பக்கம்:பெருஞ்சொல்லகராதி.pdf/661

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அனங்கசாபம்

அனங்கசாபம் பெ. காமன் வில். புருவத்துக்கு உவமை இரண்டில்லை அனங்கசாபம் (கம்பரா.

வைக்கின்

4, 12, 55).

...

அனங்கத்தானம் பெ. காமன்

(பெருங்.3,17, 75-76).

தானம் புகுந்தவற் கண்டு

கோட்டம். அனங்கத்

கூப்பிய

கையினள்

அனங்கம்' (அநங்கம்) பெ. 1. உடல் இல்லாதது. அரனார் விழியால் அழிந்து அங்கம் அனங்கமான மரனாருடன் (பாரதம். 1, 7, 90). ஈசரிடம் சென்று அனங்கம் வந்தும் அறியாய் (திருவனந்தை விலா. 217). 2. (வடிவற்ற) ஆகாயம். (நாநார்த்த. 436) 3. காற்று. (சங். அக.) 4. உள்ளம். (நாநார்த்த.436) 5. அறிவு. (கதிரை. அக.)

அனங்கம் ' பெ. 1. மல்லிகை வகை. மாலதி அனங் கம் ... மல்லிகை (பிங். 2944). 2. இருவாட்சி. அனங் கம் இருவாட்சியாகும் ((LPGOT 2946).

அனங்கமாதா! பெ. அரக்கு. (கதிரை. அக.)

அனங்கமாதா' பெ. செம்பஞ்சு. (முன்.)

அனங்கவேள் பெ. மன்மதன். அனங்கவேள் தாதைக்கு எவரும் எதிரில்லை (இயற். நான்முகன்திருவந். 56). கரும்பின் சாபத்து அனங்கவேள் (கம்பரா. 1, 20,9).

...

...

அனங்கன் (அநங்கன்) பெ. 1. (உடலற்றவனாகிய) மன்மதன். உடம்பிழந்து அனங்கனாய மன்மதன் (தேவா. 2,98,8). தழலாப் பொறித்தாய் அனங் கனை (சேரமான். பொன். 81). அயனை அனங்கனை (திருவாச. 12, 4). அமிர்தன்னாளும் குன்றன் னானும் அனங்கனுக்கு இலக்கமாகி (சீவக. 188). மாரவேள் அங்கம் வெந்து அன்றுதொட்டு அனங்கனே ஆயினான் (கம்பரா. 1, 7, 1). கன் ஐம்படை தொடமுனிவார் (சூளா.460). அனங்கன் கொடுஞ் சமருக்கு அஞ்சி (மதுரைச். உலா 405). 2. (சைனம்) (அங்கமில்லாதவனாகிய) சித்தன். (சீவக. 674 உ. வே. சா. அடிக்குறிப்பு)

...

அனங்

அனங்காகமம் பெ. (அனங்க தேவனுக்குரிய சாத்திர நூல்) காமவின்பங் கூறும் நூல். அனங்காகமம் கட்டுரைக்கும் உள்ளாசை (மதுரை.கோ. 13).

அனங்கு பெ. மன்மதன். நஞ்சுண்டு அனங்கைக் காய்ந்த பிரான் (தேவா. 2, 45,5).

பெ. சொ. அ.1-34 அ

531

அனத்தியயனம்

அனங்கு' பெ.

மல்லிகை. மல்லிகை அனங்கும்

ஆகும் (ஆசி.நி.137).

அனசனநோன்பு பெ. பஞ்சமி உண்ணாவிரத நோன்பு.

தருமம் கேட்டு

(நாக.காவி.148)

அனசன நோன்பு கொண்டான்

அனசனம் பெ. (அன் + அசனம்) உண்ணாநோன்பு. ஆசனம் கொண்டு அண்ணல் அனசனத் தவம் அமர்ந்தான் (யசோதர.24). அனசனம் நோற்ற சந்தரநந்தி (திருநாதர்க்குன்றுக்கல்.). முப்பதுநாள் அனசனம் நோற்ற இளைய படாரர் நிசீதிகை (தெ.இ.க. 17, 261).

அனசனவிரதம் பெ. உண்ணாநோன்பு. (செ. ப . அக.) அனசூயம் பெ. (அன் + அசூயம்) எரிச்சலின்மை.

(கதிரை. அக.)

அனசூயை பெ. அத்திரி முனிவரின் கற்பிற்சிறந்த மனைவி. கற்பின் அனசூயை பணியால் (கம்பரா.3, 1,4). அருந்ததியுடன் அனசூயை ஆதியாம் திருந்து இழையார்கள் (சானந்த. பு. உற்பத்தி. 8).

அனசூயைமகன் பெ. சந்திரன். அனசூயைமகன் சந்திரன் பேராம் (நாம.நி.97).

GOD

அனட்சம் பெ. (அன் + அட்சம் ) (கண்ணில்லாத) குருடு. (கதிரை. அக.)

அனத்தம் 1 பெ. பயனற்றது. அனத்தமான அனத்தமான உள்ளந்

தான் (ஞானவா. உபசாந்தி. 11).

அனத்தம்' பெ. துன்பம், பொல்லாங்கு. அனத்தக் கட லுள் அழுந்தி (பெரியாழ். தி. 5, 3, 7). அவருக்கு அனத்தம் இழைப்பான் (கல்வளையந். 16 உரை).

அனத்தல் பெ. கற்கடகசிங்கி. (வாகட அக.)

அனத்தன் பெ. நான்முகன். விடையேறுவான் அனத் தன் வானநத்தன் வந்து துதிக்கும் (கடம்பர். உலா 41). அனத்தற்கு அருள் சிவனார் முதுகுன்றில் அணியிழையே (பழமலைக்கோ. 264).

அனத்தியயனம் பெ. (அன் + அத்தியயனம்) வேதம் முதலியன ஓதத் தகாத காலம். (செ. ப.அக.)