பக்கம்:பெருஞ்சொல்லகராதி.pdf/657

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அன்னாலத்தி

அன்னாலத்தி (அன்னாலாத்தி) பெ. 1. சோறுகொண்டு அமைத்த விளக்கை ஏற்றித் திருட்டி கழிக்கச் சுற்றும் ஆலத்தி. (நாட். வ.) 2. தெய்வம் மணமக்கள் இவர்க ளின் முன் சுற்றும் மஞ்சள் கலந்த சோற்றுருண்டை. (செ. ப. அக, அனு.)

அன்னாலாத்தி (அன்னாலத்தி) பெ. 1. சோறுகொண்டு அமைத்த விளக்கை ஏற்றித் திருட்டி கழிக்கச் சுற்றும் ஆலத்தி. (நாட். வ.) 2. தெய்வம் மணமக்கள் இவர்க ளின் முன் சுற்றும் மஞ்சள் கலந்த சோற்றுருண்டை. (செ. ப. அக. அனு.)

அன்னான்! பெ. போன்றவன். கொல் களிறு அன் னான் (ஐந்.எழு. 42). பிறந்தனன் பேரரிக் குருளை அன்னான் (பெரியபு. திருநகரச்சி. 17).

...

அன்னான் 2 சு. பெ. அவன். அன்னானொடு போயின தானை அளந்துகூற என்னால் அரிது (கம்பரா. 6, 18, 24), அன்னான் நகை செய்தது காண்டலும் (கந்தபு. 4, 12, 158). அன்னான் குமரன் கருப்புர பாண்டியன் (திருவிளை. பு. 62,3).

அன்னி பெ. (திதியன் என்பானின் காவல் மரத்தை வெட்டிய) சங்ககாலக் குறுநிலமன்னன் ஒருவன். பெருஞ்சீர் அன்னி குறுக்கைப் பறந்தலைத் திதியன் தொன்னிலை முழுமுதல் துமிய (அகநா. 145, 11-12).

அன்னிமிஞிலி பெ. சங்ககாலக் குறுநிலமன்னன் அன்னி என்பவனின் மகள். சினம் மாறிய அன்னிமிஞிலி போல (முன்.262,11-12).

அன்னியக்குடி பெ. புறக்குடி. (செ.ப.அக.)

அன்னியகம் பெ. பெ. இருவாட்சி. (சாம்ப. அக.)

அன்னியகுணசகனம் பெ. பிறர் குணத்தில் பொறாமை யின்றியும், பிறர்குற்றத்தில் வெறுப்பின்றியும் இருக் கை. (யாழ். அக.)

அன்னியச்செலாவணி

(அந்நியச்செலாவணி)

பெ.

ஏற்றுமதி மூலம் கிடைக்கும் வெளிநாட்டுப்பணம்.

(அலுவலக வ.)

அன்னியசாதி பெ. வேறுவகைப்பட்ட இனத்தைச் சேர்ந்த பொருள். அன்னியசாதியும் தன் சாதியும் அகன்று (சி. சி. சுப.10).

527

அன்னியபரன்

அன்னியதரம் பெ. இரண்டிலொன்று.

(செ.ப.அக.)

அன்னியதராசித்தம் (அன்னியதாசித்தம்) பெ. (தருக் கம்) ஒருவனால் (வாதி) உள்ளதாக ஏற்கப்பட்டதும், மற்றொருவனால் (எதிரி) உள்ளதாகக் கொள்ளப் படாததும் ஆன பொருளை ஏதுவாகக் கூறும் போலி. (அனுமான. ப.23)

அன்னியதா வி. அ. வேறாக. (செ.ப. அக. அனு.)

அன்னியதாசித்தம் (அன்னியதராசித்தம்) பெ. (தருக் கம்) ஒருவனால் (வாதி) உள்ளதாக ஏற்கப்பட்டதும், மற்றொருவனால் (எதிரி) உள்ளதாகக் கொள்ளப்படா ததும் ஆன பொருளை ஏதுவாகக் கூறும் போலி. (அனுமான.ப.23) அன்னியதாசித்தமாறாய் நின் றாற்கு உன்னிய ஏது அன்றாய் ஒழிதல் (மணிமே.

29, 198-199).

அன்னியதாசித்தி பெ. பிறர் கூறும் காரணம் கொண்டு எதிர்வழக்காடுபவனின் காரியத்தை மறுத்தல். (கதிரை.

அக.)

அன்னியதாஞானம் பெ. ஒன்றை வேறொன்றாய் அறி யும் பிழைபட்ட அறிவு. அன்னியதாஞானம் விபரீத ஞானம் என்கிற இவை வாசனையோடே போம் படியாக (திருவாய். 1, 1, 1 ஈடு). ஒன்றை ஒன்றாகக் கருதுதலே அன்னியதாஞானமெனில் (சிவப்பிர.2,

2 உரை).

அன்னியநாத்தி பெ. வேறன்மை. அன்னியநாத்தியை உணர்த்துமாயிட்டு (சி. போ. 2,1).

அன்னியநாமகரணம் பெ. பிறர் பெயரை ஒருவர் சூட்டிக் கொள்கை. அன்னியநாமகரணத்தால் விலை கொண்டு அனுபவிக்கிற (தெ.இ.க.4,226).

அன்னியநாமம் பெ. பிறர் ஒருவரின் பெயர்கொண்டு செய்யும் செயல். திருச்சிற்றம்பலமுடையான் பேரில் அன்னியநாமத்து விலைகொண்டு (முன். 8, 716).

அன்னியபரம் பெ. வேறொன்றில் ஈடுபடுவது, வேறொன் றைப் பற்றியது. புறம்பே நெஞ்சு அன்னிய பரமா யிருக்கை (பெரியதி. 2, 6, 5 வியாக்.).

அன்னியபரன் பெ. வேறோரிடத்து மனம் பற்றியவன். அன்னியபரனாய் இருக்கக்கூடும் என்று நினைத்து (திருவாய். 6, 1, 1 பன்னீ.).