பக்கம்:பெருஞ்சொல்லகராதி.pdf/659

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அன்னுவயம்

1.

வை அன்னு

அன்னுவயம் (அந்நுவயம், (அந்நுவயம், அன்வயம்) பெ. (இரண்டன்) தொடர்பு, சேர்க்கை. வயம் இன்றாயிருந்தும் (மணிமே. 27, 30). வண்டும் தேனும் உண்ட என்றது அன்னுவயம் (சீவக. 897 நச்.). 2. காரண காரியங்களின் முறையான தொடர்பு. புகையால் அனல் உண்டு அடுக்களை போல் என்னப் புகறல் அன்னுவயம் (சி. சி. அளவை.11).3. சாதன சாத்தியங்களின் நீங்காத் தொடர்பு. (செ. ப. அக.) 4. (பெரும்பான்மையும்) செய்யுளில் சொற் களைப் பொருட் பொருத்தமறிந்து கொண்டுகூட்டுகை. (வேதா.சூ. 8) 5. குலம், கால்வழி. சாவாமூவாப் பேராடாகக் கைக்கொண்டு என் மக்கள் அன்னு வயம் உள்ளதனையும் நித்தம் உழக்கு நெய் இக் கோயிலில் (தெ.இ.க. 14, 230).

...

அன்னுவயம்பண்ணு-தல் 5 வி. பொருத்தமுறச் சொற் களைக் கொண்டுகூட்டுதல். (செ.ப.அக.)

அன்னுவயவனுமானம் பெ. இரண்டும் ஒன்றாக நிகழ்வ தால் கொள்ளுகிற கருதல் அளவை. (செ. ப. அக.

அனு.)

அன்னுவயவிலக்கணம்

பெ.

அடைமொழி, அடை யெடுப்பது, எழுவாய், செயப்படுபொருள், பயனிலை என் னும் ஐந்து கூறுகள் கொண்ட இலக்கணம். (ராட். அக.)

அன்னுவயி-த்தல் (அன்வயித்தல்) 11 வி. 1. பின்பற்று தல். (செ. ப. அக.) 2. செய்யுள் தொடரைப் பொருட் பொருத்தமுற ஒழுங்கு படுத்துதல். (முன்.)

அன்னுழி வி. அ. அப்பொழுது. அன்னுழி உமையவள் அகத்துளோர் செயல் உன்னினள் (கந்தபு. 1, 2, 1).

அன்னுழை வி.அ. அவ்விடம். மன்னும் அன்னுழை போய பின்னர் (திருவால. பு. 18,10).

அன்னெறி பெ. (அல் + நெறி) (நெறி அல்லா நெறி) கொலை வழி. உயிரை வதைத்தவனும் அன் னெறியே சமைத்தவனும் (தண்டலை. சத. 27).

...

...

அன்னே பெ. அன்னை என்னும் சொல் விளி ஏற்ற வடிவம். மன்னே மாமணியே அன்னே உன்னை யல்லால் இனி யாரை நினைக்கேனே (தேவா. 7, 24, 1). நாதப் பறையினர் அன்னே என்னும் (திருவாச. 17,1). 17, 1). அன்னே தேனே ஆரமிர்தே என்று. அடி போற்றி (கம்பரா. 1, 10, 30).

பெ. சொ . அ.1-34

.

5

29

...

அன்னை+

அன்னே' இ. சொ. அச்சவுணர்ச்சி வெளிப்படுத்தும் ஒரு குறிப்புச்சொல். வஞ்சமகள் துஞ்ச வாய் வைத்த பிரானே அன்னே! உன்னை அறிந்துகொண் டேன் (பெரியாழ். தி. 3, 1, 1).

அன்னே' வி. வி. அ. அப்பொழுதே. அன்றும் அன்னே செய்க (பழம்பாடல்).

அன்னேயோ இ. சொ. துன்பத்தை வெளியிடும் அரற்றுச் சொல். அன்னேயோ அன்னேயோ ஆ கொடியேற்கு அடுத்தவாறு (கம்பரா. 6, 36 236).

...

அன்னை1 (அனை) பெ. 1. தாய். அன்னை காக்கும் நலம் (நற். 23,4). நம்முறு துயரம் நோக்கி அன்னை (ஐங். 241). அன்னை ஓம்பிய ஆய் நலம் (குறுந். 223). அன்னை அறியினும் அறிக (அகநா. 110,1). அன்னை சொல் நீராக நீளும் இந்நோய் (குறள்.1147). வதுவை பெறுக என்றாள் அன்னை (முத்தொள்.97). அன்னையையும் அத்தனையும் அன்றே நீத்தாள் (தேவா. 6,25,7). அன்னையே அனைய அன்பின் அறவோர் (கம்பரா. 3, 1, 39). அன்னை ஒப்பாய் (திருவாச. 6, 16. அன்னை என்றது நற் றாயை (தொல். பொ. 112 இளம்.). அன்னையையும் அத்தனையும் பிரிந்து நின்னை அடைவாக (பெரியபு. 28, 475). அன்னையும் பிதாவும் முன்னறிதெய் வம் (கொன்றை. 1). அன்னை ஆக்கிய அமுதினை உண்ணாது (நாஞ். மரு. மான். 10, 157). 2. தெய் வத்தைத் தாயாகக் கூறும் கருத்தில் வழங்கும் சொல். இளமதியது வைத்த அன்னை (திருவாச. 26, 3). அன்னை தெய்வானையே கேளுங்கம்மா (மலைய.ப. 300). 3. உமை. பவானி எமதன்னை புண்ணிய முதல்வி பெயரே (பிங். 107). என்னன்னை சத்தி (கயா. நி. 7). அன்னையே என்பன் ஓடிவந்தே (அபி. அந்.32). 4. திருமகள். திருவரங்கத்து எம்பிரான் நமது அன்னையொடும் (திருவரங்.கலம்.16).

...

அன்னை' பெ. முன்பிறந்தாள், தமக்கை. அன்னை மூத்தாள் முன்பிறந்தாள் பெயர் (பிங். 913).

...

அன்னை3 பெ. தோழி. அன்னை என்னை என்றலும் உளவே (தொல். பொ. 246 தலைவி தோழியை அன்னை என்றலும் - நச்.). அன்னாய் இவன் ஓர் இளமாணாக் கன் (குறுந். 33). அன்னை தாயும் மூத்தாளும் தோழியும் (பொதி.நி. 2, 170).

அன்னை + பெ. மற்றைய பெண்களைச் சிறப்பித்துக் கூறும் சொல். தூண்டா விளக்கு அனையாய் என் னையோ அன்னை சொல்லியதே (திருக்கோ. 244).