) அன்னாதரம் பெ. உணவில் விருப்பு. அன்னாதரம் போய்த்தவஞ் செய்து (ஞானவா. உபசாந்தி. சுரகு. 35).

அன்னாபிடேகம் பெ. இறைவனுக்கு ஐப்பசிப் பௌர்ணமி யில் சோற்றால் செய்யும் திருமுழுக்கு. (கோயில் வ.)

அன்னாய் பெ. 1. அத்தன்மையுடையை

என்னும் பொருள்படும் அன்னை என்னும் முன்னிலை ஒருமைக் குறிப்பு வினைப்பெயரின் விளி ஏற்ற வடிவம். அன் னாய் நின்னொடு முன்னிலை எவனோ (மதுரைக். 206 அன்னாய் - அத்தன்மையுடையாய். நச்.). 2. ஒப்பாய் என்னும் பொருள்படும் அன்னை என்னும் முன்னிலை ஒருமைக்குறிப்பு வினைப்பெயரின் விளி ஏற்ற வடிவம். கூடல் இழந்தேன் கொடி அன்னாய் (முத்தொள்.

99).

அன்னாய்' (அனாய்) பெ. அன்னை (தாய்) என்னும் சொல்லின் விளியேற்ற வடிவம். அன்னாய் வாழி (குறிஞ்சிப். 1).விருப்பமுற்று அன்னாய் என்றும் மிழற்றுமா கேட்கப்பெற்ற (செ. பாகவத. 10, 17, 60).

அன்னய் இ. சொ. ஓர் அசைநிலை. (சி.சி. பர. சௌத்,

LDMI. 8)

அன்னார்1 பெ. கல்நார். (சங். அக.)

அன்னார் (அனார்) பெ. ஒத்தவர்.

உருள்பெருந்

தேர்க்கு அச்சாணி அன்னார் உடைத்து (குறள். 667). மணிமிசை நின்றமறைச்சிறு போதகம் அன்னாரும் (பெரியபு. 28,84). கொம்பன்னார் காமம் (முத்தொள். 54). அழல்சேர்ந்த மெழுகன்னார் (திருவாச. 5, 88).

அன்னார் சு. பெ. 1.அவர். அன்னார் உதிரத்துள் அழுந்துதலால் (கம்பரா. 6, 26, 36). 2.மரியாதைப் பன்மையில் சுட்டப்பெறும் ஒருவர். அன்னாருக்கு வயது எழுபது (செய்தி. வ).